Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
தேவி - cover

தேவி

ரமணிசந்திரன்

Publisher: Publishdrive

  • 0
  • 0
  • 0

Summary

தேவிக்குத் தனியாகச் சிந்திக்க வேண்டியிருந்தது!‘என் தோழியைப் பார்க்கப் போகிறேன்’ என்று அத்தையிடம் சொன்னாள். அத்தையின் பதிலை எதிர்பாராமலே விரைவாக வெளியே நடந்து விட்டாள். சற்றுத் தயங்கினால் கூட அத்தை தடுத்து விடுவாள் என்பது அவளுக்குத் தெரியும். இப்போதுகூட தேவிக்காக அவளுடைய தங்கை செல்வி அத்தையிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு இருப்பாள் என்பது தேவிக்கு செந்தாமரை தேவிக்கு நன்றாகத் தெரியும். ஆனால் என்ன செய்வது? சுயமான சிந்தனைக்கு அந்த வீட்டில் இடமே கிடையாதே, சிந்திக்காமல் எப்படிச் செயல்பட முடியும்?செந்தாமரை தேவி, வெண் தாமரைச் செல்வி. ஆகா நிரம்பவும் பொருத்தம் பார்த்துதான் அப்பாவும், அம்மாவும் பெயர் சூட்டி விட்டார்கள். தன் தோழிக்கு ஒரு கடிதம் எழுத வேண்டுமானால் உறைவாங்க இருபது பைசா கூட தேவியிடம் கிடையாது! செல்வியோ அத்தையின் அதட்டலில் எட்டாவதோடு படிப்பை நிறுத்தி விட்டாள். தேவியின் திடமும் துணிவும் அவளுக்கும் இருந்திருந்தால் அவளும் மேலே படித்திருப்பாள். ஆனால், அவள் வெறும் கோழை, முதுகெலும்பே கிடையாது.லேசான புருவச் சுளிப்புடன் தேவி மேலும் வேகமாக நடக்கலானாள்.வைகையின் வெண்மணல் பரப்பு விரிந்து அகன்று பரந்து கிடந்தது. “வா மகளே, உனக்கு என்ன வேதனை? என்னிடம் சொல்லி ஆறுதல் பெற்றுக் கொள்’ என்று ஓடையாகச் சென்ற ஆறும் மணலும் அழைப்பது போல் தேவிக்குத் தோன்றியது. சட்டென விழிகளில் நீர் மல்கியது. சுற்றுப்புறத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாதிருந்தால் அப்படியே குப்புற விழுந்து அழுதிருப்பாள்.அழுதிருப்பாளா! அதுவும் சந்தேகம்தான். தேவியைப் பொறுத்தவரையில் அழுவது கோழைத்தனம். அதிலும் மற்றவர் பார்க்க அழுவது என்றால் சே! அவமானம்! ஆத்திரத்துடன் தலையைச் சிலுப்பிக் கொண்டாள். நிமிர்ந்து நேராக நடந்தாள். தன் வழக்கமான இடத்தை அடைந்தாள்.
 
வைகை ஆற்றுப் பாலத்தின் ஒருபுறமாக பாலத்தைத் தாங்கும் கரையோரத் தூண் மீது சாய்ந்தபடி, அவள் அமர்ந்தாள். மெல்லிய நீண்ட விரல்கள் பட்டு மணலில் கோலமிட்டன. பூமணலின் பூக்கோலம், பாவையின் மனதிலோ எண்ணத்தின் கோலம்.எண்ணுவதற்கும் அதிகமாக ஒன்றும் இல்லை. சசி அக்கா சொல்லுவதை ஏற்பதா வேண்டாமா? இரண்டில் ஒன்று முடிவு செய்ய வேண்டும்.செல்விக்கும் அவளுக்கும் இந்தப் பிறவியில் ஒரு விடிவு காலம் வேண்டும் என்றால், சசி அக்கா சொல்வதை ஏற்பதுதான் வழி. ஆனால், குடும்பத்தை விட்டுப் பிரிந்தாக வேண்டும். பிரிய முடியாதபடி யாருக்கும் யாரிடமும் பற்றும் பாசமும் உருகி ஓடுவது ஒன்றும் இல்லைதான். ஆனால் செல்வியும் தேவியும் மட்டுமே குடும்பம் என்று ஆகிவிட வேண்டியதிருக்கும். ஒரு கவலை கலக்கம் என்றால், காப்பதற்குப் பெரியவர்கள் இருக்கமாட்டார்கள்.இப்போதும் கலக்கத்தை தீர்க்க யாருமே கிடையாது. என்றாலும் தனியே இருக்கும் பெண்கள் தானே என்று யாரும் வாலாட்ட முடியாது. அதுவும்தான் எப்படிச் சொல்வது? அத்தையின் அக்கா மகன் ஒரு தடியன் வந்திருக்கிறானே அவன் செல்வியைப் பார்த்து விசில் அடிப்பதும் கொச்சையாகப் பாடுவது... எல்லாம் அத்தை கொடுக்கும் இடம். செல்வியும் பயந்து ஓடுகிறாள். அந்த நாய் விரட்டுகிறது. திரும்பி நின்று ஒருதரம் முறைத்தால் கூடப் போதும். அதற்குக் கூடத் துணிவின்றி நடுங்கிக் கொண்டு கிடக்கிறாள் மக்கு!இந்தக் கஷ்டத்தில் இருந்து அவளை மீட்க எந்தப் பெரியவர்கள் இருக்கிறார்கள்? இந்தப் பெரியவர்களை நம்பி எட்டிப் பார்க்கும் விடிவு காலத்தை விட்டு விடுவதா?சிந்தனையில் மூழ்கிக் கிடந்த தேவிக்கு சுற்றுப்புறமே மறந்திருந்தது.‘சுளீர்’ என்று யாரையோ அறையும் ஓசையும் “அய்யோ சத்தியமாய் நான் திருடவில்லையே” என்று ஒரு சிறு பெண்ணின் கதறலும் வெகு அருகில் கேட்கவே திடுக்கிட்டு எழுந்தாள்.கதறிய குரல் அறிமுகமானது போலவும் தோன்றியது. சுற்று முற்றும் பார்த்தாள். பாலத் தூணின் மறுபுறம்தான் அங்கே விரைந்து ஓடினாள்
Available since: 04/03/2025.
Print length: 136 pages.

