Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
தீயாய் வந்த தென்றல் - cover

தீயாய் வந்த தென்றல்

ஆர்.மகேஸ்வரி

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

சிறிய கூட்டம் கூடி வேடிக்கை பார்த்தது.“ஐயோ... ரத்தம் ஆறாய் போகுதே! பிடியுங்க... இறுக்கிப் பிடியுங்க...!” பதற்றத்தோடு கூறிய கவுதம், அவள் அருகே சென்று, காயத்தைப் பிடிக்கப் போக... அவன் கையை கோபமாக தட்டி விட்டாள்.“தொடாதீங்க... தொட்டால் நடக்கிறதே வேறு! நான் பொல்லாதவளா ஆயிடுவேன்!”“முதல்ல ரத்தத்தை நிறுத்தணும்... ஏராளமா ரத்தம் வீணாகுதே!” என்றவன், தன் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு... கைக்குட்டை எடுத்து உதறி கட்டுப் போடப் பார்த்தான்.அவள் பின்னே நகர்ந்தாள்.“போங்க... போயிடுங்க! என்னைப் பற்றிக் கவலைப்பட நீங்க யார்?”“சாரி... சாரிம்மா... நீங்க திடீர்னு வந்ததை நான் கவனிக்கலே! வேணும்னு உங்களை விழ வைக்கல. தெரியாமல் நடந்துடிச்சி! வாங்க, ஆஸ்பத்திரிக்கு போகலாம்... என் கார் அங்கே நிற்குது. கொண்டு வரேன்!”“ஆஸ்பத்திரிக்குத்தானே? எனக்கு போய்க்க தெரியும்! நீங்க உங்க வேலையைப் பாருங்க!’’கவுதம் புரியாமல் விழிக்க...“பெண்களை துரத்தும் உங்க வேலையைத்தான் சொன்னேன்!”பிரியா நக்கலாய் பேசினாள். கவுதமுக்கு அவமானமாக இருந்தது.“என்னைத் தப்பா புரிஞ்சிட்டீங்க!”“சரியாத்தான் புரிஞ்சிருக்கேன்!“அவள் என் மாமா பெண். அவளுக்கு சுடிதார் வாங்க வந்தேன். எனக்கு எதுவும் பிடிக்கலே! அவள் போவதைப் பார்த்ததும், அவளையே அழைச்சிட்டு வந்து... அவளுக்குப் பிடிச்சதா வாங்கலாம்னு ஓடி வந்ததில்... தெரியாமல் மோதிட்டேன். சாரி... வெரி சாரி... முதல்ல வாங்க... பேச நேரமில்லை!” அவன் அவசரப்படுத்த...“எனக்குப் போகத் தெரியும்!”“வீம்பு பிடிக்காதீங்க! சொன்னா கேளுங்க!”“ஆட்டோ... ஆட்டோ...” என்று கைதட்டி அழைத்து... அதில் ஏறிப் போனாள் பிரியா. இறக்கையை இழந்த வண்ணத்துப் பூச்சியாய் வலியில் துடித்தாள்.கவுதம் மனம் பதைபதைத்தது. ‘எக்கேடோ கெட்டுப் போகட்டும்’ என்று விட்டுப் போக மனமில்லாமல்... காரில் ஆட்டோவைப் பின்தொடர்ந்தான்.ஆஸ்பத்திரியில் காயங்களுக்கு தையல் போடப்பட்டது...வராந்தாவில் கையைப் பிசைந்து கொண்டு நின்றான் கவுதம். டாக்டர் வெளியே வர...“டாக்டர்... காயம் பலமா?”“ஆமா சார், நாளை வீட்டுக்குப் போகலாம். அவங்க உங்களுக்கு என்ன வேணும்?”“தெரிந்த பெண்!” என்றான், யோசிக்காமல்.“நான் பார்க்கலாமா?”“ஓ.கே!’’ என்று டாக்டர் சென்று விட உள்ளே நுழைந்தான்.“உங்களை யார் வரச் சொன்னது? எதுக்கு வந்தீங்க?” கோபமாய் கத்தினாள்.“தெரியாமல் நடந்த தவறுக்கு மன்னிக்கக் கூடாதா?”“என்ன தெரியாமல்? அழகான பெண்களைக் கண்டால்... எதிரில் வருபவர்களைத் தெரியாதா?” சீறினாள்.“தப்பா பேசாதீங்க...“நான் அப்படித்தான் பேசுவேன்!”“மன்னிக்க முடியாதா... என் செயலை!”“முடியாது, முதலில் வெளியே போங்க!”“டாக்டர் உங்களை நாளைக்குப் போகச் சொல்கிறார். உங்க ‘அட்ரஸ்’ சொல்லுங்க.”அவள் முறைத்தாள். கண்களில் நெருப்பு கனல் வீசியது.“உங்க அப்பா பெயர் என்ன? உங்கள் வீட்டு போன் நெம்பர் கொடுக்க முடியுமா?”இந்தக் கேள்வியால் பத்ரகாளி ஆனாள்
Available since: 02/15/2024.
Print length: 132 pages.

