Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
கொல்ல கொல்ல இனிக்குதடா! - cover

கொல்ல கொல்ல இனிக்குதடா!

ரமணிசந்திரன்

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

செத்துப் போனாள் திலகா.சரியாய் முப்பது மணி நேரம். ஒரு பகல், ஒரு ராத்திரி... மறுநாள் பகல் பனிரெண்டு மணிக்கு நினைவு வராமல் மூச்சுவிடுவதை நிறுத்திக் கொண்டாள்.ஜெயகர் அழுது அழுது முகம் வற்றிப்போய் பிரமை பிடித்திருந்தான்.சம்பூர்ணம் இரண்டொரு தடவை மயக்க நிலைக்கு போய் விட்டு திரும்பியிருந்தாள். சம்பூர்ணத்தின் கணவர் மகாதேவன் துண்டை வாயில் பொத்தி குமுறித் தீர்த்தார்.திலகா போஸ்ட் மார்ட்டம் போய் ஆஸ்பத்திரியின் சம்பிரதாயங்களை முடித்து காடாத்துணியில் சுற்றப்பட்டு வீடு திரும்பி தெரு ஜனங்கள், ஜெயகரின் ஆபீஸ் கும்பல் கொண்டு வந்து சாத்திய மாலைகளில் புதைந்து - இருட்டுகிற வேளையில் நொய்யல் ஆற்று மயானத்திற்கு போய் மறுபடியும் ஒரு தடவை நெருப்பில் குளித்து சாம்பலாகி உதிர்ந்துபோன ரெண்டாம் நாள்.மோவாயில் நான்கு நாள் தாடியோடு அறைக்குள் உட்கார்ந்து சுவரையே பார்த்துக்கொண்டிருந்த ஜெயகரை சம்பூர்ணத்தின் குரல் கலைத்தது. கம்மிப் போன குரல்.“ஜெயகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்திருக்கார். ஏதோ கேக்கணுமாம்.”“என்ன விஷயமாம்?” ஆச்சர்யமாய் தலையை உயர்த்தினான்.“தெரியலை.”ஜெயகர் தொய்வாய் எழுந்து வந்தான். ஹால் சோபாவில் இன்ஸ்பெக்டர் கோகுல்நாத் சாய்ந்திருந்தார்.“சிரமம் தர்றதுக்காக மன்னிக்கணும் மிஸ்டர் ஜெயகர்.”“ஸோ வாட்? நீங்க உங்க டூட்டியைச் செய்யறீங்க. என்ன கேக்கணுமோ கேளுங்க இன்ஸ்பெக்டர்.
Available since: 01/13/2024.
Print length: 96 pages.

Other books that might interest you

  • 1+1=0 - cover

    1+1=0

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    சுடர்க்கொடி ஒரு தைரியமான பத்திரிகை நிருபர் அவரும் அவர் சகோதரனும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளியைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் எடுக்கும் நடவடிக்கை வெற்றியா? தோல்வியா?
    கேளுங்கள் 1+1=0 ராஜேஷ்குமாரின் விருவிரு துப்பறியும் நாவல்.
    Show book
  • Detective DK - The First Case: Maranathin Marupakkam - A Perfect Crime One Flaw - cover

    Detective DK - The First Case:...

    Narshen Kaviyan

    • 0
    • 0
    • 0
    மிகச் சிறந்த திட்டமிடலுடன் செய்யப்பட்ட கொலை... அனைத்து சாட்சியங்களையும் அழித்து, புதிய அடையாளத்துடன் வாழ்ந்த கொலையாளி... ஆனால் ஒரே ஒரு சிறிய தவறு அவரை சிக்க வைத்தது. அந்த தவறு என்ன? எப்படி எந்த தவறு அவரை காட்டிக்கொடுத்தது? டி.கே.வின் அறிவியல் பூர்வமான விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சி தரும் உண்மைகள்! 
    Miga sirandha thittamidhaludan seyyappatta kolai... anaitthu saatchiyangalaiyum azhithu, pudhiya adaiyaalathudan vaazhntha kolaiali... aana ore oru siriya thavaru avarai sikka vaithadhu. Andha thavaru enna? Eppadi andha thavaru avarai kaattikoduthadhu? DK-vin ariviyal poorvamaana visaranaiyil velivarum adhirshti tharum unmaigal! 
    A perfect crime. No evidence. A killer who vanished into a new identity. But one small mistake brings everything crashing down. What was that mistake? How did Detective DK uncover the shocking truth through pure logic and science? Dive into a gripping Tamil crime thriller where every page pulls you closer to a mind-blowing revelation. 'Maranathin Marupakkam' is the first intense case of Detective DK - a brilliant investigator with a sharp eye for hidden details. This is not just a story - it’s a psychological puzzle, a race against time, and a face-off with death.
    Show book
  • Vivek In Tokyo - cover

