Muthal Thirumurai
Sampanthar
Narrator Ramani
Publisher: RamaniAudioBooks
Summary
தேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும். இந்த ஏழு திருமுறைகளை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மார்கள் தமிழில் பாடியுள்ளார்கள். முதல் இருவரும் கி.பி 7ஆம் நூற்றாண்டிலும், மூன்றாமவர் கிபி 8ஆம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது. தெய்வங்கள் மீது பாடப்பட்ட ஆரம்(பாமாலை) என்பதால் தேவாரம் என்று பெயர்பெற்றதாகக் கூறுவர்.ஆனால், இசையியலில் வாரம் என்பது நடையை (இசை வேகம்) குறிக்கும் சொல்லாகும். வாரநடை என்பது முதல் நடை, இரண்டாம் நடையில் பாடுவது என்பதையே குறிக்கிறது.“பொன்னார் மேனியனே”, “தோடு டைய செவியன்” பாடல்களை, ஓதுவார்கள் முதல் நடையில் தான் பாடுகிறார்கள். முதல் நடையில் ஓரெழுத்தாக பாடுவதையே, முதல்நடை என்பர்.
Duration: about 10 hours (10:15:37) Publishing date: 2022-03-15; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