Other books that might interest you

  • வெள்ளியங்காட்டான் கவிதைகள் சமுதாயம் - cover

    வெள்ளியங்காட்டான் கவிதைகள் சமுதாயம்

    Velliyankattan

    • 0
    • 0
    • 0
    வெள்ளியங்காட்டான் (1904 - 1991) என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி. தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில் மெய்ப்புப் பார்ப்பவராக (Proof Reader) பணியாற்றியவர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர். தன்னுடைய ஊரை அடியாகக்கொண்டு வெள்ளியங்காட்டான் என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார்.  "ஒரு எழுச்சி, ஒரு நுழைவு, ஒரு நெகிழ்வு, ஒரு பொறி, ஒரு ஏக்கம், ஒரு வியப்பு, ஒரு தோற்றம், ஒரு மின்னல், இவற்றுக்கு வண்ணம் கொடுத்து வெளிப்படுத்தும் கவிதைக்கு "லிரிக்' என ஆங்கில இலக்கியத்தில் அடையாளம் கூறப்படுகிறது. வெள்ளியங்காட்டான் கவிதைகளைப் படித்தபோது "லிரிக்' கவிதைகளுக்கு வேண்டிய கனல் மூண்டிருப்பதைக் கண்டேன்” என்கிறார் கவிஞர் திரிலோக சீதாராம். "வயல் வெளிகளிலே அன்பு / வடிவ நெல்லெல்லாம் / சுயநல எருமை அந்தோ / சூறையாடுதே' என்ற வெள்ளியங்காட்டான் பாடலையும் இதர பாடல்களையும் குறிப்பிட்டு எளிமையும், உண்மையான உணர்ச்சியும் உள்ள பாடல்கள் வெள்ளியங்காட்டான் பாடல்கள் என பேராசிரியர் அ. சீனிவாசராகவன் குறிப்பிடுகிறார். “வெள்ளியங்காட்டானை யார் என்று எனக்குத் தெரியாது. அவர் பாடல்களோ எனக்கு பழக்கமிருக்கிறது. அவர் பாடல்களில் நாட்டின் பண்பு நன்றாக இருக்கிறது. உண்மைகளையே சொல்லியிருப்பதனால் பாட்டுகள் பொருளுடையனவாக இருக்கின்றன” என்கிறார் கொத்தமங்கலம் சுப்பு. 
    உணர்ச்சி வசப்படுபவன் கவிஞன். சத்தியத்திலும் சமத்துவத்திலும் பற்றுடையவன். சராசரி மனிதன் விலகிப் போக ஒதுக்க, கவிஞன் ஒதுங்கிப் போகிறான். உண்மையை உயிராகக் கொண்டவன் கவிஞன். அறமறிந்து ஒழுகுபவன். பிறாரால் ஆளமுடியாதவன். தன்னைத் தான் ஆள்கிறவன். தலைவனை அறிந்து அடைந்தவன். மக்கள் மொழியில் விபத்தானதை சம்பத்து எனக் கொள்பவன். கவிஞனை இப்படி இனம் காண்கிறார் வெள்ளியங்காட்டான். அவருடைய கவிதைகளை ஐந்து ஒலி நூல்களாக பேராசிரியர் ரமணி அளிக்கிறார். இந்த முதல் ஒலிநூலில் சமுதாயம் என்ற துணைத் தலைப்பில் அவருடைய 35 கவிதைகள். 
     
