Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
கண்ணே கண்மணியே! - cover

கண்ணே கண்மணியே!

ரமணிசந்திரன்

Publisher: Publishdrive

  • 0
  • 0
  • 0

Summary

அடுத்தது சுவாதி கேபிள்ஸ், கம்பெனிக்குரிய பதில் சார். நம்முடைய ரேட்டைக் குறிப்பிட்டு இருக்கிறோம்” என்று கடைசிக் கடிதத்தை மேனேஜர் வினோதனுடைய கையெழுத்துக்காக நகர்த்தினாள் மதுரா.மேலெழுந்தவாரியாக பார்வையிட்ட பின்னர் அவன் கையெழுத்திட்ட அத்தனை கடிதங்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பலானாள்.“வேலை நிறைய இருக்கிறதா?” என்று வினோதனின் குரல் அவளை நிறுத்தியது!“இல்லை ஸார். இதையெல்லாம் உறையில் இட்டு ஒட்ட வேண்டும். அவ்வளவுதான். முகவரிகூட டைப் செய்தாயிற்று.”“பத்து நிமிடங்களில் கிளம்பி விடுவாய்?” என்று கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான் அவன்.“ஆமாம்” என்று கடிதங்களுடன் நகர்ந்தாள் மதுரா.வினோதனின் பார்வை தன்மீது படிந்திருப்பதை உணர்ந்தும் உணராதவள் போன்று ஓர் சீரான வேகத்துடன் அறையை விட்டு வெளியேறினாள்.கடிதங்களை மடித்து, உரிய உறைகளில் இட்டு ஒட்டுகையில் மனது யோசித்தது.வினோதன் பார்வைக்கு நன்றாகத்தான் - மிகவும் நன்றாகவேதான் இருந்தான்.குணமும் நல்லதுதான்.படிப்போடு நல்ல பதவியும் இருந்தது.எல்லாவற்றுக்கும் மேலாக அவளை விரும்புகிறவனும் கூட.தம்பியைப் பார்த்துக் கொள்வான்; தாயாரின் பொறுப்பையும் கூட ஏற்றுக் கொள்வான்.
 
இவனை மறுப்பது மதியீனம்தான்.ஆனால்....‘ஆனால்’தான்.இந்த ஆனால் ஒரு கேள்வியும் இல்லை; இதற்கு விடை மட்டுமின்றி, முடிவும் இல்லை.வினோதனின் மனம் நோகாதபடி அவனது அழைப்பை மறுத்துவிட்டு, காத்து நின்று பஸ் ஏறி வீடு வந்து சேர்ந்த போது மதுரா மிகவும் களைத்துப் போயிருந்தாள்.உடலைக் காட்டிலும் மனது மிகவும் ஓய்ந்து போயிருந்தது.வினோதனோடு இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் எத்தனை நாள் ஆடுவது?அவனை ஒப்புவதோ முடியாத காரியம்.வெளிப்படையாக அவன் கேட்டு இவள் மறுக்க நேர்ந்து விட்டால் பிறகு அங்கே தொடர்ந்து பணிபுரிவது எப்படி சாத்தியம்?வேலையை விட்டு விலகினாலோ வேறு வேலை கிடைப்பது - அதுவும் இந்தப் போட்டிக்குள் கிடைப்பது எளிதல்லவே.வேலையில்லாமல் - அதன் மூலம் வரும் பணம் இல்லாமல் இந்த வீட்டில் ஒரு நாள் வாழ முடியுமா?”எண்ணி எண்ணி ஓய்ந்து போயிருந்த மனதை மேலும் உளைப்பதற்கென்று வீட்டிலும் பிரச்சினைகள் காத்திருந்தன.வாயிலில் நின்றபடி தெரு முனைவரை ஒருதரம் எட்டிப் பார்த்துவிட்டு, “தம்பி இன்னமும் வரவில்லையம்மா” என்று கவலையுடன் உரைத்துவிட்டு உள்ளே சென்று தன் கட்டிலில் சாய்ந்தார் புவனேஸ்வரி.எவனாவது நண்பனோடு அரட்டை அடித்துக் கொண்டிருப்பான் என்று எண்ணியபடியே உள்ளே சென்றாள் மதுரா
Available since: 04/03/2025.
Print length: 190 pages.

