தாலேலோ!
தேவிபாலா
Editora: Pocket Books
Sinopse
ரேவதி பன்னிரண்டாவது வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேறியிருந்தாள்.அவளை என்ஜினீயரிங் படிக்க வைக்க அம்மாவுக்கு ஆசை. அதை வெளிப்படுத்தினாள்.“சான்ஸே இல்லை! எடுத்த எடுப்புல ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் கட்ட வேண்டியிருக்கும். பணத்துக்கு எங்கே போறது?”“கொஞ்சம் கஷ்டப்பட்டு படிக்க வச்சிட்டா, எல்லாருக்கும் நல்லதுதானே பவித்ரா?”“யாருக்கு நல்லது? கட்டிக் குடுத்த பொண்ணுகிட்ட சம்பளத்தைக் கேட்டு வாங்க முடியுமா? நாம செலவழிச்சிட்டு, யாரோ அனுபவிக்கணுமா?”“அதுக்காக புள்ளைங்களை விட்ர முடியுமா?”“நீங்க பெத்த புள்ளை ரேவதி! நீங்க சேர்த்து வச்சிருக்கணும். பொண்ணைப் பெத்துட்டா ஆச்சா? எங்கப்பாவுக்கு நாங்க ரெண்டு பேர். படிக்க வச்சு, கட்டிக்குடுத்து எல்லா செலவையும் அவர்தான் செஞ்சார். யாரு உதவினாங்க?”“சரிம்மா! இங்கே அப்பா உயிரோட இல்லை. அண்ணன்தானே அவளை கரை சேர்க்கணும்?”“நான் மறுக்கலை. பி.காம்ல சேர்க்கலாம். அதுக்கே ஆயிரக்கணக்கா ஆகுது இப்ப! அந்தப் படிப்புக்கு என்ன கிடைக்குதோ, அது போதும்! புரியுதா?”வசந்த் மறுக்கவேயில்லை.ரேவதியை ஒரு பெண்கள் கல்லூரியில் பி.காம் படிப்பில் சேர்த்தார்கள்.அந்த மூன்று வருடங்கள் ரேவதி பட்டபாடு!மூன்றே உடைகள். மாறி மாறி அதைப் போட்டுக் கொண்டு கல்லூரிக்குப் போக வேண்டும். சகலத்திலும் கட்டுப்பாடு. பீஸ் கட்டுவதை சொல்லிக் காட்டி காட்டி அம்மா, மகள் இருவரையும் பவித்ரா சித்ரவதை செய்தாள்.ஒருமுறை, வசந்தே தாள முடியாமல் பவித்ராவை கேட்டுவிட, பவித்ரா பத்ரகாளியானாள்.அன்று அவள் போட்ட ஆட்டத்தில் தெருவே கூடி விட்டது.‘என்னை மாமியார் கொடுமை படுத்துகிறாள்’ என அக்கம் பக்கத்திடம் பேசி, கெரஸினை தலையில் ஊற்றிக் கொண்டு கேவலமான ஒரு நாடகத்தை அவள் அரங்கேற்ற-வசந்த் நடுங்கிப் போனான்.அம்மாவுக்கு மயக்கமே வந்து விட்டது.மான - ரோஷத்துக்குப் பயந்த குடும்பம் அது! அதிர்ந்து பேசிக்கூடப் பழக்கமில்லை.அதன் பிறகு அம்மா - மகள் இருவரும் வாய் திறப்பதில்லை.நொறுங்கிப் போனார்கள்.வசந்த் வாய் இருந்தும், ஊமையாகி விட்டான்.ரேவதி படிப்புக்காக, சகல கொடுமைகளையும் தாங்கிக் கொண்டாள்.கல்லூரி வளாகத்தில் ஒரு சில நிறுவனங்கள் நேர்முகம் நடத்த, பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் ரேவதிக்கு வேலை கிடைத்து விட்டது.உற்சாகப் பந்தாக ஓடி வந்தாள். பவித்ரா முகத்தில் மட்டும் சிரிப்பு இல்லை.அன்று இரவு அம்மா ரேவதியை அணைத்துக் கொண்டாள்.“வர்ற சம்பளத்தை சேர்த்து வச்சு, உன் கல்யாணத்தைப் பற்றி யோசிக்கணும்மா!”“கோட்டை கட்டாதேம்மா. இப்பத்தான் எனக்கு வேலை கிடைச்சிருக்கு. இப்பவும் அண்ணிதான் குடும்பத் தலைவி. என்ன திட்டம் போட்டிருக்காங்கனு யாருக்குத் தெரியும்?“என்னடீ பேசற? உன் சம்பளத்துக்கு பட்ஜெட் போட இவ யாரு?”“அப்படி சொல்லாதேம்மா! நீயும் தப்பா பேசற! இத்தனை நாள் சண்டை போட்டாலும், நான் பட்டதாரி ஆகறதை அண்ணி தடுக்கலை! அதுக்காக நன்றி சொல்லணும். அவசரப்படாதே! விட்டுப்பிடி!”மறுநாள் காலை எழுந்ததும்-“ரேவதி! இங்கே வா!”“என்னண்ணி?”“ஆபீஸ் போக நல்ல ட்ரஸ் வேணும். இன்னிக்கு சாயங்காலம் உன்னைக் கூட்டிட்டுப் போய் வாங்கித் தர்றேன்.”குரலில் கனிவு! அம்மா, வசந்த் இருவருக்கும் ஆச்சர்யம்.சொன்னபடியே மாலை ரேவதியை அழைத்துப் போய், உடைகள், செருப்பு, ஹேண்ட் பேக், மேக்கப் சாதனங்கள் என எட்டாயிரம் ரூபாய்க்கு கார்ட் போட்டு வாங்கினாள்.ரேவதி மிரண்டு போனாள்.வீட்டுக்கு வந்து அம்மாவிடம் காட்டி சந்தோஷப்பட்டாள்.“உங்கிட்ட பணம் இருக்குடி! இனிமே உன்னைத் தாங்குவா! புரியுதா?”“சரிம்மா! தப்பான கண்ணோட்டத்துலயே பாக்காதே! பாசத்தை நீ குடுத்தாத்தானே உனக்கும் அது கிடைக்கும்? நாம மாற வேண்டாம். அனுசரிச்சே போவோம்.”ஒருமாத காலம் ஓடி விட்டது.பவித்ரா, ரேவதியிடம் மட்டும் பழைய கடுகடுப்பு இல்லாமல் பாசத்துடன் இருந்தாள்.அம்மாவிடம் அதே சிடுசிடுப்புதான்.முதல் சம்பளம் வாங்கிக் கொண்டு ரேவதி வந்தாள். பூஜை அறையில் வைத்துக் கும்பிட்டு, அம்மாவிடம் தந்தாள்