    Show book
  • Krishnachandara Kathegalu - cover

    Krishnachandara Kathegalu

    Kishan Chand

    • 0
    • 0
    • 0
    ಉರ್ದು ಸಾಹಿತ್ಯ ಪ್ರಪಂಚದಲ್ಲಿ ಕೃಷ್ಣಚಂದರದು ಎದ್ದು ಕಾಣಿಸುವ ಹೆಸರು. ಕಥೆ, ಕಾದಂಬರಿ, ನಾಟಕ, ಪ್ರವಾಸ ಸಾಹಿತ್ಯ, ವಿಡಂಬನೆ, ಹಾಸ್ಯ ಬರಹಗಳ ಮೂಲಕ ಸುಮಾರು ಐವತ್ತು ವರ್ಷಗಳಷ್ಟು ಕಾಲ ಉರ್ದು ಸಾಹಿತ್ಯವನ್ನು ಶ್ರೀಮಂತಗೊಳಿಸಿದ ಅದ್ವಿತೀಯ ಲೇಖಕ. ತಮ್ಮ ಸುತ್ತಲಿನ ಬದುಕನ್ನು ಅತ್ಯಂತ ಸೂಕ್ಷ್ಮವಾಗಿ ಗಮನಿಸುತ್ತ, ಸಮಾಜದ ಸ್ವಾಸ್ಥ್ಯವನ್ನು ಕೆಡಿಸುವ, ಮನುಷ್ಯರನ್ನು ಮನುಷ್ಯರಿಂದ ಬೇರ್ಪಡಿಸುವ ಅಮಾನವೀಯ ಸಂಪ್ರದಾಯಗಳನ್ನು, ಶ್ರೀಮಂತ ವರ್ಗದ ವಿಲಾಸೀ ಜೀವನದ ಪೊಳ್ಳುತನವನ್ನು ಅತ್ಯಂತ ಪರಿಣಾಮಕಾರಿಯಾಗಿ ಚಿತ್ರಿಸುತ್ತಾರೆ. ಕಲ್ಪನೆಯ ರಮ್ಯಲೋಕದ ಸೊಗಸನ್ನು ಮತ್ತು ವಾಸ್ತವಿಕ ಲೋಕದ ಕಠೋರತೆಯನ್ನು ಸಮರಸಗೊಳಿಸಿದ ಲೇಖಕ ಕೃಷ್ಣಚಂದರ್. ಕನ್ನಡಕ್ಕೆ ಹಲವಾರು ಉರ್ದು ಮತ್ತು ಹಿಂದಿ ಕಥೆಗಳನ್ನು ಅನುವಾದಿಸಿರುವ ಡಾ|| ಪಂಚಾಕ್ಷರಿ ಹಿರೇಮಠ ಅವರು, ಇಲ್ಲಿ ಕೃಷ್ಣಚಂದರ ಎಂಟು ಸಣ್ಣ ಕಥೆಗಳನ್ನು ಅನುವಾದಿಸಿದ್ದಾರೆ.
    Show book
  • சுரதா கவிதைகள் - cover

    சுரதா கவிதைகள்

    Suratha

    • 0
    • 0
    • 0
    சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 29 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர். 
    வாழ்வியலின் பல்வேறு பொருட்களில் கவிஞர் சுரதா அவர்கள் தீட்டிய கவிதைகளில் இருந்து தொகுத்த கருத்து முத்துக்கள் சுரதா கவிதைகள் என்ற தலைப்பில் இந்த நூலாக அமைந்துள்ளது. இயற்கையில் இருந்து இடுகாடு வரையில் நூற்று ஐம்பதுக்கு மேற்பட்ட பொருட்களில் அவர் வடித்திருக்கும் கவிதைகள் ஒவ்வொன்றுமே மிகமிகச் சிறப்பானவை. இவ்வளவு எளிதாக சிறப்பாக தெளிவாக கவிதைகளில் கருத்துக்களைச் சொன்னவர்கள் மிகவும் அரிது.
    Show book
  • Kanthapuranam Devakantam - cover