Other books that might interest you

  • Irubathi Moonraavadhu Jannal - cover

    Irubathi Moonraavadhu Jannal

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    ஒரு பழமையான கிராமத்தில் இருக்கும் ஐஸ்வர்யப் பெருமாள் கோவிலின் உள்ளே நூற்றுக்கும் மேற்பட்ட ஜன்னல்கள் இருக்கின்றன. அந்த ஜன்னல்களில் 23வது ஜன்னல் மட்டும்தான் தனித்தன்மை கொண்டதாக இருக்கிறது. அது என்ன என்பதைச் சொல்லும் நாவல்தான் இது
    Show book
  • Manteswamy Kathaprasanga - cover

    Manteswamy Kathaprasanga

    H S Shivaprakash

    • 0
    • 0
    • 0
    ಮಂಟೇಸ್ವಾಮಿ ಕಥಾ ಪ್ರಸಂಗ ಕರ್ನಾಟಕದ ಪ್ರಮುಖ ಮೌಖಿಕ ಮಹಾಕಾವ್ಯಗಳಲ್ಲಿ ಒಂದಾಗಿದೆ. ಮಂಟೇಸ್ವಾಮಿ ಹದಿನೈದನೆಯ ಶತಮಾನದಲ್ಲಿ ಬದುಕಿದ್ದ ವೀರಶೈವ ಸಂತ. ಮಂಟೇಸ್ವಾಮಿ ಕಲ್ಯಾಣಕ್ಕೆ ಆಗಮಿಸುವುದರೊಂದಿಗೆ ನಾಟಕವು ಪ್ರಾರಂಭವಾಗುತ್ತದೆ, ಅವನು ನಗರದ ಪ್ರವೇಶದ್ವಾರದಲ್ಲಿ ಸಗಣಿ ರಾಶಿಯ ಮೇಲೆ ಕಾಣಿಸಿಕೊಳ್ಳುತ್ತಾನೆ. ಬಸವಣ್ಣನ ಹೆಂಡತಿ ಅಲ್ಲಿಗೆ ಬಂದು ಅವರನ್ನು ಅರಮನೆಗೆ ಕರೆದುಕೊಂಡು ಹೋಗುತ್ತಾಳೆ, ಅಲ್ಲಿ ಶರಣರು ಮತ್ತು ಮಂಟೇಸ್ವಾಮಿಯ ನಡುವೆ ಘರ್ಷಣೆ ನಡೆಯುತ್ತದೆ. ಅವರ ಹಿರಿಮೆಯು ನಿಸ್ಸಂದಿಗ್ಧವಾಗಿ ಸಾಬೀತಾಗಿದೆ ಮತ್ತು ಇದು ಕಪಟ ಭಕ್ತರ ಮೇಲೆ ಕೆಳಮಟ್ಟದವರ ವಿಜಯವನ್ನು ಸೂಚಿಸುತ್ತದೆ. ಶಿಷ್ಯರನ್ನು ಸಂಪಾದಿಸುವ ಅವರ ಪ್ರಯತ್ನಗಳಿಂದ ಈ ಪ್ರಯಾಣವು ಸ್ಥಗಿತಗೊಂಡಿದೆ. ಈ ನಾಟಕದಲ್ಲಿ ಪಾತ್ರಗಳು ನಾಗರಿಕತೆಯ ಹಂತವನ್ನು ಪ್ರತಿನಿಧಿಸುತ್ತವೆ, ತಂತ್ರಜ್ಞಾನವು ಅದರ ಆನುವಂಶಿಕ ಅಭ್ಯಾಸಕಾರರಿಂದ ವಿಮೋಚನೆಯನ್ನು ಪಡೆಯಬೇಕಾಗಿತ್ತು.
    Show book
  • Kshithija - cover

