மந்திரப் புன்னகை
தேவிபாலா
Casa editrice: Pocket Books
Sinossi
காலையில் - முதலில் ஜோதி எழுந்து விட்டாள்! ரங்கநாயகி அதற்கு முன்பே எழுந்து அவளுக்கு உதவிகள் செய்தாள்!ஜோதி குளித்து விட்டு வருவதற்குள் ரங்கநாயகி காபியுடன் தயாராக நின்றாள்.“அய்யோ! என்ன ஆன்ட்டி நீங்க? பெரியவங்க!”“தப்பே இல்லை! எங்க வீட்டுக்கு வந்த விருந்தாளி நீ! காலைல என்ன சாப்பிடுவே?”“எனக்கு இதுதான் வேணும்னு எந்தக் கட்டாயமும் இல்லை ஆன்ட்டி.”“உன் அப்பா, அம்மா எங்கே இருக்காங்க?”“ரெண்டு பேருமே இல்லை ஆன்ட்டி. எனக்கு பதினொரு வயசா இருக்கும் போது, ஒரு விபத்துல போயிட்டாங்க! அப்புறமா சித்தப்பா ஆதரவுல வளர்ந்து பி.டெக். முடிச்சு, வெளிநாட்டுக்குப் போனேன்! இப்ப ஆராய்ச்சிக்காக இங்கே வந்திருக்கேன்! ஆறுமாசம்! அது முடிஞ்சதும் திரும்பப் போயிடுவேன்! அங்கே இருந்தப்ப பாபு நண்பரானார்! பாபு எனக்கு செஞ்ச உதவிகள் கொஞ்சமில்லை! உங்க மகனைப் போல ஒருத்தரைப் பார்க்க முடியாது!”“நீ என்ன ஜாதி?”“பெண் ஜாதிம்மா!” சொல்லிக் கொண்டே பாபு வந்தான்!“யாருக்கு பெஞ்சாதி?” -- அங்கு வந்த நடராஜன் ஜோக்கடிக்க, ரங்கநாயகி கடுப்பானாள்.“ஜோதி! நீ டிபன் சாப்பிட வா! வெளில போகணுமில்லையா?”“அம்மா! நான்தான் ஜோதியைக் கூட்டிட்டுப் போகணும்! எனக்கும் டிபன் எடுத்துவை! குளிச்சிட்டு வந்துர்றேன்! ஜோதி! அதுக்குள்ள என் ரூம்ல போய், சிஸ்டத்துல கொஞ்சம் மெயில் செக் பண்ணிடேன்!“சரி பாபு! ஆன்ட்டி! பாபுவோட ரூம் எது?”“நீ வா ஜோதி! நானே காட்டறேன்!” - அவனே அழைத்துப் போக,கோகிலா அம்மாவிடம் வந்தாள்!“என்னம்மா! வீட்டுக்கு வந்து நம்மகிட்டயெல்லாம் ஒக்காந்து பேசக்கூட அவனுக்கு நேரமில்லை! அவளையே கட்டிட்டு அழறானே..! இது சரியாப்படுதா ஒனக்கு?”“பிடிக்கலைதான்! உடனே பேசினா, பிரச்னை வரும்!”“ஏம்மா! வேற, ஏதாவது இருக்குமா?”“பிச்சிடுவேன்! அனாதைப் பொண்ணு! யாருமில்லை! எந்த ஜாதினு தெரியாது! குலம்,கோத்ரம், தெரியாது! பெத்தவங்களை வாரிக் குடுத்தவ! என் மருமகளாக முடியுமா! விட்ருவாளா இந்த ரங்கநாயகி?”நடராஜன் உள்ளே வந்தார்!“அப்படி அவன் சொன்னானா? எதுக்கு தேவையில்லாம அவன்தலையை உருட்டறீங்க?”“இல்லைப்பா! பாபு ஒருத்தன் மட்டும்தான் அவளுக்கு நெருக்கம்னு ஆகுது!”முகுந்தன் உள்ளே வந்தார்!“அக்கா! நான் புறப்படறேன்!”“என்னடா தம்பி? டிபன் சாப்பிட்டுப் போ!”“இல்லைக்கா. வேலை நிறைய இருக்கு!”“தம்பி! இங்கே வா! உன் முகமே சரியா இல்லை!”“எப்படீக்கா இருக்கும்? முகம் மட்டுமில்லை... என் மனசும் சரியா இல்லை! இனிமே எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கக் கூடாது! நான் புறப்படறேன்!”நில்லுடா! என்ன பேசற நீ? இவ யாரோ! உன் பொண்ணு பூமிகாதான் என் மருமகள்! அதைக் கடவுள் வந்தாலும் மாற்ற முடியாது! புரியுதா?”முகுந்தன் புறப்பட்டுப் போய்விட,குளித்து விட்டு பாபு வந்தான்!“மாமா எங்கே?”“போயாச்சு!”“ஏன் எங்கிட்ட சொல்லாமப் போனார்! அவங்க எல்லாருக்கும் நிறைய வாங்கிட்டு வந்திருக்கேன்! பூமிகாவுக்கு ஒரு புது ஐ- பாட் வாங்கிட்டு வந்திருக்கேன்!”“சரி விட்ரா! மாமா வீட்டுக்குப் போய் இன்னிக்கு சாயங்காலம் குடுத்துட்டு வந்திடலாம்.”ஜோதி வெளியே வந்தாள்!“மெயில் பாத்துட்டேன் பாபு!”“சரி! சாப்பிட்டு நாம கிளம்பலாம்! அப்பா! கார் இருக்கில்லையா?”“இருக்குப்பா!”இருவரும் சாப்பிட்டார்கள்! புறப்பட்டு விட்டார்கள்
