தொடாத வாலிபம்
Suratha
Narrator Ramani
Publisher: Ramani Audio Books
Summary
சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 29 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர். முத்தமிழின் தன்மைகளான இயற்போக்கு, இசைப்போக்கு, நாடகப்போக்கு ஆகிய மூன்றினையும் தொடாத வாலிபம் என்ற நூலில் சுரதா அழகுற நடமாடவிட்டிருக்கிறார். நாடகப் போக்கினை உணர்த்தி நிற்கும் தொடாத வாலிபம் என்ற தலைப்பு சிறப்புப் பெற்று இ ந் நூல் முழுவதையுமே உணர்த்தி நிற்கும் தலைப்பாகக் காட்சியளிக்கிறது. கவிதைப் பகுதியும் கட்டுரைப் பகுதியும் நாடகப் பகுதியும் இயற்கை எழிலையும் தமிழார்வத்தையும் தமிழகப் பெருமையையும் சீர்திருத்த நோக்கத்தையும் பகுத்தறிவு நெறியினையும் உரிமை வேட்கையையும் படிப்போர் உள்ளத்தே கிளரும் தன்மையனவாக விளங்குகின்றன.
Duration: about 3 hours (03:17:14) Publishing date: 2023-04-30; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

