¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
மார்'கிழி' மாதம் - cover

மார்'கிழி' மாதம்

தேவிபாலா

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

தூக்கம் கலைந்ததும்.வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள்.அறை முழுவதும் ஒரே இருட்டாக இருந்தது. ‘திக்’கென்றது ரேஷ்மாவுக்கு.அவசரமாக விளக்குகளை உயிர்ப்பித்தாள்.மேஜையின் மேலிருந்த தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஏழு...டிபன் முடித்து, அறைக்கு வரும் போது மணி ஒன்பதரை இப்போது ஏழா? இத்தனை நேரமா தூங்கியிருக்கிறேன்?டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் பார்த்த போது, முகம் சற்று உப்பிச் சிவந்து, தூக்கம் அதிகம் என்பதைக் காட்டியது.‘எங்கே சௌத்ரி?’‘ஒரு மணி நேரத்தில் வருவதாக, ஒன்பதரைக்குச் சொல்லிவிட்டுப் போனவர், இன்னுமா வரவில்லை? வந்தால், கதவைத்தட்டி அழைக்க மாட்டாரா?’திகீரென்றது.அழுகை உடைத்துக்கொண்டு புறப்பட்டது.சற்று விலகி நின்ற கதவு திறந்தால், பால்கனி என்று காலையிலேயே கவனித்திருந்தாள்.திறந்தாள்...சோடியக் கண்கள் விழித்துக்கொண்டு, இரவு நேரச் சென்னை அசுரகதியில் இயங்கிக் கொண்டிருக்கநிற்கப் பிடிக்காமல் உள்ளே வந்தாள்.அடி வயிறு கலங்கியது.‘இத்தனை நேரமாக, சௌத்ரிக்கு என்ன வேலை?’‘சென்னை எனக்கு புதிது... இந்த ஊர் மொழியும் தெரியாது என்றெல்லாம் புரிந்துமா சௌத்ரி...?’‘நோ... அப்படி இருக்க மாட்டார் சௌத்ரி!’‘கோரமாண்டல் எக்ஸ்பிரஸில், என்னைவிட்டு அங்குலம் அசையாத சௌத்ரியா, தனியாக ஓட்டல் அறைக்குள் விட்டு விட்டு?’‘சௌத்ரிக்கு எதுவும் விபத்தா?’நினைத்த போதே, கண்களை இருட்டிக்கொண்டு வந்தது.தடாலெனக் கீழே உட்கார்ந்தாள்.நேரம் எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.இன்னும் வரவில்லை சௌத்ரி.‘ஓட்டல் ரிசப்ஷனில் கேட்கலாமா?’‘அவர்களுக்கு மட்டும் என்ன தெரியும்? ‘விஸிட்டிங் கார்ட்’ அடிக்க, நல்ல பிரஸ்ஸா பார்க்கணும் என்று சொல்லிப் போனவர் தானே?’‘சென்னையில் எத்தனை பிரஸ்? தெருத்தெருவாகத் தேட முடியுமா?’‘போலீஸில் புகார் செய்யலாமா?’‘ஸ்டேஷனில் வைத்து ஒரு பெண்ணை இன்ஸ்பெக்டர் கற்பழித்ததாக போனவாரம் செய்தி படித்ததிலிருந்தே, போலீஸ் மேலிருந்த கொஞ்ச, நஞ்ச நம்பிக்கையும் போய்விட்டது‘இந்த ஒரு இரவு, பல்லைக் கடித்துக்கொண்டு சமாளித்துவிடவேண்டும். விடிந்துவிட்டால் யோசிக்கத் தொடங்கலாம்’ ‘தனக்கெப்படி, இத்தனை தைரியமும் தெளிவும் ஏற்பட்டது என்று ரேஷ்மாவுக்கே ஆச்சர்யமாக இருந்தது.’‘தூக்கம் மட்டும் வரவில்லை.’எப்படியும் சௌத்ரி, நள்ளிரவானாலும் வந்துவிடுவான் என்ற கடைசி நம்பிக்கையும் செத்தபோது இரவு மணி இரண்டு. ஒரு மாதிரி மரத்துப் போயிருந்தாள்.பகல் வெகு நேரம் உறங்கியதற்கான தண்டனையை விடிய விடிய அனுபவித்தாள்.ஒரு வழியாக விடிந்தும் விட்டது.‘இனி யோசிக்க வேண்டும்!’‘சென்னையில், தனக்கு யாரைத் தெரியும்?’‘உறவும் இல்லை... ஸ்நேகிதி...’ சட்டென் தன் பேனா நண்பி சுலோவின் நினைவு வந்தது. அவசரமாக டைரியைப் பிரித்து, சுலோவின் விலாசத்தைத் தேடி சேகரித்துக் கொண்டாள்.‘இதுவரை நேரில் பார்த்திராத சுலோவிடம், முதல் சந்திப்பிலேயே, என் கணவனைக் காணவில்லை என்று சொல்ல முடியுமா?’‘நேரில் பார்க்காவிட்டாலும், கடிதம் மூலம் சுலோவிடம் அப்படியொரு நெருக்கத்தை ஏற்படுத்தியிருந்தது நிஜம்தான்’‘சௌத்ரியை திருமணம் செய்து கொள்ள முடிவானதும், முதலில் சுலோவுக்குத்தானே எழுதினாள்? இனி கல்கத்தாவில் இருக்க மாட்டேன், ஊட்டி போனதும், புது முகவரி தருகிறேன் என்று போன வாரம்தானே எழுதினாள்?’பெட்டியிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு, அவசரமாகத் தயாரானாள். அறையைப் பூட்டிக் கொண்டு, வெளியில் வந்து, ஆட்டோவை அழைத்து, சுலோவின் விலாசம் சொன்னாள்
Disponible desde: 03/02/2024.
Longitud de impresión: 81 páginas.