    Kshithija

    Shanthinath Desai

    • 0
    • 0
    • 0
    ಶಾಂತಿನಾಥ ದೇಸಾಯಿ ಅವರು ಪ್ರಮುಖ ಆಧುನಿಕ ಕನ್ನಡ ಲೇಖಕರಾಗಿದ್ದಾರೆ ಮತ್ತು ಅವರ ಕಥೆಗಳು ಮಾನವ ಸಂಬಂಧಗಳ ವಿಷಯಗಳೊಂದಿಗೆ ವ್ಯವಹರಿಸುತ್ತದೆ ಮತ್ತು ಬದಲಾಗುತ್ತಿರುವ ಸಮಾಜದ ಸವಾಲುಗಳನ್ನು ಮತ್ತು ಸಾಂಪ್ರದಾಯಿಕ ಮೌಲ್ಯಗಳಿಂದ ಅದರ ದಿಕ್ಚ್ಯುತಿಯನ್ನು ಅನ್ವೇಷಿಸುತ್ತದೆ.
    Show book
  • Thaai - cover

    Thaai

    Sivasankari

    • 0
    • 0
    • 0
    திருமதி. சிவசங்கரி அவர்களின் சிறுகதைத் தொகுப்பின் இரண்டாம் பாகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கதைகளும் முதல் தொகுப்பினைப் போன்று சுவாரஸ்யமாகவும் ஆவலைத்தூண்டும் வகையிலும் அமைந்துள்ளன. இத்தொகுப்பில் யதார்த்தமான நடையில் வாழ்வின் தினசரி நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டுகிறன. நாம் தினமும் சந்திக்கும் நிகழ்வுகளை நயம்பட வழங்குகியுள்ளார்.
    Show book
  • கிராஜ நாராயணன் சிறுகதைகள் 1981 1985 - cover

    கிராஜ நாராயணன் சிறுகதைகள் 1981 1985

    கி. கி.ரா

    • 0
    • 0
    • 0
    கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். 
    1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை. 
    கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. 
    ரமணி ஒலி நூலகத்துக்காக முனைவர் ரமணி நேர்த்தியாக ராஜநாராயணன் கதைகளுக்கு உயிரூட்டுகிறார். 
    இந்த ஒலி நூலில் 1981 முதல் 1985 வரையில் ராஜநாராயணன் எழுதிய 
    சுப்பண்ணா 
    நிலை நிறுத்தல் 
    அவுரி 
    ஒரு செய்தி 
    மொத்தைப் பருத்தி 
    விடுமுறையில் 
    குருபூசை 
    சுற்றுப்புற சுகாதாரம் 
    தாச்சண்யம் 
    இவர்களைப் பிரித்தது 
    உண்மை 
    தாவைப் பார்த்து 
    நாற்காலி 
    என்ற 13 கதைகள் இடம் பெறுகின்றன‌
    Show book
  • CN Annathurai Short Stories - cover

    CN Annathurai Short Stories

    C N Annathurai

    • 0
    • 0
    • 0
    சி என் அண்ணாதுரை 1934லிருந்து 1966 வரை  108 சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.  சமூக சீர்திருத்தமே லட்சியம் என்று தொடங்கிய திராவிட இயக்கங்களின் தளர்நடைப் பருவத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற காலம்வரை எழுதப்பட்ட இந்தக் கதைகளில் சமூகத்தின் அனைத்துத் தளங்களிலிருந்தும் கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள். அண்ணாவின் சிறுகதைகள் என்ற இந்த ஒலிநூலில் 108ல் 16 கதைகளுக்கு ஒலிவடிவம் தந்திருக்கிறேன். 
    CN Annathurai has written 108 short stories over a period of time. Full of earnestness for social reform, Anna's characters cut across several sections of the society of contemporary Tamilnadu during the days of early Dravidian social activism. In this volume of Anna's Short Stories we have 16 stories. All the 108 stories have been published as audiobooks read by Dr.N.Ramani in 5 volumes. The stories in this volume are 
    19	காமக் குரங்கு	20 பிரசங்க பூஷணம் 21 மதுரைக்கு டிக்கட் இல்லை! 22	தனபால் செட்டியார் கம்பெனி	23	அன்னதானம்	24 அவள் முடிவு 25	இரு பரம்பரைகள் 26	புலிநகம்	27	சுடுமூஞ்சி	28	வேலை போச்சு	29	சொல்வதை எழுதேண்டா!	30	தேடியது வக்கீலை	31	பூபதியின் ஒரு நாள் அலுவல் 32	முகம் வெளுத்தது! 33	நான் மனிதனானேன்	34	பவழபஸ்பம்
    Show book