    Vivek In Tokyo

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    நேர்மையான நீதிபதி ஸ்வாதி சிங்கிற்கு பல இடையூறுகள் வருகின்றன. தன் பதவியை விட்டு ஓய்வு பெற்று, தன் மகளின் சிகிச்சைக்காக டோக்கியோ செல்ல திட்டமிடுகிறார். அங்கு இடையூறுகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக ரகசிய உளவுத்துறை அதிகாரிகளான விவேக் மற்றும் விஷ்ணுவின் உதவியை நாடுகிறார். அதற்குப் பின் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கின்றன. யார் உண்மையான குற்றவாளி என்று அறிந்து கொள்ள கேளுங்கள் விவேக் இன் டோக்கியோ!
    Show book
  • Detective DK - Case No:04 - சாத்தான்காட்டு ரகசியம் - Where death waits! - cover

    Detective DK - Case No:04 -...

    Narshen Kaviyan

    • 0
    • 0
    • 0
    பல நூறு ஆண்டுகளாக யாரும் அணுக முடியாத சாத்தான்காடு. அங்கு நுழைந்தவர்கள் அனைவரும் மர்மமான முறையில் இறந்து போனார்கள். ஆனால் அந்தக் காட்டுக்குள் அமானுஷ்யத்தைத் தாண்டி ஒரு பெரிய ரகசியம் புதைந்திருக்கிறது. நம் நாயகன் DK எவ்வாறு அந்த மர்மத்தை வெளிக்கொண்டு வருகிறான் என்பதைக் காண இந்த வீடியோவைப் பார்க்கவும். மர்மம், திகில், சாகசம் நிறைந்த இந்த படைப்பை தவற விடாதீர்கள்! 
    Pala nooru aandugalaga yaarum anaaga mudiyatha Saathaan Kaadu… Anga pona yellaaarum marma maathiri sethutu vandhirkanga. Aana andha kaattukulla oru periya ragasiyam amanooshyatha thaandi marandhu irukku. Nam hero DK eppadi andha marma ragasiyatha veli kondu varraan-nu kaanum idha video miss pannadheenga! Marmam, thigil, saagasam niraintha oru vera level experience. 
    An Ancient Forest. A Deadly Curse. One Man Dares to Enter. For centuries, no one has returned alive from Saathankadu – a forest whispered to be cursed. Those who entered met mysterious and violent deaths. Locals speak of ghostly shadows, whispers in the dark, and an unseen presence that guards something… ancient. But when a strange symbol connected to a powerful political figure appears in the forest's border, Detective DK and Rishi must step in not just to uncover the truth, but to survive it. What lies beyond the fear? A lost history? A hidden power? Saathankadu Ragasiyam is the fourth thrilling adventure in the Detective DK Investigations series - blending psychological horror, Tamil folklore, and raw investigation in one unforgettable tale.
    Show book
  • Neeyum Bommai Naanum Bommai - cover

    Neeyum Bommai Naanum Bommai

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    ராஜலிங்கம் என்னும் மிக பெரிய செல்வந்தர் தன் மகளின் சிகிச்சைக்காக உச்சிமலை சித்தரிடம் செல்கிறார்.ஒரு தீவிரவாத கூட்டம் ராஜலிங்கத்தின் சொத்தினை கைப்பற்றுவதற்காக திட்டம் தீட்டுகிறார்கள். சித்தருக்கும் தீவிரவாத கூட்டத்திற்கும் என்ன சம்மந்தம், ராஜலிங்கத்தின் மகள் உயிர் பிழைத்தாளா? தீவிரவாதிகளின் திட்டம் நிறைவேறியதா? மிக விறு விறுப்பாகவும், ஸ்வாரஸ்யமாகவும் கதை நகர்கிறது.
    Show book
  • Kolayudhir Kaalam - cover

    Kolayudhir Kaalam

    Sujatha

    • 0
    • 0
    • 0
    அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்களின் உற்சாகமான வாசிப்பிற்கு உரியதாக இருந்து வந்திருக்கிறது.
    Show book