பேராசை!
தேவிபாலா
Casa editrice: Pocket Books
Sinossi
ஜோசியர் எதிரில் சுமதி இருந்தாள்.அவர் நலம் விசாரித்து விட்டு, சுமதி தந்த ஜாதகத்தை கையில் வாங்கினார்.“கல்யாண யோகம் எப்பன்னு சொல்லுங்க! அப்புறம் பொருத்தமான ஒரு ஜாதகத்தையும் குடுங்க!”அவர் சிரித்தார்.“நல்லா சம்பாதிக்கத் தொடங்கிட்டா உங்க மகள். அதைக் கொஞ்ச நாள் அனுபவியுங்களேன். அதை விட்டுட்டு ஏன் கல்யாணத்துக்கு அவசரப்படறீங்க?”“இல்லீங்க. கட்டிக் குடுத்துட்டா நிம்மதி இல்லையா?”ஜோசியர் சிரித்தபடி ஜாதகத்தை அடுத்த பத்து நிமிடங்கள் ஆழமாக அலசினார்.“இன்னும் ஆறு மாசத்துல இந்த ஜாதகத்துக்கு கல்யாணம் நடந்தே தீரணும். ஆறு மாசமே அதிகபட்சம்!”“அப்படியா?”“மாங்கல்ய யோகம் வந்தாச்சும்மா. நீங்க இப்பவே ஏற்பாடுகளை ஆரம்பிச்சாத்தான் நான் சொல்ற நேரத்துல முடியும்!”சுமதிக்கு முகத்தில் மலர்ச்சி பூத்தது.“அப்படீன்னா, சந்தியா தகுதிக்குத் தக்கபடி ஒரு நல்ல பையனை நீங்களே புடிச்சுக் குடுங்களேன்...”“அமெரிக்கால வேலை பாக்கற...”“ஜோசியரே! இருங்க! வெளிநாட்டு விவகாரமே வேண்டாம். என் மகள் அப்பாவைப் பாக்காம வாழ மாட்டா. அதனால அடுத்த தெருவுல மாப்ளை கிடைச்சாக் கூட நல்லதுதான்!”ஜோசியர் சிரித்தார்.“அதையெல்லாம் நாம தீர்மானிக்க முடியாதம்மா!”“எனக்குத் தெரியும். முடிஞ்ச வரைக்கும் முயற்சி செய்யக் கூடாதா?”“நான் மாட்டேன்னு சொல்லலை. பெண் எப்பவும் அப்பா மடிலயே இருக்க முடியுமா?”“அதை அவ இப்ப புரிஞ்சுக்கற மனநிலைல இல்லை”“சரி! ஜாதகம் எப்படி இருக்கு?”“நிறைஞ்ச செல்வத்தோட, ஆயுளோட, ராஜாத்தி மாதிரி இருப்பா உங்க மகள்!”“அது போதும் எனக்கு!”“நான் நீங்க கேட்ட மாதிரி ஒரு வரனோட வந்து சேர்றேன். தைரியமா இருங்க...”“ரொம்ப நன்றி ஜோசியரே!”சுமதி நிறைவுடன் வெளியே வந்தாள்.‘என் மகளுக்கொரு நல்ல வாழ்க்கை அமைஞ்சா அதைவிட சந்தோஷம் எனக்கு என்ன இருக்கு?’இதுநாள் வரை இருந்த சந்தோஷம் அத்தனையும் ஒட்டுமொத்தமாக இனிமேல்தான் குலையப் போகிறது என்பது சுமதிக்கு அப்போது தெரியாது.
