Suyasarithai
Va Vu Chithamparampillai
Narrator Ramani
Publisher: Ramani Audio Books
Summary
"கப்பலோட்டிய தமிழன்" வ உ சிதம்பரம்பிள்ளை அவர்கள் ஒரு பன்முகர் என்பதைப் பலரும் அறிவதில்லை. சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்று செக்கிழுத்த செம்மல் சீரியதொரு தொழிற்சங்கவாதி. கவிஞர். இலக்கியத் திறனாய்வாளர். அவருடைய கவிதை நூல்களை ஒலி நூலாக்கம் செய்தது ரமணியின் பாக்கியம். நூல்கள் வ.உ.சி. இயற்றிய நான்கு நூல்களுமே கவிதைகளால் ஆனவைதான். அவை 1.மெய்யறம் 2.மெய்யறிவு 3.பாடல் திரட்டு 4.சுயசரிதை சுயசரிதை-1946 இது இரு பகுதிகளை உடையது. முதல் பகுதி 1916-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் அவர் தனது குழந்தைப் பருவம், ஆசிரியர்கள், குடும்பம், சட்டக்கல்வி இவற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இரண்டாவது பகுதி 1930-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் கோயம்பத்தூர் சிறை வாழ்க்கை, சிறை அதிகாரி மீது தாக்குதல், சிறையில் ஏற்பட்ட கலவரம், கண்ணணூர் சிறை வாழ்க்கை, ஆஷ் கொலை, விடுதலை இவை குறித்து விளக்குகிறார். அவர் இறந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1946- ஆம் ஆண்டு இரண்டு பகுதிகளும் சேர்ந்து ஒரே நூலாக வெளி வந்தது.
Duration: about 3 hours (02:43:55) Publishing date: 2022-05-30; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

