Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
முடிந்தால் உயிரோடு - cover

முடிந்தால் உயிரோடு

ரமணிசந்திரன்

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

மாருதியை போர்டிகோவுக்குள் கொண்டு போய் அடக்கி கீழே இறங்கின மகளை ஆர்வமாய் எதிர்கொண்டார் சத்தியநாராயணன். பப்ளிமாஸ் நிற வழுக்கை மண்டைக்கு நடுவில் வெள்ளி இழைகளாய் நான்கைந்து நரைமுடிகள் திசைக் கொன்றாய் கோபித்துக் கொண்டு நிற்க தன் பெரிய சைஸ் மூக்கின் மேல் வெள்ளி பிரேமிட்ட கண்ணாடியை உட்கார்த்தி வைத்திருந்தார்.“என்னம்மா வர்ணா... போன காரியம் என்னாச்சு...?”“சக்சஸ்தாம்பா...?”“எவ்வளவு வெச்சு பாக்டரியை எடுத்தே...?”“இருபத்தஞ்சு லட்சம்...'“மோசமில்லை. இன்னிக்கி இருக்கிற நிலவரப்படி அந்த ஏரியாவில் ஒரு செண்ட் அறுபதாயிரத்துக்கு போகும்... சீப்தான்...! மாப்பிள்ளை என்ன சொன்னார்.”“உங்க மாப்பிள்ளைதானே... ரொம்ப கோபப்பட்டார். உன்னை இங்கே யார் வரச் சொன்னதுன்னு கத்தினார்... நான் வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டேன்... வரமாட்டேனுட்டார்...”“சரி... உன்னோட அடுத்த ஸ்டெப் என்னம்மா வர்ணா...?” ஹாலில் நடந்து போய் சோபாவில் உட்கார்ந்து கொண்டே கேட்டார் சத்தியநாராயணன்.“அடுத்த வாரத்துல ஏதாவது ஒருநாள். அந்த பாக்டரியை எம்பேர்க்கு மாத்தின டாக்குமென்டரியோட அவர் வீட்டுக்குப் போகப் போறேன். பல்லு பிடுங்கின சிங்கம் மாதிரி இருக்கிற அவரை என்னோட வழிக்கு கொண்டுட்டு வரப்போறேன்... நீங்க யு.எஸ்.ஏ. போயிட்டு திரும்பி வர்றப்போ... உங்க மாப்பிள்ளை என்கிட்டகையேந்திகிட்டு நின்னுட்டிருப்பார்... உங்க நெடுநாளைய ஆசைப்படி அவரை நம்ம பாக்டரிக்கு ஒரு ஜி.எம். போஸ்ட்டுக்கு இழுத்துக்கலாம்...”“எனக்கென்னமோ நம்பிக்கையில்லேம்மா...”“எனக்கிருக்கு...”“அப்பாவும் மகளும் இப்படி நடந்துக்கிறது கொஞ்சம் கூட சரியில்லை. “பின்பக்கமாய் எழுந்த உஷ்ணமான குரலைக் கேட்டு இருவரும் திரும்பினார்கள்.அம்மாக்காரி பூரணி கோப முலாம் அடித்த முகத்தோடு நின்றிருந்தாள். வர்ணா சிரித்தாள்.“நீ சப்போர்ட் பண்ணி பேசற மாப்பிள்ளை இன்னிக்கு எங்கே உட்கார்ந்திருந்தார்ன்னு தெரியுமாம்மா...? பாக்டரி கேட்டுக்குப் பக்கத்துல டைம் ஆபீஸையொட்டின மாதிரி ஒரு நாற்காலியைப் போட்டுகிட்டு உட்கார்ந்திருந்தார். அவர் கண் முன்னாடியே பாக்டரியோட மானத்தை கொஞ்சம் கொஞ்சமா ஏலம் போட்டுகிட்டு இருந்தாங்க...”“அவரை அந்த நிலைமைக்கு கொண்டு வந்ததே... நீயும் உங்கப்பாவும் தாண்டி. அந்த நல்ல மனுஷன் உன் கழுத்துல தாலி கட்டின பாவத்துக்காக நாய் படாத பாடு பட்டுட்டார். உங்க அப்பாவோட பாக்டரியையும் கம்பெனியையும் நிர்வாகம் பண்ண அவர் வர மறுத்துட்டார்ங்கிற ஒரேயொரு காரணத்துக்காக அவரை இப்படி நடுத்தெருவுக்கு கொண்டு வந்து மானத்தை வாங்கறது நியாயமா... வர்ணா...”“அம்மா...”“என்னடி...?”“உன்னோட அழகான மாப்பிள்ளைக்கு நல்லது தானே பண்ணியிருக்கோம். ஏலத்துல யார் கைக்கோ போக இருந்த... அவரோட மெட்டல் பாக்டரியை மீட்டுகிட்டு வந்தது தப்புன்னு சொல்றியா?”“ஒரு ஆம்பிளையை இதைவிட அழகா அவமானப்படுத்தவே முடியாது வர்ணா. அவர் உனக்கு அடங்கிப் போகணும்ன்னு நீ நினைக்கிறியே... அது மகா தப்பு. உங்க அப்பா குடுக்கிற செல்லத்துல நீ ரொம்பவும் துள்ளறே... இந்த துள்ளலுக்கெல்லாம் எப்பவாவது ஒரு நாள் நீ அனுபவிக்கப் போறே...”“அப்பா...”“என்னம்மா...?”“அம்மா... சாபம் தர்றா...”“அவளுக்கு சொந்த ஊர் திருக்குவளை. புருஷன் காலடிபட்ட மண்ணை எடுத்து நெத்திக்கு இட்டுக்கிற கிராமத்து பஞ்சாங்கம்...”பூரணி வெடித்தாள். “ஆமாங்க... நான் பஞ்சாங்கம்தான். அந்த பஞ்சாங்கத்துல என்னென்ன எழுதியிருக்கோ அதைத்தான் வெள்ளைக்காரனும், ஜப்பான்காரனும் இப்போ புதுசு புதுசா கண்டு பிடிச்சிட்டு வர்றான். ஆம்பிளையை எப்படி வேணும்ன்னாலும் வளர்த்து உட்டுடலாங்க... ஆனா பொண்ணை இப்படித்தான் வளர்க்கணும்ன்னு ஒரு வரைமுறை இருக்குங்க... அவளுக்கு கொம்பு சீவி மாப்பிள்ளை மேலேயே பாய விடறது உங்களுக்கு நியாயமா படுதா...?”“வர்ணா... உங்கம்மா லெக்சர் அடிக்க ஆரம்பிச்சுட்டா. நீ சாவகாசமா உட்கார்ந்து கேளு... நான் கம்பெனிக்கு புறப்படறேன்... பாரின் டூர் கிளம்பறத்துக்குள்ளே சில பைல்ஸையெல்லாம் பார்க்கணும்...”சொல்லிக் கொண்டே போர்டிகோவில் நின்றிருந்த காரை நோக்கிப் போனார் சத்திய நாராயணன். வர்ணா அலட்சியமாய் கூந்தலை கோதிக் கொண்டே தன் அறைக்கு போக முயன்றாள்
Available since: 01/13/2024.
Print length: 88 pages.