Other books that might interest you

  • Vellikizhamai Raathiri Aval Sethu Ponaal - cover

    Vellikizhamai Raathiri Aval...

    Sivasankari

    • 0
    • 0
    • 0
    திருமதி. சிவசங்கரி அவர்களின் சிறுகதைத் தொகுப்பின் இரண்டாம் பாகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கதைகளும் முதல் தொகுப்பினைப் போன்று சுவாரஸ்யமாகவும் ஆவலைத்தூண்டும் வகையிலும் அமைந்துள்ளன. இத்தொகுப்பில் யதார்த்தமான நடையில் வாழ்வின் தினசரி நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டுகிறன. நாம் தினமும் சந்திக்கும் நிகழ்வுகளை நயம்பட வழங்குகியுள்ளார்.
    Show book
  • Madhyastharu - cover

    Madhyastharu

    Shanthinath Desai

    • 0
    • 0
    • 0
    ಶಾಂತಿನಾಥ ದೇಸಾಯಿ ಅವರು ಪ್ರಮುಖ ಆಧುನಿಕ ಕನ್ನಡ ಲೇಖಕರಾಗಿದ್ದಾರೆ ಮತ್ತು ಅವರ ಕಥೆಗಳು ಮಾನವ ಸಂಬಂಧಗಳ ವಿಷಯಗಳೊಂದಿಗೆ ವ್ಯವಹರಿಸುತ್ತದೆ ಮತ್ತು ಬದಲಾಗುತ್ತಿರುವ ಸಮಾಜದ ಸವಾಲುಗಳನ್ನು ಮತ್ತು ಸಾಂಪ್ರದಾಯಿಕ ಮೌಲ್ಯಗಳಿಂದ ಅದರ ದಿಕ್ಚ್ಯುತಿಯನ್ನು ಅನ್ವೇಷಿಸುತ್ತದೆ.
    Show book
  • குயில்பாட்டு - cover

