ஓடாதே! ஒளியாதே!
ரமணிசந்திரன்
Publisher: Pocket Books
Summary
முரளி, ஜமுக்காளத்தை உதறி - முன்னறையில் விரித்தான். கல்யாணத் தரகர் கன்னையன் ஒரு கை பிடித்து மடிப்புகளை நீக்க உதவினார்.வாயில் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டே சொன்னார்.‘‘தாம்பூலத் தட்டை கொண்டு வந்து வை. அப்படியே நாலு ஊதுபத்தியையும் கொளுத்தி வை. கமகமன்னு வாசனையா இருக்கட்டும்...’’ தும்பைப் பூ நிறத்தில் வேஷ்டி, சர்ட் அணிந்த முரளி, அவர் சொன்னபடி செய்தான்.‘‘தரகரே... மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எத்தனை மணிக்கு வர்றாங்க?’’“சரியா நாலு மணிக்கெல்லாம் வந்துருவாங்க. அதுக்கு முன்னால உன் தங்கை காயத்ரி ரெடியாயிரணும். அவங்க வந்தப்புறம் புடவையைச் சொருகறதும், ஜடையைத் திருகறதுமா இருந்தா நல்லாயிருக்காது. வந்ததும் டாண்ணு அவ ஸ்வீட், காரத்தை தட்டில் கொண்டு வரணும். ஆமா... ஸ்வீட், காரமெல்லாம் தயார் பண்ணியாச்சா...?’’‘‘கடைல வாங்கி வெச்சுட்டேன். காயத்ரிக்கு சரியாய் போட வராதே...’’அடுத்த அறையில் காயத்ரிக்கு அலங்காரம் பண்ணி விடும் பக்கத்து வீட்டுப் பெண்களின் சிரிப்பொலிகள் கேட்டது.முரளி, தரகரை ஏறிட்டான்.‘‘எல்லா விஷயத்தையும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்ககிட்டே மறைக்காம சொல்லிட்டீங்க இல்லே?’’“சொல்லிட்டேம்ப்பா...’’‘‘அப்பா இறந்தப்புறம்தான் எனக்கு குடும்ப பாரம்ன்னா என்னான்னு தெரிஞ்சது. அது வரைக்கும் ரெஸ்டாரண்ட்ல ஜாலியா ஃப்ரெண்ட்ஸோட புகை விட்டுட்டிருந்தேன்..“உணர்ந்துட்டே இல்லே...?’’“ரொம்ப லேட் தரகரே. இப்ப ஒரு டப்பாக் கம்பெனில - மாசம் ஆயிரம் ரூபா வாங்கிட்டிருக்கேன். முப்பது நாளைக்கு ஆயிரம் ரூபா எந்த மூலைக்கு? சல்லிக்காசு சேமிக்க முடியலை. ‘தங்கச்சிக்கு வயசு ஏறிட்டே போகுது. உங்கப்பா மாதிரியே நீயும் இவளை விட்டுரப் போறியா? அவ கழுத்துல மூணு முடிச்சு விழ வேண்டாமா?’ எல்லாரும் இதையே கேட்டு என்னை உசுப்பி விட்டாங்க. கல்யாணச் சந்தைல இறங்கினப்புறம் மலைச்சுப் போயிட்டேன். இருபது பவுன்... நாப்பது பவுன்னு கூசாமக் கேக்கறாங்க...! காயத்ரிக்கு இந்த ஜன்மத்தில் ஒரு நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணித்தர முடியுமான்னு திணறிட்டிருக்கும் போது நல்லவேளையா நீங்க வந்தீங்க...’ தரகர் சிரித்தார் வாய் கொள்ளாமல்...‘‘இனிமே கவலையை விடு... உன்னோட தங்கச்சிக்கு கல்யாணம் நடந்த மாதிரிதான்...’’தரகர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாசலில் சரேலென ஒரு டாக்சி வந்து நின்றது. கதவுகள் நான்கும் சட்டென்று ஒரே நேரத்தில் விரிந்தன.பட்டுப்புடவையில் மின்னும் மாப்பிள்ளையின் அம்மா. சில்க் ஜிப்பா, வேஷ்டி தரித்த அப்பா. மாப்பிள்ளைப் பையன் பூப் போட்ட சட்டையை கறுப்பு பேண்ட்டில் இன் பண்ணியிருந்தான். தவிர இரண்டு உறவுக்கார நபர்கள். தரகர் எதிர்கொண்டார்.‘‘வாங்க... வாங்க...’’ முரளி பவ்யமாய் கும்பிட்டான். மாப்பிள்ளைக்கு மட்டும் ஒரு ஃபோல்டிங் சேர் போடப்பட, மற்றவர்கள் ஜமுக்காள விரிப்பில் தங்களை இருத்திக் கொண்டார்கள்.‘‘அட்ரஸ் கரெக்டா கண்டுபிடிச்சுட்டீங்களா?’’ கேட்ட தரகரைப் பார்த்து புன்னகைத்தார் மாப்பிள்ளையின் அப்பா
