Ilaignar Ilakkiyam
Bharathidasan
Narratore Ramani
Casa editrice: Ramani Audio Books
Sinossi
இளைஞர் இலக்கியம் என்ற நூலை எழுதியவர் பாவேந்தர் பாரதிதாசன். இந்நூலினை மரபுப்பாடல்களால் ஆக்கியுள்ளார். ஒன்பது பெருந்தலைப்புகளின் கீழ் அமைந்துள்ளன. ஒன்பது தலைப்புகளிலும் வெவ்வேறு குறுந்தலைப்புகளில் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. பாவேந்தர் குழந்தைகள் மனதில் நற்சிந்தனைகளை இனிய தமிழில் எடுத்துரைப்பது சிறப்பானதாகும். கவிதைக்கு அழகைச் சேர்ப்பது பைந்தமிழ்ச் சொற்கள். ஆதலால் இலக்கியச் சொற்களைக் கவிதைகளில் கூட்டும் போது குழந்தைகளின் சொல் அறிவும், மொழி அறிவும் அதிகரிக்கும். “வில்லடித்த பஞ்சு / விட்டெறிந்த தட்டு / முல்லை மலர்க் குவியல்; /முத்தொளியின் வட்டம்; / நல் வயிரவில்லை; /நானில விளக்கு” சந்திரனுக்கு நல்ல தமிழ்ச்சொல் நிலவு. அந்த நிலவில் அந்த நிலவின் அழகைப் பாவேந்தர் குழந்தைகளுக்கு இலக்கிய சொற்களைக் கொண்டு எடுத்துக்கூறும் விதம் சிறப்புக்குரியது. அகழி, முணறி, குணகடல், உய்யும் என்பன கவிஞர் பயன்படுத்தியிருக்கும் சொற்களாகும். “சொக்க வெள்ளித்தட்டு – மிகத் / தூய வெண்ணெய்ப்பிட்டு / தெற்கத்தியார் சுட்டு – நல்ல / தேங்காய்ப் பாலும் விட்டு” நாளைய தலைமுறைகளான குழந்தைகளின் உள்ளத்தை மகிழ்ச்சியில் ஆழ்ந்த வேண்டும் என்ற கற்பனை எண்ணத்துடன் பாவேந்தர் கவிதை படைக்கிறார். “குயிலே குயிலே கூவாயோ? / குரலால் என்னைக் காவாயோ? / பயிலும் உன்வாய் பூவாயோ? / பயனை அள்ளித் தூ வாயோ?” எனும் இப்பாடல் குழந்தைகளுக்கு ஓசையின்பம் அளிக்கிறது. “சின்னஞ்சிறு குட்டை – அதில் / ஊறும் தென்னை மட்டை – அதோ கன்னம் கரிய அட்டை – எதிர் / காயும்
Durata: circa un'ora (01:21:34) Data di pubblicazione: 20/01/2023; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