Other books that might interest you

  • Neeyum Bommai Naanum Bommai - cover

    Neeyum Bommai Naanum Bommai

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    ராஜலிங்கம் என்னும் மிக பெரிய செல்வந்தர் தன் மகளின் சிகிச்சைக்காக உச்சிமலை சித்தரிடம் செல்கிறார்.ஒரு தீவிரவாத கூட்டம் ராஜலிங்கத்தின் சொத்தினை கைப்பற்றுவதற்காக திட்டம் தீட்டுகிறார்கள். சித்தருக்கும் தீவிரவாத கூட்டத்திற்கும் என்ன சம்மந்தம், ராஜலிங்கத்தின் மகள் உயிர் பிழைத்தாளா? தீவிரவாதிகளின் திட்டம் நிறைவேறியதா? மிக விறு விறுப்பாகவும்,  ஸ்வாரஸ்யமாகவும் கதை நகர்கிறது.
    Show book
  • Edhayum Oru Thadavai - cover

    Edhayum Oru Thadavai

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    சென்னையிலும், சிகாக்கோவிலும் மர்மமான முறையில் சில சம்பவங்கள் நடைபெறுகின்றன். அஸ்திரா தன் கணவன் சூர்யகுமார் மேல் சந்தேகம் கொள்கிறாள். இரண்டு ட்ராக்குகளில் பயணிக்கும் இந்த நாவல் க்ளைமேக்ஸில் அசர வைக்கும்.
    Show book
  • Oomatham Pookal - cover