Otros libros que te pueden interesar

  • Detective DK - THE SECOND CASE : The Shadow Army - A Ruthless Mission Four Officers Dead One Mind to Solve It - cover

    Detective DK - THE SECOND CASE :...

    Narshen Kaviyan

    • 0
    • 0
    • 0
    அடுத்தடுத்து ஒரே நாளில் கொல்லப்பட்ட 4 அதிகாரிகள். காரணம் தெரியாமல் முழிக்கும் ஒட்டுமொத்த காவல்துறை, ஆனால் அந்த கொலையாளிகளை எப்படி கண்டுபிடித்தான் DK? முழு கதையையும் கேளுங்கள், மிக சுவாரசியமாக இருக்கும். 
    Aduthaadutha orae naal-la 4 officers kolai. Kaaaranam theriyama muzhingina police department… aana andha kolaiyaaligala eppadi kandupidichaan DK? Moththa kathaiyum kelaunga… romba interesting-a irukum! 
    Four officers murdered in one day. The Tamil Nadu police force is in shock. There are no leads, no warning, and no motive. Panic spreads. Enter Detective DK, Chennai’s sharpest private investigator, with his brilliant assistant Rishi. They begin tracing the pattern behind the murders — a shadow network, a forgotten betrayal, and a silent army that never truly disbanded. Can DK expose the minds behind these perfectly timed killings before the next officer falls? The Shadow Army is the electrifying second installment in the Detective DK Investigations series. Prepare for sharp twists, deep conspiracies, and raw truths that redefine justice.
    Ver libro
  • Poiman Karadu | அமரர் கல்கியின் பொய்மான் கரடு - cover

    Poiman Karadu | அமரர் கல்கியின்...

    Kalki R. Krishnamurthy

    • 0
    • 0
    • 0
    Welcome to another masterpiece by Amarar Kalki! In this video, we present the full audiobook of "Poiman Karadu", a gripping mystery thriller that will keep you on the edge of your seat. Unlike his historical novels, this is a social thriller set in modern times (of that era) filled with secrets, spies, and suspense. 
    வரலாற்று நாவல்களின் மன்னன் அமரர் கல்கி எழுதிய மற்றுமொரு அற்புதமான படைப்பு "பொய்மான் கரடு". பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற பிரம்மாண்ட வரலாற்று நாவல்களை எழுதிய கல்கி, சமூக பின்னணியில் எழுதிய ஒரு விறுவிறுப்பான மர்ம நாவல் (Mystery Thriller) இது! கடைசி வரை உங்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் ஒரு திரில்லர் அனுபவம்! இந்தக் கதையின் முடிவு நீங்கள் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கும். 
    Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏
    Ver libro
  • Detective DK - Third Case: Sembaruthi Maranam (செம்பருத்தி மரணம்) - One dog saw it all - cover

    Detective DK - Third Case:...

    Sindhu

    • 0
    • 0
    • 0
    பணக்கார தொழிலதிபரின் மர்ம கொலை... அமைதியான செம்பருத்தி தோட்டத்தில் நடந்த கொடூரம்... ஒரே ஒரு சாட்சி - ஒரு நாய்! Detective DK விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் உங்களை திகைக்க வைக்கும்! யாரும் எதிர்பார்க்காத திருப்பம்... 
    Panakkara thozhiladhibarin marma kolai… amaidhiyaana Sembaruthi thottathula nadandha kodooram! Oru maathram saatchi – oru naai! Detective DK-oda visaranaila veli vantha adhirchi thaagavalgal unga mind-a shock pannum! Yaarum ethirpaarkkaadha thiruppam awaits… 
    A wealthy businessman is found dead in his luxury villa - inside a peaceful hibiscus garden. No signs of a forced entry. No human witnesses. Just one living soul that saw it all: a dog. As the police close the case as a suicide, Detective DK and his trusted partner Rishi are brought in by the victim’s daughter, who senses something deeper - a hidden truth. The investigation unravels shocking secrets: greed, betrayal, and a silent companion who holds the key. But can a dog’s behavior really lead to a killer? Sembaruthi Maranam is a gripping, emotionally charged mystery - the third case in the Detective DK Investigations series. You’ll never guess how it ends.
    Ver libro
  • Aetho Nadakirathu - cover

