Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
ஆசை ஆசை ஆசை - cover

ஆசை ஆசை ஆசை

ரமணிசந்திரன்

Maison d'édition: Publishdrive

  • 0
  • 0
  • 0

Synopsis

இனிமையான நாதஸ்வர இசை! கம்பீரமும் குழைவுமாகக் கேட்பதற்கு மிகவும் அற்புதமாக இருந்தது!ஆனாலும் ஒரு குறை! ஓடிக் கொண்டிருந்தது, டேப்! பெரிய வித்வானின் வாசிப்புதான் என்றாலும், அந்தப் பெரிய திருமண மண்டபத்துக்கும், அதில் நடக்க இருக்கும் விழாவுக்கும், டேப்ரிகார்டருக்கும் சற்றும் ஒத்து வராதது போல, மதிவதனிக்குத் தோன்றியது!அதுவும் கொஞ்சம் விலை மலிவான ப்ளேயர்! அத்தை வீட்டில் விலை உயர்ந்ததும் இருக்கத்தான் செய்கிறது! ஆனால், மண்டபத்துக்கு அதைக் கொணர்ந்து திருட்டுப் போய்விட்டால்?அந்த ஒரு காரணத்துக்காகவே கொண்டு வரப்பட்டது, இது! அதற்காக, இது திருட்டுப் போனால் பரவாயில்லை என்பதல்ல!“அதன் மேல் ஒரு கண் வைத்துக்கொள், வதனிக் கண்ணு! திருமணமும் அதுவுமாக உருப்படியான ஒரு பொருள் தொலைந்து போனால் நல்லதில்லை! அதனால் தான் பார்த்துக்கொள் என்று உன்னைச் சொல்லுகிறேன்! உனக்குத் துணையாகத்தான், உன் சித்தி, மாமா, பெரியம்மா, அவர்கள் பிள்ளைகள் என்று பெரிய கூட்டமே வந்திருக்கிறார்களே! ஒரு கண் வைத்துக் கொள்ளும்படி, எல்லாரிடமும் சொல்லி வைத்துவிடு!” என்று சொல்லி விட்டுத்தான் அத்தை நகர்ந்தாள்.“எங்கள் அண்ணி கூப்பிட்டிருக்கிறார்கள். வராவிட்டால் தப்பாகி விடும். அதனால், குடும்பத்தோடு எல்லோருமே வந்துவிடுங்கள்” என்று மதியுடைய அன்னை சொல்லித்தான், அவள் வழி உறவினர் எல்லோரும், இந்த மாப்பிள்ளை அழைப்பும் பட்டுக் கட்டுவதுமான முந்தைய நாள் விழாவுக்கே வந்ததே!இப்போது, அதையுமே மட்டம் தட்டுவது போலப் பேசுவதா என்று, மதிவதனிக்குச் சற்றுக் கோபம்தான்! அத்தையின் பேச்சு எப்போதுமே, இப்படித்தான்! தரம் சற்றுக் குறைவுதான்இந்த டேப் ரிக்கார்டரைப் போல!கொஞ்சம் இரண்டாவது நிலையில் உள்ள நாயனம் என்றாலும், ஒத்தும், தவிலும், தாளமுமாக, அந்தக் கம்பீரத் தோற்றமே, திருமணத்தை அழுத்தத்துடன் முன் மொழிவது போல இருக்குமே!அதை விட்டு, இருந்திருந்து, இதில் போய்ப் பெரிதாகச் சிக்கனம் பிடிக்கிறார்களே, இந்த அத்தை! இதில் மட்டுமல்ல! அவர்களால் முடிந்த எல்லாவற்றிலும்!மதிவதனியுடைய தந்தைகூட, அவருடைய தங்கையும், மணப் பெண்ணான மோனி என்கிற மோகனாவுடைய தாயுமான சுந்தரியிடம் சொல்லிப் பார்த்தார்!“போங்கண்ணா! நானே பெரிய இடத்தில் பெண்ணைக் கொடுக்கிறோமே என்று, தங்கமும் வெள்ளியுமாகப் பெரும் செலவில் மாட்டிக் கொண்டு தவிக்கிறேன்! இந்த மண்டபத்துக்கே எவ்வளவு பணம்! உங்களிடம் பணம் இருந்தால், நல்லதாக ஒரு நாதசுர செட்டை நீங்களே ஏற்பாடு பண்ணுங்கள்! என்னால் ஆனது இவ்வளவுதான்!” என்று முடித்துவிட்டு, “எனக்கு எவ்வளவு வேலை கிடக்கிறது? உதவிக்கு ஒரு நாதி இல்லாமல் நான் பாடாய்ப் பட்டுக் கொண்டிருக்கிறேன்! என்னை நிறுத்தி வைத்துப் பேசுகிறீர்களே!” என்று குறைப்பட்டவாறே, அங்கிருந்து போய் விட்டாள்.உதவிக்கு ஒரு நாதி இல்லாமலா?வேர்த்து வடிய, இங்குமங்கும் ஓடி, மண்டபத்துக்கு முன்னதாக வந்துவிட்ட உறவினர்களை வரவேற்பதும், உணவு பானம் அளித்து உபசரிப்பதும், இடையிடையே சுந்தரியின் அழைப்புகளுக்கு ஓடுவதுமாகப் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்த மனைவியைப் பார்க்கையில், சுதர்சனத்துக்கே பாவமாக இருந்தது!அதே போல, மகள் மதிவதனியும், மண்டபத்துக்கு வந்ததில் இருந்து வேலைதான் செய்து கொண்டிருக்கிறாள்!அவள் மட்டுமல்ல! அவளுடைய தாய்வழி உறவுப் பெண்களும், அவளோடு வந்து, மாப்பிள்ளை அழைப்புக்கான ஆரத்தித் தட்டுகளை விதம் விதமாக அலங்கரித்து அடுக்கிக் கொண்டிருந்தார்கள்!
Disponible depuis: 03/04/2025.
Longueur d'impression: 185 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் | பாகம் 1 | Kalki Krishnamurthi in Ponniyin Selvan | Pagam 1 | Audio Book - cover

