Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
காத்திருக்கிறேன் ராஜகுமாரா - cover

காத்திருக்கிறேன் ராஜகுமாரா

ரமணிசந்திரன்

Publisher: Publishdrive

  • 0
  • 0
  • 0

Summary

அந்தப் பழைய கால அரண்மனையின் அலங்கார மாடிப்படியில் தடதடவென்று இறங்கி வேகமாக ஓடிவந்தாள் அவள். மற்றவர் பார்க்குமுன் சென்று, வாயில் புறத்துத் தூணை தொட்டு விட்டால் அன்று அவளே வென்றவள் ஆவாள்.பின்புறமாய்ப் பார்வையைச் செலுத்தியபடியே விரைந்தோடி இறங்கியவள், மாடிப்படி வளைவில் நிதானமாக ஏறி வந்து கொண்டிருந்த அவன் மேல் நன்றாக மோதிக்கொண்டு விட்டாள்.அவள் ஓடிவந்த வேகத்துக்கு இருவருமே மிச்சப் படிகளை உருண்டுதான் கடந்திருக்க வேண்டும்.ஆனால் அவள் ஓடிவந்த சத்தம் கேட்டு ஏறி வந்தவன் தயாராயிருந்ததால் இருவருமே ரத்த காயமின்றித் தப்பினர்.அப்போதும் கால் தடுமாறியவளின் தோளை அழுந்தப் பற்றி, அவள் விழுந்து விடாமல் நிறுத்தினான் அவன்.மூச்சு வாங்க நின்றவளை ஏற இறங்க நோக்கியவனின் பார்வை கடைசியாக அவளது பூமுகத்தில் வந்து நிலைத்தது.பளீரிட்ட புன்னகையுடன், “என்ன அழகான முக அமைப்பு இன்னும் கொஞ்சம் வளர்ந்து, இன்னும் கொஞ்சம் மெலிந்து மேலே ஓர் ஐந்தாறு வயதேனும் கூடுதலாகவும் ஆகியிருந்தால், இப்போதே என் ராணி என்று அறிந்திருப்பேனே! பரவாயில்லை. அப்படி வளர்ந்த பிறகு வருகிறேன். அப்போது என்னையே மணப்பாயில்லையா, பிரின்சஸ்?” என்று ஆவலாகக் கேட்டவன், குனிந்து, அவளது பிரமித்த இதழ்களில் மென்மையாக முத்தமிட்டான்.அவள் திகைத்து விழிக்கவும், சிரித்து, அவளது குண்டுக் கன்னத்தில் லேசாக வருடி, அவளை வழியிலிருந்து விலக்கி, நிறுத்தி விட்டு மேலே ஏறிச் சென்றான்
 
கனவில் நடப்பது போல எங்கோ வெறித்தபடி நடந்து சென்றாள் மடந்தைப் பருவத்தில் அடியெடுத்து வைத்திருந்த அந்தச் சிறுமி
Available since: 04/03/2025.
Print length: 86 pages.

Other books that might interest you

  • Short Stories - cover

    Short Stories

    Bharathiyaar

    • 0
    • 0
    • 0
    இவ்வொலி நூலில் மகாகவி பாரதியாரின் கதைகள் 
    ஞான ரதம்; ஆறிலொரு பங்கு; ஸ்வர்ண குமாரி; துளஸீ பாயி என்ற ரஜபுத்ர கன்னிகையின் சரித்திரம்; தாஸியும் செட்டியும்; வேதபுரத்தின் இரகஸ்யம்; கொட்டையசாமி; சந்திரத் தீவு; வேப்ப மரம்; காந்தாமணி; கோபந்நா; சூச்சூ; ரெயில்வே ஸ்தானம்; ஸத்யாநந்தர்; குழந்தைக் கதை; புதுப்பேய்; பூச்சித்தேவன்; ஒரு காக்கை கவி பாடிய கதை; அபயம்; கதவு; இருள்; அர்ஜுன சந்தேகம்; உஜ்ஜயநீ; கிளிக் கதை; புதிய கோணங்கி; காக்காய்ப் பார்லிமெண்ட்; பிங்கள வருஷம்; வண்ணான் தொழில்; கடல்; காற்று; கடற்கரையாண்டி; கலியுக கடோற்கசன்; வேணு முதலி; விடுதலை முத்தம்மா கதை; மிளகாய்ப் பழச் சாமியார்; செய்கை; சும்மா; பேய்க் கூட்டம்; சிறுகதை; குண்டூசி வியாபாரம்; வைசாக்தன் என்ற பண்டாரத்தின் கதை; பாம்புக் கதை; குதிரைக் கொம்பு; விநோதச் செய்திகள்; இல்லறம் பெரிதா? துறவறம் பெரிதா?; தேவ விகடம்; கத்திச் சண்டை; சில வேடிக்கைக் கதைகள்; குடியானவனும் திருடனும்; அந்தரடிச்சான் ஸாஹப் கதை;     மலைப்பாம்பும் குரங்குகளும்;     ஓநாயும் வீட்டு நாயும்; குளத்து மீன்கள்;           இருளும் ஒளியும்; பஞ்சகோணக் கோட்டையின் கதை; Andal; The Fox with the Golden Tail
    Show book
  • Chorara kathe - cover