    Oomatham Pookal

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    கார்டியாலஜிஸ்ட் அனந்த கிருஷ்ணனும், ஹரேஷூம் ஃபைவ் ஸ்டார் அந்தஸ்தோடு கூடிய மிகப் பெரிய ஹாஸ்பிடலை நடத்தி நகரில் நல்ல பெயர் எடுத்து இருப்பதால் அவர்களுக்கு எதிரிகளும் உருவாகிறார்கள். அவர்கள் ஹாஸ்பிடலுக்கு கெட்டப் பெயரை உண்டாக்க வேண்டும் என்பதற்காக மறைமுக வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அனந்த கிருஷ்ணனை கொலை செய்ய முயற்சிகள் நடக்கின்றன.
    
    போலீஸ் விசாரணையில் இறங்கி டாக்டர்கள் அனந்த கிருஷ்ணனுக்கும், ஹரேஷூக்கும் எதிராகவும், மறைமுகமாகவும் செயல்படுபவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறது, அவர்களால் முடியாமல் போகவே க்ரைம் ப்ராஞ்ச் ஆபீஸர் விவேக் அதிரடியாய் விசாரணையில்
    இறங்கி குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.
    விவேக்கின் புத்திசாலித்தனமான நுணுக்கமான புலனாய்வு நடவடிக்கைகள் மூலம் உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளி யார் என்பது தெரியும்போது அனைவர்க்கும் மிகப்பெரிய அதிர்ச்சி
    ஏற்படுகிறது.
    
    "அது எதுமாதிரியான அதிர்ச்சி என்று அறிய விருப்பமா ? "க்ரைம் த்ரில்லரான ஊமத்தம்பூக்கள் நாவலை ஒலி வடிவில் கேளுங்கள்.
    Show book
  • Aayiram Arivaal Kottai - cover

    Aayiram Arivaal Kottai

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    This story talks about the power of the Village God that stands surrounded by a fence made of weapons. The God is a guardian to all those who abide by the truth. What about those who lie? Listen to Aayiram Arivaal Kottai.
    
    ஒரு கிராமத்து சாமியின் சக்தியை சொல்லும் பரபரப்பான புதினம் இது. அரிவாளால் வேலி கட்டி நடுவில் நிற்கும் அந்த சாமி சத்தியமானது. சத்தியம் தவறுபவர்களுக்கோ அது எதிரானது. விறுவிறுப்பான கதை - ஆயிரம் அரிவாள் கோட்டை .
    Show book
  • Kodu Thaandadhe - cover

    Kodu Thaandadhe

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    There is a limit to all the atrocities that happen in this society. However, 90% of us ignore the unjust incidents around us. The rest 10% alone raise their voice against injustice. This story is about 4 such people who raise their voice. What do they do? Listen to Kodu Thaandathe.
    
    எந்த ஒரு அநியாயத்திற்கும், அக்கிரமத்திற்கும் எல்லை உண்டு. இந்த சமுதாயத்தில் நடக்கும் சில அநீதிகளை நாம் கண்டும் காணாமலும் கடந்து போய்க்கொண்டு இருக்கிறோம். நம்மில் 90% பேர் அப்படித்தான் இருக்கிறார்கள். வெகு அரிதாக உள்ள 10% பேர் மட்டுமே துணிச்சலோடு முன்வந்து குரல் கொடுக்கிறார்கள். அந்த 10% பேரில் உள்ள ஒரு நான்கு பேரின் கதைதான் இந்த கோடு தாண்டாதே. நம் தமிழ்நாட்டில் நடக்கும் அநீதிகளுக்கு ஒரு எல்லைக்கோட்டை அந்த நான்கு பேரும் வரைந்து எச்சரிக்கை விடுகிறார்கள். இந்த நால்வர் என்ன செய்கிறார்கள்? அறிய கேளுங்கள் கோடு தாண்டாதே
    Show book
  • Iravu Nera Suriyagandhi - cover

    Iravu Nera Suriyagandhi

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    ஒரு இளம் பெண்ணின் குற்றச்சாட்டை எதிர்கொண்ட காந்தியவாதியின் குடும்பம் பிரச்சனையில் சிக்குகிறது. முழு குடும்ப உறுப்பினர்களும் விசாரணை முறையில் மூழ்கியுள்ளனர். ஆனால் அவர்கள் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டபோது,
    Show book