Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன் - cover

நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்

Shelley Admont, KidKiddos Books

Publisher: KidKiddos Books

  • 0
  • 0
  • 0

Summary

“நான் நன்றியுடன் இருக்கிறேன்” என்ற இந்தக் கதை நம் வாழ்வில் நாம் எவ்வளவு எளிதாக எல்லா சிறு சிறு விஷயங்களுக்காக கூட நன்றியுடன் இருக்கலாம் என்பதை உணர வைக்கிறது. காலையில் கதகதப்பான சூரிய உதயம் தொடங்கி இரவு நமக்கு மிகவும் பிடித்தமான ஒரு டெட்டி பியர் பொம்மை கட்டியணைத்து உறங்கும் வரை எல்லோருக்கும் நன்றியுடன் இருக்க பல வழிகள் உண்டு என்பதை உணர்த்துகிறது.
Available since: 11/02/2024.
Print length: 34 pages.

Other books that might interest you

  • Avvaiyar Nalvazhi - Tamil Audio Book - நல்வழி - ஔவையார் பாடலும் விளக்கமும் - cover

    Avvaiyar Nalvazhi - Tamil Audio...

    Avvaiyar

    • 0
    • 0
    • 0
    நல்வழி பாடல் என்பது ஒளவையார் எழுதிய நற்பண்பு மற்றும் ஒழுக்கக் கவிதைகளின் தொகுப்பு. குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் வாழ்க்கை நெறி, ஒழுக்கம், மரியாதை மற்றும் நல்லொழுக்கப் பயிற்சிகளை எளிமையாக கற்றுத்தரும் இந்த நூல், தமிழ் கல்வி மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்குகிறது. 
    Show book
  • Raja Kabilan - cover

    Raja Kabilan

    Shobha Viswanath

    • 0
    • 0
    • 0
    ருசியான சாறுள்ள மாம்பழத்தை ருசித்த பிறகு, பெனாரஸ் மன்னர்
    அவரது இராணுவத்துடன் இந்த மாம்பழங்கள் காய்க்கும் குரங்கு ராஜ்ஜியத்தை தேடி செல்கிறார். குரங்கு ராஜா கபி அவரது குடிமக்களை பாதுகாக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்க முடியுமா?
    Show book
  • தொல்காப்பியம் - cover

    தொல்காப்பியம்

    தஞ்சை தொல்காப்பியர்

    • 0
    • 0
    • 0
    தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இந்நூலை இயற்றியவர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. பழங்காலத்து நூலாக இருப்பினும் இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே. 
    தொல்காப்பியம் 1610 (483+463+664) நூற்பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது எழுத்ததிகாரம் தனிமொழியிலும், புணர்மொழியிலும் உள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது சொல்லதிகாரம் மொழித்தொடர் அமையும் பாங்கைச் சொல்கிறது. மூன்றாவது பொருளதிகாரம், எழுதப்படும் நூலிலுள்ள வாழ்க்கைப் பொருளையும் அப்பொருள் சொல்லப்பட்டுள்ள யாப்பு, அணி முதலான பாங்குகளையும் தமிழ்மரபையும் விளக்குகிறது. 
    எழுத்ததிகாரம் 
    நூல் மரபு மொழி மரபு  பிறப்பியல்  புணரியல் தொகை மரபு உருபியல் உயிர் மயங்கியல்  புள்ளி மயங்கியல்  குற்றியலுகரப் புணரியல்  
    சொல்லதிகாரம் 
    கிளவியாக்கம் வேற்றுமை இயல் வேற்றுமை மயங்கியல் விளி மரபு பெயரியல் வினை இயல் இடையியல் உரியியல் எச்சவியல் 
    பொருளதிகாரம் 
    அகத்திணையியல் புறத்திணையியல் களவியல்  கற்பியல்  பொருளியல் மெய்ப்பாட்டியல் உவமவியல் செய்யுளியல் மரபியல் 
    தொல்காப்பியரைப் புலம் தொகுத்தோன் என்று தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்த பனம்பாரனார் குறிப்பிடுகிறார். புலம் என்னும் சொல் இலக்கணத்தைக் குறிக்கும். இலக்கணம் என்னும் சொல்லும் தூய தமிழ்ச்சொல்லே. இதனை இலக்கணம் - சொல்விளக்கம் என்னும் பகுதியில் காணலாம். 
    தொல்காப்பிய நூற்பாக்கள் அனைத்தையும் ரமணியின் நேர்த்தியான வாசிப்பில் கேட்கலாம்.
    Show book
  • Kadhai Kadhayam Karanamam - Vol 1 - கதை கதையாம் காரணமாம் - Stories for Children - cover

    Kadhai Kadhayam Karanamam - Vol...

