Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
கனவு மெய்ப்பட வேண்டும் - cover

கனவு மெய்ப்பட வேண்டும்

ரமணிசந்திரன்

Publisher: Publishdrive

  • 0
  • 0
  • 0

Summary

அன்று காலையிலிருந்தே மைத்திரேயிக்கு ஒரே பரபரப்பு.பல் துலக்கி வந்ததிலிருந்தே தொடங்கிவிட்டாள்! “அம்மா, இன்று தலைக்கு ஷாம்பூ போடுவதா வேண்டாமா?” என்று தாயாரிடம் கேட்டாள்.“போட்டுக் கொள்ளேன். தலைமுடி அழகாகப் பளபளவென்று இருக்கும்!” இது அம்மா சிவகாமி.“என்னம்மா, ஷாம்பூ போடச் சொல்கிறீர்கள்! ஒரு சின்னக் காற்றுக்குக் கூந்தல் பறந்து கலைந்து போய் விடாதா?” இது மைத்திரேயி.“அப்படியானால், ஷாம்பூ போடாதே!”“என்னம்மா, நீங்கள்! அப்புறம், முகமெல்லாம் எண்ணை வழியாதா? நான் வேறு, இன்றைய நேர்முகப் பேட்டியை மறந்து, நேற்று தலையில் எண்ணை வேறு தேய்த்துத் தொலைத்தேன்!” என்று எரிச்சல்பட்டாள் மகள்.“தெரிகிறதில்லையா? பின்னே ஷாம்பூ போட்டு முடி அலசு... அட அட என்னடி நீ? காலை வேளையில், நான். அஷ்டாவதானம்’ செய்கிற நேரத்தில், இன்னும் ஒன்றாய், நீ வேறு என்ன என்னைப் போரடிக்கிறாய்? நீயாய் யோசித்து, உனக்காய்ச் சரி என்று பட்டதைச் செய், போ!” என்று மகளை விரட்டிவிட்டுத் தன் வேலையில் முனைந்தாள் தாய். “இருபத்திரண்டு வயது முடிந்துவிட்டது. இவள் வயதுக்கு நான் இவளைப் பெற்றும் விட்டேன். இவளானால் பச்சைக் குழந்தை மாதிரி எப்படிக் குளிப்பது என்று கேட்டுக் கொண்டு... இருக்கிறாள்!” என்று எரிச்சலோடு முணுமுணுத்தபடி வெட்டி முடித்த காய்களைத் தட்டில் எடுத்து வைத்தாள்.அடுத்து, அவள் வாணலியை அடுப்பில் ‘ணங்’கென்று வைத்த வேகம், தண்ணீர் மோட்டாரை நிறுத்தி விட்டு வந்த சுந்தரத்தைப் பேச வைத்தது. “பெற்றவளுக்கு ரொம்பத் தெரியும் என்று நினைத்து சின்னப்பிள்ளை ஒன்று கேட்டால் பெரிதாகச் சலித்துக் கொள்கிறாயே!”“இதோ, இதைப்பற்றித்தான் சொல்லிக் கொண்டிருந்தேன். சின்னப் பிள்ளையா, அவள்? இருபத்திரண்டு வயது முடிந்து, ஆறேழு மாதங்கள் சென்றாயிற்று ஒரு மாப்பிள்ளையைப் பார்த்துக் கல்யாணத்தைப் பண்ணி வைக்காமல், ‘ட்ராக் சூட்’ போட்டு ஆண்பிள்ளை மாதிரி ஓடக் கூட்டிப் போகிறீர்கள்! இப்போதானால் வேலைக்கு வேறே அனுப்பப் போகிறீர்கள! இப்போது அவள் சம்பாதித்து என்ன ஆகப்போகிறது? காலாகாலத்தில் ஒரு கல்யாணத்தை...’“.“என்னடி அவசரம்? இப்போதெல்லாம் இருபத்திநாலு வயதுக்கு முன்னால் யார் பெண்களுக்குத் திருமணம் செய்கிறார்கள்? கொஞ்ச காலம் சுதந்திரமாய் இருக்கட்டுமே! கல்யாணமானால் இருக்கவே இருக்கிறது, கண்டிப்பு, கட்டுப்பாடு எல்லாம். உன்னையே எடுத்துக்கொள்! பத்தொன்பது வயதில் கல்லூரிப்படிப்பு முடியும் முன்பே திருமணம் உடனே குழந்தை! என்றாவது கவலையற்று இருந்திருக்கிறாயா? பிள்ளையாவது சந்தோஷமாய் அனுபவிக்கட்டுமே என்று நினையேன்!”“கல்யாணம், குழந்தை என்றால் கட்டுப்பாடும் கவலையும்தானா? மகிழ்ச்சியாகவும்...அடடா! போங்கள் சார்! காலை வேளையில் வேலை நடுவே வந்து பேச்சுக் கொடுத்தால் இப்படித்தான். பாருங்கள்! கடுகை இரண்டாம் தடவை போட்டிருக்கிறேன்!” என்று அலுப்பும் எரிச்சலுமாக உரைத்தாள் சிவகாமி.“நல்லதுக்குச் சொல்கிற புருஷனோடு மல்லுக் கட்டினாயல்லவா! அப்படித்தான் நடக்கும். டேய், மது, மனோ, இன்றைக்கு உங்களுக்குக் காய்ப் பொரியலுக்குப் பதிலாக, உன் அம்மா கடுகுப் பொரியல் செய்திருக்கிறாளாமடா! நன்றாகச் சாப்பிடுங்கள்! நல்லவேளையாக எனக்கு மதியச் சாப்பாடு வெளியே! கலெக்டர்கள் கூட்டம் மதிய உணவோடு சேர்ந்து இருக்கிறது! தப்பித்தேன்!” என்று அவர் சிரிக்கவும் சிவகாமியின் முகம் லேசாகச் சிவந்தது
Available since: 04/03/2025.
Print length: 136 pages.