    குயில்பாட்டு

    Bharathiyaar

    • 0
    • 0
    • 0
    ரமணியின் குரலில் பாரதியாரின் குயில் பாட்டு... புதுவை நகரின் மேற்கில் ஒரு மாஞ்சோலை. அங்கு ஒரு நாளில் விந்தைக் குயிலொன்று பாடியது. "காதல் காதல் காதல்  காதல் போயின் காதல் போயின் சாதல் சாதல் சாதல்" இன்ப வெறியும் துயரும் கலந்த குரலில் குயில் பாடியதைக் கவிஞன் கேட்டான். குயிலே! உன் துயரம் யாது என்று அதனிடம் வினவினான். "நான் மனிதர்களின் மொழியெல்லாம் அறியும் பேறு பெற்றேன்; பாட்டில் நெஞ்சைப் பறி கொடுத்தேன்; இப்போது காதலை வேண்டிக் கரைகின்றேன்" என்று கூறியது. கவிஞனுக்குக் குயிலின் மீது அடங்காக் காதல். மற்ற பறவைகளெல்லாம் சோலைக்கு வந்துவிட்டன. குயில் கவிஞரை நான்காம் நாள் அவ்விடத்திற்கு வந்து விடக்கூறி மறைந்து விடுகிறது. கவிஞனின் காதல் மனம் உறங்கவில்லை; காதலியைப் பிரிந்த துயர் வருத்த மறுநாளே சோலைக்குச் செல்கின்றான். அங்குக் குயில் ஒரு குரங்கோடு காதல்மொழி பேசிக் கொண்டிருந்தது. நீசக் கருங்குயில் அதே பாட்டைப் பாடிக் குரங்கின் அழகைப் பாராட்டிக் கொண்டிருந்தது. கவிஞன் வாளைக் குரங்கின மீது வீச, குரங்கு தாவி ஒளிந்தது. குயிலும் பிற பறவைகளும் மறைந்தன. இரவு முழுவதும் துயில் கொள்ளாமல் இருந்து மூன்றாம் நாள் காலையில் கவிஞன் சோலைக்குச் சென்றான். அப்போது குயில் கிழக்காளை மாடு ஒன்றோடு காதல் மொழி பேசிக் கொண்டிருந்தது. கவிஞன் வாளை உருவிக் காளையின் மீது வீச, காளை ஓடிவிடக் குயிலும் மற்ற பறவைகளும் மறைந்தன. நான்காம் நாள் கவிஞன், சோலையிலே குயிலைச் சந்தித்து அதன் பொய்மையை எடுத்துரைக்கின்றான். குயில் தன் முற்பிறவிக் கதையைக் கூறுகின்றது. கவிஞன் குயிலின் பழம்பிறப்பையும் மாடன் குரங்கனின் மாயச் செயல்களையும் உணர்ந்து தெளிகிறான். குயிலை முத்தமிடுகிறான். குயில் மறைந்து அங்கே கொள்ளை வனப்புடை
    Show book
  • Mussanje Murali - cover

    Mussanje Murali

    Vasudhendra

    • 0
    • 0
    • 0
    ತಾಯಿ ಮತ್ತು ಮಗನ ನಡುವಿನ ಸೂಕ್ಷ್ಮ ಒಡನಾಟದ ಹೃದ್ಯ ಬರಹಗಳು. ಈ ಪುಸ್ತಕಕ್ಕೆ ರಾಜ್ಯ ಸಾಹಿತ್ಯ ಅಕಾಡೆಮಿಯ ಪುಸ್ತಕ ಬಹುಮಾನ ಬಂದಿದೆ.
    Show book
  • Cheramanperumalnayanar Hymns - cover

    Cheramanperumalnayanar Hymns

    Cheraman Perumal Nayanar

    • 0
    • 0
    • 0
    கலைகளுக்கு இருப்பிடமான தமிழ்ப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர் சுந்தர மூர்த்தி நாயனார். சுந்தரரின் தோழர் சேரமான் பெருமாள் நாயனார். சுந்தரர் வெள்ளை யானையின் மீது கயிலைக்குச் சென்றார். தோழர் சேரமான் பெருமாள் நாயனார் இதனை அறிந்து வெள்ளைக் குதிரையின் மீது ஏறி ஐந்தெழுத்தை ஓதி உடன் சென்று கயிலையடைந்தார். சேரமான் பெருமாள் கயிலை மலைக்கு வெள்ளைக் குதிரையின் மேல் ஏறி உடம்போடு கயிலை சென்றது கொங்கு மண்டலம் எனக் கூறப்பட்டுள்ளது. பண்டு சேரநாட்டையும் கொங்கு நாட்டையும் ஒன்றாகவே . கொங்கு நாடு தான் சேர நாடு. 
    பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை, திருக்கைலாய ஞான உலா ஆகிய மூன்று பிரபந்தங்களை அருளிச் செய்தவர் சேரமான் பெருமாள் நாயனார்.[
    Show book
  • Thaayaar Paadham - cover

    Thaayaar Paadham

    Jeyamohan

    • 0
    • 0
    • 0
    மனதின் சமன் குலைந்த நிலையை சீர்படுத்தும் எத்தனமே எழுத்து என்கிறார் ஜெயமோகன். 
    அவ்வகையில் , இக்கதையில் வரும் எழுத்தாளருக்கு, இரு தலைமுறைகளாக விளக்க முடியாத குடும்பச்சூழலே தன் மனதின் சமநிலையை சீர்குலைக்கவும் செய்து தன் எழுத்துக்கு தூண்டுகோலாகவும் அமைவதைக் குறித்து தன்  நண்பரிடம் மனம் திறந்து அளவளாவுகிறார். செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்வதன் பின் உள்ள அறம் என்ன? அது யாருக்காக? கேளுங்கள் தாயார் பாதம்.
    Show book