    Chorara kathe

    Krishnamurthy Hunoor

    • 0
    • 0
    • 0
    Short story by Krishnamurthy Hunoor
    Show book
  • Krishnachandara Kathegalu - cover

    Krishnachandara Kathegalu

    Kishan Chand

    • 0
    • 0
    • 0
    ಉರ್ದು ಸಾಹಿತ್ಯ ಪ್ರಪಂಚದಲ್ಲಿ ಕೃಷ್ಣಚಂದರದು ಎದ್ದು ಕಾಣಿಸುವ ಹೆಸರು. ಕಥೆ, ಕಾದಂಬರಿ, ನಾಟಕ, ಪ್ರವಾಸ ಸಾಹಿತ್ಯ, ವಿಡಂಬನೆ, ಹಾಸ್ಯ ಬರಹಗಳ ಮೂಲಕ ಸುಮಾರು ಐವತ್ತು ವರ್ಷಗಳಷ್ಟು ಕಾಲ ಉರ್ದು ಸಾಹಿತ್ಯವನ್ನು ಶ್ರೀಮಂತಗೊಳಿಸಿದ ಅದ್ವಿತೀಯ ಲೇಖಕ. ತಮ್ಮ ಸುತ್ತಲಿನ ಬದುಕನ್ನು ಅತ್ಯಂತ ಸೂಕ್ಷ್ಮವಾಗಿ ಗಮನಿಸುತ್ತ, ಸಮಾಜದ ಸ್ವಾಸ್ಥ್ಯವನ್ನು ಕೆಡಿಸುವ, ಮನುಷ್ಯರನ್ನು ಮನುಷ್ಯರಿಂದ ಬೇರ್ಪಡಿಸುವ ಅಮಾನವೀಯ ಸಂಪ್ರದಾಯಗಳನ್ನು, ಶ್ರೀಮಂತ ವರ್ಗದ ವಿಲಾಸೀ ಜೀವನದ ಪೊಳ್ಳುತನವನ್ನು ಅತ್ಯಂತ ಪರಿಣಾಮಕಾರಿಯಾಗಿ ಚಿತ್ರಿಸುತ್ತಾರೆ. ಕಲ್ಪನೆಯ ರಮ್ಯಲೋಕದ ಸೊಗಸನ್ನು ಮತ್ತು ವಾಸ್ತವಿಕ ಲೋಕದ ಕಠೋರತೆಯನ್ನು ಸಮರಸಗೊಳಿಸಿದ ಲೇಖಕ ಕೃಷ್ಣಚಂದರ್. ಕನ್ನಡಕ್ಕೆ ಹಲವಾರು ಉರ್ದು ಮತ್ತು ಹಿಂದಿ ಕಥೆಗಳನ್ನು ಅನುವಾದಿಸಿರುವ ಡಾ|| ಪಂಚಾಕ್ಷರಿ ಹಿರೇಮಠ ಅವರು, ಇಲ್ಲಿ ಕೃಷ್ಣಚಂದರ ಎಂಟು ಸಣ್ಣ ಕಥೆಗಳನ್ನು ಅನುವಾದಿಸಿದ್ದಾರೆ.
    Show book
  • Ilakkiya munnodigal - cover