Other books that might interest you

  • Devar Kovil Roja - cover

    Devar Kovil Roja

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    இது ஒரு கிராமத்து காதல் கதை! ஒரு கள்ளனுக்கும், ஊரின் பெரும் புள்ளியின் மகளான ரோஜா என்பவளுக்கும் இடையில் உருவாகும் காதலே இதில் பிரதானம். இந்த கள்ளன் எதையும் திருட முடிந்தவன். உன்னால் என் இதயத்தை மட்டும் திருடவே முடியாது என்கிறாள் ரோஜா. கள்ளனோ திருடிக்காட்டுகிறான். காதல் மட்டுமல்ல, நினைத்து பார்க்கமுடியாத திடுக்கிடும் சம்பவங்களும் மிகுந்த ஒரு பரபரப்பு புதினம் " தேவர் கோவில் ரோஜா".
    Show book
  • Anjali - cover

    Anjali

    La Sa Ramamirtham

    • 0
    • 0
    • 0
    அஞ்சலி - பஞ்சபூத கதைகள். லா ச ராவின் அஞ்சலி தொகுப்பில் உள்ள 5 கதைகள் - பஞ்ச பூதங்களான நீர், நெருப்பு, நிலம், காற்று மற்றும் ஆகாயம் இவைகள் ஊடுருவும் நெஞ்சைத் தொடும் கதைகள்.
    Show book
  • Nankam Thirumurai - cover