    Kanthapuranam Devakantam

    Kachiyappasivachariyar

    • 0
    • 0
    • 0
    கந்த புராணம், அல்லது ஸ்கந்த புராணம், என்பது மகாபுராணங்களில் பதின்மூன்றாவது புராணமாகும். காஞ்சிபுரத்தில் இருக்கும் குமரக் கோட்டத்தின் அர்ச்சகர் காளத்தியப்ப சிவாசாரியார். அவருடைய குமாரர் தான் கச்சியப்ப சிவாசாரியார். குமரக் கோட்டத்து முருகக்கடவுளுக்கு நாள்தோறும் பூசனை செய்த மெய்யன்பில் வடமொழிப் புராணத்தின் சிறப்பினைத் தமிழ்கூறு நல்லுலகம் அறியும் வண்ணம் இந்தப் புராணத்தை இயற்றினார். அதன் பின் குமரக் கோட்டத்திலேயே அரசர், பிரபுக்கள், கல்வி கேள்விகளில் சிறந்த வல்லுநர்கள் முன்னிலையில் தினம் ஒரு பகுதியாகப் பாடிப் பொருள் கூறி விளக்கி ஓராண்டுக் காலமாகத் தன் நூலினை அரங்கேற்றினார். 
    பதினெண் புராணங்களும் வடமொழியில் இருப்பவை. இவற்றுள், கந்த புராணத்தின் சங்கர சங்கிதையில் சிவரகசிய கண்டத்தில் வரும் முதல் ஆறுகாண்டங்களின் தமிழ் மொழிபெயர்ப்பே கந்த புராணம். 
    கந்த புராணம் சிவபுராணங்கள் பத்தில் ஒன்றாகும். இது நூறாயிரம் சுலோகங்களால் ஆனது. அது ஆறு சங்கிதைகளைக் கொண்டது. இதில் சங்கர சங்கிதையும் ஒன்றாகும். சங்கர சங்கிதையில் உள்ள பல கண்டங்களில் சிவரகசிய கண்டமும் ஒன்றாகும். இக்கண்டத்தில் ஏழு காண்டங்கள் காணப்படுகின்றன. இவற்றில் உபதேச காண்டம் தவிர ஏனைய ஆறு காண்டங்களதும் தமிழ்த் தொகுப்பே கந்தபுராணமாகும்.[1] 
    உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் என்று ஆறு காண்டங்களை உடையது. இது 135 படலங்களையும், 10345 பாடல்களையும் உடைய இது முருகப்பெருமானின் வரலாற்றை முறையாகவும் முழுமையாகவும் கூறுகிறது. 
    ramaniaudiobooks.comக்காக முனைவர் ரமணியின் குரலில் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம் ஆறு ஒலி நூல்களாக வெளிவருக
    Show book
  • Haridasan Enum Naan - Krishandeva Raya's Journey to the throne - cover

    Haridasan Enum Naan -...

    Dhivakar

    • 0
    • 0
    • 0
    வரலாற்று நாவல் - ஸ்ரீ கிருஷ்ணதேவராயன் பல இடர்களுக்கிடையில் எவ்வாறு விஜய நகரத்து ( ஹம்பி) அரசனானான் என்பதே " ஹரிதாசன் எனும் நான் " எ ன்னும் இந்தப் புதினம்  
    தமிழனான ஹரிதாசன் சந்திரகிரி சிற்றரசனின் இளவல் . இப்புதினம் அவன் வாயிலாக சொல்லப்படுகிறது. தானே சொல்வதாக கதையை சொல்வது என்பது மிக மிகக் கடினமான ஒரு உத்தி . மொத்த புதினத்தையும் இம்முறையில் சொல்வதென்பது அபூர்வம் . 
    ஆசிரியர் திவாகர் வெகு கவர்ச்சிகரமான முறையில் இதனை இயற்றியுள்ளார்  
    டாக்டர் ஆர் . சம்பத்  
    மூத்த பத்திரிக்கையாளர் 
    Show book
  • Malaiyankulam - Short story collection - மலையன்குளம் (சிறுகதைத் தொகுப்பு) - cover

    Malaiyankulam - Short story...

    Jayaraman Raghunathan

    • 0
    • 0
    • 0
    Malayankulam - மலையன்குளம் - Short story collection a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment http://aurality.app to download our app to provide feedback  
    சிறுகதைகள் எப்போதுமே மனதுக்கு நெருக்கமானவை. நம் பால்ய கால நினைவுகளைக் கிளர்த்தும் கதைகள் கூடுதல் நெருக்கமானவை. நம் நினைவுகளைக் கிளர்த்துபவை. கரைய வைப்பவை. மலையன்குளம் என்ற இந்தத் தொகுப்பில் இருக்கும் கதைகள் இந்த வகையைச் சேர்ந்தவை. ஜெயராமன் ரகுநாதனின் பூச்சுகளற்ற நடையில், இந்தக் கதைகளுக்குள் நாம் இயல்பாகவே நுழைந்து விடுகிறோம். இதில் வரும் கதாபாத்திரங்களை நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் ஒரு தடவையேனும் நிச்சயம் கடந்து வந்திருப்போம். இதில் வரும் நிகழ்வுகள் நம் வாழ்விலும் நடந்திருக்கும். இந்தக் கதைகளில் வரும் ‘இவன்’ நாமாகவும் இருக்கலாம். இந்தக் கதைகள் உங்களைச் சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும், நெகிழவும் வைக்கும். பல பசுமையான நினைவுகளுக்கு அழைத்துச் செல்லும் கால இயந்திரமாக இந்தக் கதைகள் இருக்கும்.  
    எழுத்தாளர் ஜெயராமன் ரகுநாதன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். a proud tamil audiobook production from Aurality
    Show book