    Pavala Sankari

    • 0
    • 0
    • 0
    Vol 1. Childrens stories including moral value. குழந்தைகளுக்கான சிறுகதைத் தொகுப்பு 
    Show book
  • Pavalakkoti - cover

    Pavalakkoti

    Pukazhendi

    • 0
    • 0
    • 0
    நம் இதிகாசங்கள், புராணங்கள் எல்லாவற்றுக்கும, குறிப்பாக ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றுக்கு மூன்று மரபுகள் இருக்கின்றன – காவிய மரபு, கலை மரபு மற்றும் வழிபாட்டு மரபு. அதிலும் மகாபாரதத்தில் கலை மரபில் பல பிராந்திய அளவிலான கதைகள் கிளைத்திருக்கின்றன அல்லது இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த மரபு சில சமயம் வழிபாட்டு சடங்குகளாகவும் பரிணமித்திருக்கறது. 
    தமிழகத்தைப் பொறுத்த வரை நாட்டுப் பாடல்கள், நாட்டார் கதைகள் – குறிப்பாக புகழேந்திப் புலவர் 15-ஆம் நூற்றாண்டில் எழுதியதாக சொல்லப்படும் அம்மானைகள் – கலை மரபின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன. இவை பாட ஏற்றவை. பாடவே எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏறக்குறைய ஆசிரியப்பாவின் சந்தத்தில் அமைந்திருக்கின்றன. பிற்காலத்தில் இவற்றின் அடிப்படையில் இசை நாடகங்கள், தெருக்கூத்துக்கள் எழுதப்பட்டு நடிக்கப்பட்டிருக்கின்றன. 
    கதைப்பாடல் காவிய மரபு என்றும் சொல்லலாம். அது என்னவோ தெருக்கூத்தில் பாரதக்கதைகள் அதிகம், ராமாயணம் அதிகமாகக் காணப்படுவதில்லை. 
    அபிமன்னன் சுந்தரி மாலை, அல்லி அரசாணி மாலை, ஏணியேற்றம், பவளக்கொடி மாலை, புலந்திரன் களவு மாலை, புலந்திரன் தூது, பொன்னருவி மசக்கை, மின்னொளியாள் குறம், திரௌபதி குறம், அல்லி குறம், விதுரன் குறம், பஞ்சபாண்டவர் வனவாசம், சுபத்திரை மாலை ஆகியவற்றை புகழேந்திப் புலவர் எழுதி இருக்கிறாராம். அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை ஆகியவை புகழ் பெற்றவை.
    Show book
  • Avvaiyar Aathichudi - Tamil AudioBook - பாடலும் விளக்கமும் - cover

    Avvaiyar Aathichudi - Tamil...

    Avvaiyar

    • 0
    • 0
    • 0
    ஆத்திசூடி என்பது  ஒளவ்வையார் எழுதிய புகழ்பெற்ற நூல். இந்நூலில் தமிழ் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு நல்லொழுக்கக் கருத்து வழங்கப்பட்டுள்ளது. 
    இதில் தர்மம், ஒழுக்கம், கல்வி, அன்பு, அடக்கம், பணிவு, கடமை போன்ற வாழ்க்கை வழிகாட்டும் நெறிமுறைகள் எளிமையாகவும் சிறப்பாகவும் சொல்லப்பட்டுள்ளன. 
    ஆத்திசூடியை படிப்பதன் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒழுக்க நெறி, பண்பாடு, மனிதநேயம் ஆகியவற்றை எளிதில் கற்றுக் கொள்ள முடியும். 
    இது தமிழ் இலக்கியத்தின் அடித்தள நூல்களில் ஒன்றாகவும், பள்ளிக் கல்வியில் அவசியமான பாடமாகவும் போற்றப்படுகிறது.
    Show book