பழைய பாடம் தேவையில்லை!
தேவிபாலா
Maison d'édition: Pocket Books
Synopsis
கூடத்தில் அட்சயா நடந்து கொண்டிருந்தாள்.அம்மா அருகில் வந்தாள்.“வந்த முதல் எதுவும் பேசலை. கோவமா இருக்கே! என்னடீ புது பிரச்னை?”“உங்கிட்ட பேசி லாபமில்லை. அப்பா வரட்டும். பேசிக்கறேன்.”“ஏதாவது வம்பா?”பதிலே இல்லை.“நிச்சயமா அடாவடிதான். இதப்பாரு அட்சயா! பணமும், அழகும், அந்தஸ்தும் இருக்கலாம். ஆனா, பொண்ணாப் பொறந்தவ அடக்கமா இருக்கணும். புரியுதா?”அட்சயா முறைத்தாள்.“இதப்பாரு. எப்பவும், எல்லா இடத்திலும் நீ சொல்றபடியே நடக்கும்னு எதிர்பார்க்காதே. மாறலாம். உனக்கு எதிராவும் நடக்கலாம். அதுக்கு ஆத்திரப்பட்டு லாபமில்லை.”அப்பா ராமலிங்கம் உள்ளே நுழைந்தார்.“என்ன நீ? குழந்தைக்கு உபதேசம் பண்ணி அவளை டென்ஷன் படுத்தறே?”அருகில் வந்தார்.“அட்சயா! என்னடா?”“அப்பா, ‘கோல்டன் கிஃப்ட் சென்டர்’னு டவுன்ல ஒரு பெரிய கடை இருக்கில்லையா?”“ஆமாம்!”அந்தக் கடையை நீங்க விலைக்கு வாங்கிடுங்க.”“எதுக்கும்மா?”“அந்தக் கடை நமக்கு சொந்தமாகணும். வேற சொத்துக்கள் எதையாவது வித்தாவது அதை வாங்குங்க.”“நீ காரணத்தைச் சொல்லு.”அட்சயா .... பொரிந்து தள்ளினாள்.“ஏண்டீ! இதென்ன அடாவடி? யாரோ வாங்கின பொருளை நீ கேட்டு, அது கிடைக்கலைனு ஆனதும், போட்டு உடைச்சிட்டு வந்திருக்கியே! தப்புடி.”“ஏய் இருடி. அவளுக்கு கிடைக்கலைனப்ப உடைச்சிட்டா. ரெண்டு மடங்கு பணத்தைக் குடுத்துட்டுத்தானே வந்திருக்கா!”“தப்புங்க. பணத்தால எல்லாத்தையும் வாங்கிட முடியாதுங்க.”“அட்சயா! கடைல உன்னை எதிர்த்தவனை நான் மன்னிப்பு கேட்க வைக்கறேன். போதுமா. அதுக்காக கடையை வாங்கி என்ன செய்யப் போறோம்?”“இதப்பாருங்க! இவளுக்கு சீக்கிரம் ஒரு கல்யாணத்தை நடத்தி வீட்டை விட்டே துரத்துங்க.”“அதெப்படி? என்னைக் கட்டிக்கறவன், இந்த வீட்டோட மாப்ளையா வரணும். நான் எங்கேயும் போக மாட்டேன்.”“ஒரு அனாதை, அப்பாவி - பணம் மட்டுமே உசத்தினு நம்பி வர்றவன்தான் வீட்டோட மாப்ளையா வருவான்.”“தேவையில்லை. நல்ல குடும்பத்துல பிறந்து, நல்லா படிச்சு, எல்லா தகுதிகளும் உள்ள ஒருத்தனை வீட்டு மாப்ளையா நான் கொண்டு வர்றேன். என்னப்பா? முடியுமா? முடியாதா?”“நிச்சயமா முடியும்மா! நீ செய்!”அட்சயா சிரித்தபடி உள்ளே போக,அம்மா, அப்பாவிடம் வந்தாள்
