Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
குடியிருக்க நீ வர வேண்டும் - cover

குடியிருக்க நீ வர வேண்டும்

ரமணிசந்திரன்

Publisher: Publishdrive

  • 0
  • 0
  • 0

Summary

அந்தப் பெரிய நகைக்கடையைப் பார்த்ததும், திருமணப் பரிசாகத் தங்கைக்கு ஏதேனும் சிறப்பாக வாங்கிக் கொடுக்கலாமே என்று தோன்றிவிடச் சட்டென்று, சசாங்கன், அந்தக் கடையினுள் நுழைந்துவிட்டான்.மனதில் இருந்த உறுத்தல் முழுமையாக மறையாத நிலையில், அதை எப்படி ஈடு செய்வது என்று அதைப் பற்றியே ஆழ் மனது சிந்தித்துக்கொண்டே இருந்திருக்கும் போலும்! என்ன செய்யலாம்? எப்படிச் செய்யலாம் என்று அதே யோசனை!தொழில் விஷயத்தில் கூட, அவன் அப்படித்தான்.இவ்வளவுதான் என்று முடிக்கவும் மாட்டான்., பிறகு யோசிக்கலாம் என்று முழுதாக ஒதுக்கவும் மாட்டான். இன்னும் என்ன, எப்படிச் செய்வது என்று ஊடுபாவாக, உள்ளூர ஓர் இழை அவன் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். அது பற்றி அவ்வப்போது தோன்றும் சின்னச் சின்ன கருத்துக்களே , பின்னர் அவனுக்கு வெற்றியை ஈட்டித் தருவனவாகவும் அமையும்.அதுவும் இந்த ஆறேழு மாத காலமாகத் தங்கையின் மனதை, அவன் எப்படி வருத்தியிருக்கிறான்! என்ன காரணம் என்று புரியாமல், பாவம், அவள் எவ்வளவு வேதனைப் பட்டிருப்பாள்! கிட்டே வந்து, என்ன என்று கேட்கக் கூட விடாமல், முசுட்டு முகத்துடன் இருந்ததை நினைக்கையில், அவனுக்கு மிகவும் அவமானமாக இருந்தது! இத்தனைக்கும், சிரிப்பும் விளையாட்டுமாக, எப்படி இருக்கும் வீடு, அது!எப்படியோ, நல்ல வேளையாக அதற்கொரு முடிவு, தானாக வந்து சேர்ந்தது. இல்லையென்றால், இன்னும் எத்தனை காலம், சுவர்ணாவின் தவிப்பு நீடித்திருக்குமோ?பெயருக்கேற்றபடி தங்கமான குணம் படைத்த தங்கையின் துன்பம் தீரக் கடவுளாகப் பார்த்து, ஒரு தீர்வைக் காட்டினார்., அதைத் தொடர்ந்து, நல்ல விதமாக அவளது வேதனையும் தீர்ந்தது என்றாலும், இடைப்பட்டகாலத்தில் அவள் அனுபவித்த துன்பம், அனுபவித்ததுதானே? என்ன பிராயச் சித்தம் செய்தாலும், அதை ஈடுகட்ட முடியுமா?ஒருபோதும் முடியாது என்றாலும், சின்னச் சின்ன முயற்சிகளால்,செயல்களால் தங்கையின் மகிழ்ச்சியைக் கூட்ட, அவன் முயன்று கொண்டேதான் இருந்தான்.இப்போதும் அது போலத்தான்! சுவர்ணாவுக்குப் பிடித்த மாதிரியாக ஏதாவது செய்யலாமே என்று எண்ணித்தான், அவன் நகைகளைப் பார்வையிடத் தொடங்கினான்.ஆனால், உரிய விதமாக “ஃபோகஸ்” பண்ணிய விளக்கொளியில், பளபளவென்று அழகாக ஜொலித்த அந்த நகைகளில், சுவர்ணாவுக்குப் பொருத்தமானதாக ஒன்றைத் தேர்ந்தெடுக்குமுன், அவன் வியர்த்து, விறுவிறுத்துப் போனான்! இதமாகக் குளிர் பரவியிருந்த அந்த ஏசி அறையிலும்!திருமணம் நிச்சயமான பின், அவ்வப்போது, தங்கைக்கு நகை, துணிமணி வாங்கச் செல்லும்போது, கூட வருமாறு கூப்பிடும் தாயின் நினைவு வந்தது!ஒரே தங்கை., திருமணம் ஆகிப் போய்விட்டாலும், இது போலெல்லாம் அன்பு அண்ணனாக அவன் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதை மனதில் பதிய வைப்பதற்காகத் தாய் செய்யும் முயற்சி என்று, அப்போதெல்லாம் எண்ணிக்கொள்வான்.“அம்மா, ப்ளீஸ்! சுவிக் குட்டிக்கு உங்களை விட, நான் நன்றாகவே செய்வேன். காட்ப்ராமிஸ்! அதனால், நீங்கள் இப்படியெல்லாம் என்னைப் பழக்கிவிடத் தேவையே கிடையாது என்று நேரடியாகச் சொல்லியும் இருக்கிறான்.அதற்காக, அன்னையிடம் குட்டும் வாங்கியிருக்கிறான்.
Available since: 04/03/2025.
Print length: 114 pages.