    Ilakkiya munnodigal

    Thiruppur Krishnan

    • 0
    • 0
    • 0
    'இலக்கிய முன்னோடிகள்' என்ற இந்நூல் 31 இலக்கியவாதிகளைப் பற்றிய தனித்தனிக் கட்டுரைகளின் தொகுப்பு. கு.அழகிரிசாமி எழுதிய 'நான் கண்ட எழுத்தாளர்கள், அறிஞர் வ.ரா. எழுதிய 'தமிழ்ப் பெரியார்கள்', வையாபுரிப்பிள்ளை எழுதிய'தமிழ்ச் சுடர்மணிகள்'என்று இதே பாணியில் அமைந்த சில நூல்கள் முன்னரே தமிழில் உண்டு. அந்த நூல்களையெல்லாம் படித்து அனுபவித்து வியந்த நான், இப்படியொரு நூலை எழுதவேண்டும் என்று தீவிரமாக எண்ணி வந்ததுண்டு.
    இந்த மனநிறைவை எனக்குச் சாத்தியமாக்கியிருக்கிறது 'இலக்கிய முன்னோடிகள்' என்ற இந்நூல்.
    Show book
  • Kamparamayanam Ayothyakantam - cover

    Kamparamayanam Ayothyakantam

    Kampar

    • 0
    • 0
    • 0
    கம்பராமாயணம் ஆறு காண்டங்களையும், 123 படலங்களையும், 10,589 பாடல்களையும் கொண்ட நீண்ட காப்பியமாகும். 
    2            அயோத்தியா காண்டம்     13 படலங்கள் 
    மந்திரப் படலம் 
    மந்தரை சூழ்ச்சிப் படலம் 
    கைகேயி சூழ்ச்சிப் படலம் 
    நகர் நீங்கு படலம் 
    தைலம் ஆட்டு படலம் 
    கங்கைப் படலம் 
    குகப் படலம் 
    வனம் புகு படலம் 
    சித்திரகூடப் படலம் 
    பள்ளிப்படைப் படலம் 
    ஆறுசெல் படலம் 
    கங்கை காண் படலம் 
    திருவடி சூட்டு படலம் 
    இராமன் சீதையைத் திருமணம் செய்து கொண்டு அயோத்தியாவிற்குச் செல்கிறார். உடன் இலக்குவனும், விசுவாமித்திரரும் செல்கின்றனர். அயோத்தியின் மன்னரான தசரதன் இராமனுக்கு பட்டாபிசேகம் செய்ய ஏற்பாடுகளைச் செய்கிறார். அதனை அறிந்த மக்களும், மந்திரிகளும் மகிழ்கின்றனர். மந்தரை எனும் கூனி பரதனின் தாயான கைகேயிடம் சென்று அவளுடைய மனதினை மாற்றுகிறாள். கைகேயி தசரதன் முன்பு தந்த இரண்டு வரங்களை இப்போதைய சூழ்நிலைக்குத் தக்கவாறு, இராமன் காடாளவும், பரதன் நாடாளவும் கேட்டுப் பெறுகிறாள். இராமனும், சீதையும் காட்டிற்கு செல்லுகையில், இலக்குவனும் உடன் செல்கிறான். மூவரும் காட்டிற்கு சென்று முனிவர்களையும், குகனையும் சந்திக்கின்றார்கள். குகனை தன்னுடைய மற்றொரு சகோதரன் என்று இராமன் பெருமையாக கூறுகிறார். தசரதன் இறந்து போனதால், இறுதிக் காரியங்களைச் செய்துவிட்டு பரதன் இராமனைக் காட்டில் வந்து சந்திக்கிறார். அயோத்திய அரசை ஏற்க இராமனிடம் வற்புறுத்துகிறார். ஆனால் இராமன் அதனை ஏற்க மறுக்கின்றார். பரதன் இராமன் மீண்டும் வந்து பொறுப்பு ஏற்கும் வரை இராமனின் பாதுகைகளை வைத்து அரசு செய்கிறான்.
    Show book
  • Thukappa Mastara - cover

    Thukappa Mastara

    Chandrakant Kusunur

    • 0
    • 0
    • 0
    Short story by Chandrakant Kusunur
    Show book