    Aetho Nadakirathu

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    பிரபல மனநல மருத்துவர் அமிர்தவர்ஷினி, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருகிறார், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் எதிர்பாரத விதமாக நிகழ்ச்சி அரங்கில் கொல்லபடுகிறார்..போலீஸ் வரவழைக்க ப்படுகிறார்கள் ,போலீஸின் யூகம் படி அரங்கில் உள்ள ஒருவரால் தான் கொலை நடந்திருக்கிறது,அது யார் ? எதற்காக என்ற ஆவலா? அதற்கு கேளுங்கள்
    ஏதோ நடக்கிறது!
    Ver libro
  • Aah - cover

    Aah

    Sujatha

    • 0
    • 0
    • 0
    கதையின் நாயகன் கம்ப்யூட்டர் மென் பொருள் எழுதுவதில் விற்பன்னன். பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவன். அன்பான அம்மா, அழகான மனைவி, கை நிறைய சம்பாத்தியம் என்கிற அவனது சந்தோஷ வாழ்க்கையில் திடீரென்று அவன் மண்டைக்குள் ஏதோ ஒரு குரல் கேட்கத் தொடங்குகிறது. அது அவனுக்குக் கட்டளையிடுகிறது. வசப்படுத்த முயற்சிக்கிறது. தற்கொலைக்குத் தூண்டுகிறது. இதைத் தொடர்ந்து ஸ்பிலிட் பர்சனாலிடி, முற்பிறவி, ஆவி என அலைக் கழிக்கப்பட்டு, கொலை, கைது, கோர்ட் விசாரணை என்கிற சமயத்தில் கதைக்குள் கணேஷ், வஸந்த் நுழைகிறார்கள்.
    Ver libro
  • Ippadiku Oru Indian - One Man One Nation A Deadly Secret - cover

    Ippadiku Oru Indian - One Man...

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    கால பைரவன் கவனிக்கிறான்! அடுத்த 2 நாட்களுக்கு கீழே குறிப்பிட்டுள்ள டெலிபோன் எண்களை உபயோகிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியநேரம் இது. சிறிது ஏமாந்தாலும் உயிரை இழக்க வேண்டி வரலாம். மொத்தம் 5 டெலிபோன் எண்கள். இந்த எண்களை உபயோகிக்கிற நபர்களில் யாரேனும் ஒருவர்க்குத்தான் அந்த ஆபத்துஏற்படும். ஒருவர்க்கு ஆபத்து ஏற்பட்டு விட்டால் மற்ற 4 பேரும் தப்பித்துக் கொள்வார்கள். இந்த அறிவிப்பை யாரும் அலட்சியப் படுத்த வேண்டாம்." இப்படிப்பட்ட அறிவிப்பை தொடர்ந்து பலமுக்கியமான மனிதர்கள் கடத்தப்படுகிறார்கள். எதற்காக இப்படி செய்கிறார்கள்? இவர்களுடைய நோக்கம் என்ன? இதுதான் இந்த கதையின் கரு. இப்படிக்கு ஒரு இந்தியன் இந்த நாவல் 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது. 
    Kaala Bairavan gavanikkiraan! Adutha 2 naatkalukku keezhe kurippittulla telephone engalai upayogikkiraargal echcharikkaiyaaga irukka vendiya neram idhu. Siridhu emaandhaalum uyirai izhakkanum-nu varalaam. Mottam 5 telephone numbers. Indha engalai upayogikkira nabarhalil yaareno orutharkuthaan andha aabathu erpadum. Oruvarukku aabathu nadandha udane, matra 4 perum thappiththu kolvaargal. Indha arivippai yaarum alatchiyam paduththa koodaadhu. Ippadippatta arivippai thodarndhu, pala mukkiyamaana manidhargal kadaththappadugiraargal. Etharkaga ippadi seyhgiraargal? Ivarhalin nokkam enna? Idhudhaan indha kathaiyin karu. Ippadikku Oru Indian indha noval 2009-aam aandil velivandhadhu.
    Ver libro