    கல்கி கிருஷ்ணமூர்த்தியின்...

    Kalki Krishnamurthi

    • 0
    • 0
    • 0
    பொன்னியின் செல்வன் என்பது கல்கி என்று அழைக்கப்படும் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்ட சிறந்த காவிய கதை. சோழர் காலத்தில் அருள்மொழி வர்மன், குந்தவை, வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலன், நந்தினி ஆகியோரின் வாழ்க்கை, அரசியல், துரோகம், காதல், போராட்டங்கள் என பல ரகசியங்களை வெளிப்படுத்தும் ஒரு பிரமாண்டக் கதை இது. இது மொத்தம் 5 பாகங்கள் கொண்டது. இது முதல் பாகம்.
    Voir livre
  • Nylon Kayiru - cover

    Nylon Kayiru

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதாவின் முதல் நாவல். 1960களில் குமுதத்தில் வெளிவந்தது. அதிரடியான எழுத்து நடை, அக்காலத்திய பாணியில் இருந்து முற்றிலுமாக விலகிய வித்தியாசமான கதை சொல்லும் விதம், கணேஷ் கேரக்டர் முதல் முதல் அறிமுகமானது என்று இந்த நைலான் கயிறுக்கு பல சிறப்புகள். இப்போதும் அதே உற்சாகத்துடன் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது இந்த நாவல்.
    Voir livre
  • Kalvanin Kaadhali - cover

    Kalvanin Kaadhali

    Kalki Kalki

    • 0
    • 0
    • 0
    கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய கள்வனின் காதலி ஒரு தமிழ் காதல் நாவலாகும். ஒரு நல்ல உள்ளம் கொண்ட இளைஞன் முத்தையயன் ஒரு அழகிய கிராமத்துப் பெண் கல்யாணியுடன் காதல் வயப்படுகிறான், ஆனால் அவர்களின் காதல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. முத்தைய்யன் மற்றும் கல்யாணி ஒன்றாக ஓடிவிட முடிவு செய்தபோது, அவர்கள் போலீசாலும் அவர்களது குடும்பங்களாலும் துரத்தப்படுகின்றனர். இறுதியில், அவர்கள் எல்லா தடைகளையும் கடந்து ஒன்று சேர்வார்களா? 
    Kalvanin Kadhali is a Tamil romance novel by Kalki Krishnamurthy. It tells the story of Muththaiyan, a good-hearted young man who falls in love with Kalyani, a beautiful village girl, but their love is forbidden. When Muththaiyan and Kalyani decide to run away together, they are pursued by the police and their families. In the end, are they able to overcome all obstacles and find happiness together? 
    The novel is a classic tale of love and adventure, set against the backdrop of rural Tamil Nadu. It is a moving story of two young people who are willing to fight for their love, no matter what the cost.
    Voir livre
  • தித்திப்புயல் நீயடா :Thithippuyal Neeyada - College Friendly Romance with Possessive Love - cover