Other books that might interest you

  • Asahaja - cover

    Asahaja

    Chandrakant Kusunur

    • 0
    • 0
    • 0
    Short story by Chandrakant Kusunur
    Show book
  • Jeenu Akaashada Aaremaneyo - cover

    Jeenu Akaashada Aaremaneyo

    Ksheerasagara

    • 0
    • 0
    • 0
    Jeenu Akashada Aaramaneyo wrriten by Ksheerasagara
    Show book
  • Sirappuranam Vilathathtukkantam - cover

    Sirappuranam Vilathathtukkantam

    Umaruppulavar

    • 0
    • 0
    • 0
    தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இசுலாமிய இலக்கியம் சீறாப் புராணம். இந்நூல் இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழ்மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம். இதனை இயற்றியவர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர். இந்நூலை முழுவதும் முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இயற்கை எய்திய காரணத்தால், இதன் தொடர்ச்சியாக சின்னசீறா என்னும் நூலினை பனி அகமது மரைக்காயர் படைத்துள்ளார். 
    கடவுள் வாழ்த்துப் படலம்; நாட்டுப் படலம்; தலைமுறைப் படலம்; நபியவதாரப் படலம்; அலிமா முலையூட்டுப் படலம்; இலாஞ்சனை தரித்த படலம்; புனல் விளையாட்டுப் படலம்; புகைறா கண்ட படலம்; பாதை போந்த படலம் ; சுரத்திற் புனலழைத்த படலம்; பாந்தள்வதைப் படலம்; நதிகடந்த படலம்;    புலிவசனித்த படலம்; பாந்தள் வசனித்த படலம்; இசுறாகாண் படலம்; கள்வரை நதிமறித்த படலம்; சாமு நகர் புக்க படலம் ; கரம் பொருத்து படலம்; ஊசாவைக் கண்ட படலம்; கதீசா கனவு கண்ட படலம்; மணம் பொருத்து படலம்; மணம்புரி படலம்; கஃபத்துல்லா வரலாற்றுப் படலம் என ரமணியின் இந்த ஒலி நூலில் விலாதத்துக் காண்டம் (பிறப்பியல் காண்டம்) 24 படலங்கள் உள்ளன.
    Show book
  • Natpu - cover

    Natpu

    Sivasankari

    • 0
    • 0
    • 0
    திருமதி. சிவசங்கரி அவர்களின் சிறுகதைத் தொகுப்பின் இரண்டாம் பாகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கதைகளும் முதல் தொகுப்பினைப் போன்று சுவாரஸ்யமாகவும் ஆவலைத்தூண்டும் வகையிலும் அமைந்துள்ளன. இத்தொகுப்பில் யதார்த்தமான நடையில் வாழ்வின் தினசரி நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டுகிறன. நாம் தினமும் சந்திக்கும் நிகழ்வுகளை நயம்பட வழங்குகியுள்ளார்.
    Show book
  • Ninth Thirumurai - cover

    Ninth Thirumurai

    Post Thevaram Poets

    • 0
    • 0
    • 0
    ஒன்பதாம் திருமுறை என்பது சைவத் திருமுறைகள் வைப்பினிலே திருமாளிகைத் தேவர் உட்பட 9 பேர் பாடிய பாடல்களை உள்ளடக்கிக்கொண்டுள்ளது. இதில் 303 பாடல்கள் அடங்கியுள்ளன..இத் திருமுறையிலுள்ள பாடல்கள் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என இரண்டு வகையாகப் பார்க்கப்படுகின்றன. 
    பதிகங்களும் பாடலாசிரியர்களும் பாடல்களும் 
    திருவிசைப்பா: 
    திருமாளிகைத் தேவர் - 45 
    சேந்தனார் - 47 
    கருவூர்த் தேவர் - 105 
    பூந்துருத்தி நம்பிகாடநம்பி - 12 
    கண்டராதித்தர் - 10 
    வேணாட்டடிகள் - 10 
    திருவாலியமுதனார் - 42 
    புருடோத்தம நம்பி - 22 
    சேதிராயர் 
    திருப்பல்லாண்டு: 
    சேந்தனார் - 10 
    திருமுறை வைப்புக்களில் மிக குறைவான பாடல்களை(301) உடையது இத் திருமுறையாகும். 
    கருவூர்த்தேவர் என்பவரே அதிகளவான பாடல்களை பாடியுள்ளார். 
    சேதிராசர், கண்டராதித்தர்,வேணாட்டடிகள் ஆகியோர் மிக குறைவான பாடல்களை பாடியுள்ளனர். 
    தஞ்சை பெரும்கோவில்,கங்கை கொண்ட சோழேச்சரம் ஆகிய பிற்கால சோழர் கட்டிய கோவில்கள் பற்றியும் பாடப்பட்ட பதிகம் இத் திருமுறையினுள் உள்ளது.
    Show book
  • நிலவே நின்னை சரண் அடைந்தேன் - Nilave Ninnai Saran Adainthen - cover

    நிலவே நின்னை சரண் அடைந்தேன் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    காதலில் யார் யாரிடம் சரணடைந்தார்கள் என்பது முக்கியமல்ல, இக்கதையின் கதாப்பாத்திரங்களான இளநிலா மற்றும் சரவணன் இருவரில், இளநிலா சரவணனிடம் சரணடைந்தாளா அல்லது சரவணன் இளநிலாவிடம் சரணடைந்தானா? 
    இருவரும் ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள காதலில் ஆழ்மனங்கள் ஒன்றுபட்டு சரணடைந்தனர். ஆழ்மனங்களால் ஒன்றிணைந்த காதலை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது. 
    Show book