    Nankam Thirumurai

    Navukkarasaar

    • 0
    • 0
    • 0
    தேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும். இந்த திருமுறைகளை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மார்கள் பாடியுள்ளார்கள். 
    முதல் இருவரும் கி.பி 7ஆம் நூற்றாண்டிலும், மூன்றாமவர் கிபி 8ஆம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது. 
    தெய்வங்கள் மீது பாடப்பட்ட ஆரம்(பாமாலை) என்பதால் தேவாரம் என்று பெயர்பெற்றதாகக் கூறுவர்.ஆனால், இசையியலில் வாரம் என்பது நடையை (இசை வேகம்) குறிக்கும் சொல்லாகும். வாரநடை என்பது முதல் நடை, இரண்டாம் நடையில் பாடுவது என்பதையே குறிக்கிறது.“பொன்னார் மேனியனே”, “தோடு டைய செவியன்” பாடல்களை, ஓதுவார்கள் முதல் நடையில் தான் பாடுகிறார்கள். முதல் நடையில் ஓரெழுத்தாக பாடுவதையே, முதல்நடை என்பர். 
    திருவதிகை வீரட்டானம் என்னும் தலத்தில் பாடிய "கூற்றாயினவாறு விலக்ககலீர்" என்று தொடங்கும் பதிகமே அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசரின் முதற் பதிகமாகும். 
    சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களை சுந்தரர் தேவாரம் என்று அழைக்கின்றனர். இப்பாடல்களை திருப்பாட்டு என்றும் அழைப்பது வழக்கம். "பித்தா பிறைசூடி" என்று தொடங்கும் தேவாரம் சுந்தரரின் முதற் பதிகம். 
    10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுத்தார்.<
    Show book
  • Ragasiyamaga Oru Ragasiyam - cover

    Ragasiyamaga Oru Ragasiyam

    Anonymous

    • 0
    • 0
    • 0
    சித்தர்பட்டி ஒரு கிராமம் -இங்கே சித்தர்கள் கட்டிய சிவன் கோயில் ஒரு அதிசயம்.இந்த கோயில் மாலை ஆறு மணியானால் மூடப்படும். ஆறு மணிக்கு மேல் கோயிலுக்குள் யார் இருந்தாலும் காலபைரவனால் கொல்லப்படுவார். ஏன் அப்படி? திருப்பமும் பரபரப்பும் நிறைந்த திரில்லர் தான் ரகசியமாக ஒரு ரகசியம்.
    Show book
  • Padma Vyugam - cover

    Padma Vyugam

    Jeyamohan

    • 0
    • 0
    • 0
    மெருகேற்றப்பட்ட உறவுகளின் புனிதங்களை உடைத்தெறிய முயன்ற முயற்சி. சக்களத்தியை நோக்கிய கூரான கேள்விகள், மாவீரனாக எண்ணியிருந்த கணவனை நோக்கிய சீண்டல்கள், அண்ணனின் மீதான கோபம் என புத்திரனை இழந்த தாய் பரிதவிப்பில் சென்ற தூரங்கள்.நியதியின் பேரியக்கம் மனிதர்களையும் அண்ட வெளியையும் இயற்கையிலுள்ள அனைத்தையும் ஒன்றாகப் பிணைத்திருக்கிறது . அதில் ஒரு சிறு துளியைக்கூட மனித மனம் அறிய முடியாது. அதை மாற்றிவிடலாம் என்று நம் அகங்காரம் சில சமயம் கூறும். அதன்படி நாம் இயங்குவோம். பிறகு தெரியும் நமது அந்த இயக்கம்கூட நியதியின் விளையாட்டுதான் என்று. மஹாபாரதத்தில் நாம் அறிந்த கதையை அறியாத கோணத்தில் சொல்லும் ஒரு கதை .
    Show book
  • Manimegalai Full Story - மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார் - Tamil Audio Book - cover

    Manimegalai Full Story -...

    seethalai Saathanar

    • 0
    • 0
    • 0
    மணிமேகலைக் காப்பியம் – சங்க இலக்கிய காலத்து புகழ்பெற்ற காப்பியங்களில் ஒன்று. சீத்தலைச் சாத்தனார் எழுதிய இக்காப்பியம் புத்த மதக் கருத்துக்களை வெளிப்படுத்துகிறது. தமிழ் பண்பாடு, மதம், வாழ்க்கை தத்துவம் ஆகியவற்றை உணர்த்தும் இந்த ஆடியோபுக் அனைவருக்கும் பயன்படும்.
    Show book