    தித்திப்புயல் நீயடா...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    சட்டென்று, அவள் உடலை தாவணியென மறைத்திருந்த ஆடையை அவன் கரம் உருவி எடுத்தது.. 
     அர்ஜுனிடம் இத்தகைய செயலை எதிர்பார்க்காதவள் “அஜூ... என்ன பண்ற? டோன்ட் பிகேவ் லைக் திஸ், எனக்கு பிடிக்கலை?” என்று அழுத்தமாக அவன் முகம் பார்த்து கூறினாள். 
    கீர்த்தியின் பேச்சில் அவளை மெல்ல விட்டு விலகியவன் கண்களோ அவள் மேனியை அணுஅணுவாக ரசனையாக துளைத்தது. 
    அவளை பார்த்தபடியே “எஸ், எனக்கும் தான்... எனக்கும் தான் பிடிக்கலை. இந்த கல்யாணம் பிடிக்கலை... உன்னை பிடிக்கலை... என்ன பண்ணலாம்?” என்றவன் அவன் இடுப்பில் கைகுற்றி, சற்றே அவள் முன் குனிந்து, 
    ”கல்யாணத்தை நிறுதீடலாமா?” என்று ஆழ்ந்த குரலில் வினவவும்,, 
    அதிர்ந்த விழிகளுடன் “அஜூ...” என்றவள் விழிக்க, 
    “எஸ், வேற வழியில்லை. பாரு, இந்த டிரெஸ்ல நீ எவ்ளோ அழகா இருக்க! எந்த ஆம்பளைக்குமே உன்னை இப்படி பாத்தா என்ன தோணனும்?” என்றவன் விழிகள் பயணித்த இடங்கள் பெண்ணவளை உடல் கூச செய்தது. 
    அர்ஜுன் பார்வை எப்போதும் கண்ணியமானது. அதுவும் அவள் மேல் மிக கண்ணியமாக இருக்கும். அவன் அருகாமை கீர்த்திக்கு எப்போதும் ஒரு பாதுகாப்பு உணர்வை மட்டுமே கொடுக்கும். பயஉணர்வை அல்ல. 
    இப்போது அவன் பார்வை, அவன் அவளிடம் நடந்து கொண்டிருக்கும் விதம் அணைத்தும் அவளுக்கு அவன் மேல் அச்சத்தைக் கொடுத்தது. 
    இத்தனை வருட நட்பில், அர்ஜுன் அவளை பயமுறுத்தக் கூட இப்படி பேசியதில்லை.  
    “அஜூ... ஸ்டாப் திஸ். ஸ்டுபிட் மாதிரி பேசாத, திஸ் இஸ் நாட் யூ. நான் போகணும்” என்றவள் நகரப்போக, தன்னிரு கைகளால் அவளுக்கு அணைகட்டியவன், அவளை நெருங்கி நின்றான்.
    Voir livre
  • Ninaivu Paadhai - cover

    Ninaivu Paadhai

    Nakulan

    • 0
    • 0
    • 0
    தமிழ் நாவல் வடிவங்களின் எந்த வகைமைக்குள்ளும் அடங்க மறுக்கும் புதுக்குரல்கள் நகுலனின் நாவல்கள். கதையம்சத்தை முற்றாகவே தவிர்த்து, கட்டுப்பாடற்ற மனவோட்டங்களை முழுக்கவும் நனவோடை உத்தியில், மரபும் நவீனமும் இழையோடும் மொழிநடையில் வெளிப்படுத்கிறது 'நினைவுப் பாதை' நாவல். "கதை கூறும் முறையிலும் பேசுவது போல் அனாயாசமாய் எழுதிக்கொண்டு செல்வதிலும் வெளியாகும் ஆசிரியரின் ஒரு அபோதமான, கட்டற்ற தன்மை, மிகுந்த அழகாகப்படுகிறது" என்று நகுலனின் 'நிழல்கள்' நாவலின் முன்னுரையில் சுந்தர ராமசாமி கூறுவது இந்த நாவலுக்கும் பொருத்தும்.
    Voir livre
  • Oomatham Pookal - cover

    Oomatham Pookal

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    கார்டியாலஜிஸ்ட் அனந்த கிருஷ்ணனும், ஹரேஷூம் ஃபைவ் ஸ்டார் அந்தஸ்தோடு கூடிய மிகப் பெரிய ஹாஸ்பிடலை நடத்தி நகரில் நல்ல பெயர் எடுத்து இருப்பதால் அவர்களுக்கு எதிரிகளும் உருவாகிறார்கள். அவர்கள் ஹாஸ்பிடலுக்கு கெட்டப் பெயரை உண்டாக்க வேண்டும் என்பதற்காக மறைமுக வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அனந்த கிருஷ்ணனை கொலை செய்ய முயற்சிகள் நடக்கின்றன.
    
    போலீஸ் விசாரணையில் இறங்கி டாக்டர்கள் அனந்த கிருஷ்ணனுக்கும், ஹரேஷூக்கும் எதிராகவும், மறைமுகமாகவும் செயல்படுபவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறது, அவர்களால் முடியாமல் போகவே க்ரைம் ப்ராஞ்ச் ஆபீஸர் விவேக் அதிரடியாய் விசாரணையில்
    இறங்கி குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.
    விவேக்கின் புத்திசாலித்தனமான நுணுக்கமான புலனாய்வு நடவடிக்கைகள் மூலம் உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளி யார் என்பது தெரியும்போது அனைவர்க்கும் மிகப்பெரிய அதிர்ச்சி
    ஏற்படுகிறது.
    
    "அது எதுமாதிரியான அதிர்ச்சி என்று அறிய விருப்பமா ? "க்ரைம் த்ரில்லரான ஊமத்தம்பூக்கள் நாவலை ஒலி வடிவில் கேளுங்கள்.
    Voir livre