Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
இனி வரும் உதயம் - cover

இனி வரும் உதயம்

ரமணிசந்திரன்

Publisher: Publishdrive

  • 0
  • 0
  • 0

Summary

“அம்...ம்மா!” என்று இருகைகளாலும் காதுகளைப் பொத்திக் கொண்டாள் நித்யா. நித்யகல்யாணி.அவள் தங்கியிருந்த அந்த வேலை பார்க்கும் பெண்களுக்கான விடுதியில், அவளது அடுத்த அறைக்காரி தன் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டாள். இன்னும் இரண்டு மூன்று பேர் விரைவிலேயே வந்து சேர்ந்து கொள்ளுவார்கள்.இவர்களால் எப்படி முடிகிறது?வேலை முடிந்து திரும்பி வந்தால் டிபன் சாப்பிடப் போகக்கூடத் தோன்றாமல் அப்படியே விழுந்து கிடக்கத்தானே அவளுக்குத் தோன்றுகிறது; இவர்கள் மட்டும் இப்படித் துள்ளுகிறார்களே! ஒருவேளை மனதின் சோர்வுதான் உடலையும் பாதிக்கிறதோ? விரைவிலேயே செவிப்பறை கிழிந்து விடும் அளவுக்கு உச்சத் தொனியை எட்டியது டிஸ்கோ சங்கீதம். சகித்துக் கொள்ளவும் முடியாமல், பயில்வான் போல கட்டுமஸ்தாக இருந்த பக்கத்து அறைக்காரியோடு மோதும் துணிவும் இல்லாமல் அவளால் சொந்தமாக முடிகிற காரியமாய்த் தன் கைகளால் தன் காதுகளை இறுகப் பொத்திக் கொண்டாள்.ஆனால் எவ்வளவு நேரம் அப்படி இருக்க முடியும்? காது மடல்கள் வலிக்கத் தொடங்கவே, எழுந்து சென்று அறைக்கதவோடு சன்னல்களையும் மூடிவிட்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள்.அப்போதும் சத்தம்தான். ஆனால் நல்ல வேளையாக முன்னைப் போலக் காதைத் துளைக்கவில்லை.உதட்டைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளுக்கு ஊரின் நடு நாயகமாய் இருந்த பெரிய வீடு நினைவு வந்தது. வீட்டைச் சுற்றிலும் மாவும் பலாவுமாகப் பெரிய பெரிய மரங்களோடு - பெரிய பூந்தோட்டமும், மல்லிகை, இருவாட்சியின் மனதை மயக்கும் வாசனையும், அவ்வப்போது ஊர்க் கோடியில் இருந்த கோவிலில் இருந்து காற்றில் மிதந்து வரும் நாதசுர ஓசையும்..கூடவே திருச்சியில் ஒரே ஒரு மாதத்திற்கென்று வாடகைக்கு எடுத்து, ஒரே ஒரு வாரம் மட்டும் தங்கியிருந்த ஒரு சின்ன வீடும்...சின்ன வீடேதானோ?ச்சு...எப்படி இருந்தால் என்ன?எல்லாம் கனவாகி முடிந்துவிட்ட கடந்த காலம். உண்டு முடித்ததும் நாவிலிருந்து மறைந்துவிடும் இனிப்பும், உறைப்புமான சுவைகள்போல, இன்பம் துன்பம் எல்லாம் மறைந்து வெறும் பொறுமையை மட்டும் அவளுக்குத் துணையாகவிட்டுச் சென்றுவிட்ட கடந்த காலம்!நில்லாமல் சுழலும் இயந்திரம் போல் அதற்கும் பழக்கப்பட்டுப் போய் விட்ட இந்த வாழ்க்கையில் இன்று மட்டும் ஏன் இந்த சலிப்பு?அல்லது பழக்கப்பட்டு விட்டதாக எண்ணியதுதான் தவறோ?தவறேதான்.தெருவில் போகும்போதும் வரும் போதும் அங்கங்கே அந்த சுருக் வலிகள் இன்று வரை நிற்கவே இல்லையே!அன்னியராய் நின்று ஆராய்ந்து சொல்வது என்றால் முன்பு கத்தியால் குத்துவதுபோல இருந்த வேதனை இப்போது குண்டூசியில் குத்தும் அளவுக்குக் குறைந்திருப்பதாகக் கூறலாம். மற்றபடி வலி இல்லாத நாள் என்று ஒரு நாளுமே இல்லை.ஒரு வேளை... இன்னும் கொஞ்ச... நிறையக் காலம் கழிந்தால்... தடதடவென்று கதவை ஒங்கித் தட்டும் ஒசையில் திடுக்குற்று, சிந்தனை கலைந்து எழுந்தாள் நித்யா.பொறுமை இழந்த அவசரத் தட்டுகள் சற்று அதிகப்படி நேரமாகவே கதவு தட்டப்பட்டு இருக்க வேண்டும் என்பதை, உணர்ந்து ஓடிச் சென்று கதவைத் திறந்தாள்.“அட என்னாம்மா, எப்பப் பார்த்தாலும் கதவைப் பூட்டிகினு நீ என்ன தவம் பண்றியா, ஜெபம் செயறியா? வா, உனுக்கு டெலிஃபோனு வந்துக்கிதாம். அழச்சாரச் சொன்னாங்க. வா.” என்று நீட்டினாள் அந்தம்மா
Available since: 04/03/2025.
Print length: 194 pages.

Other books that might interest you

  • Ondrum puriyavillai - cover

    Ondrum puriyavillai

    Sundara Ramaswamy

    • 0
    • 0
    • 0
    Short Story by Sundara Ramaswamy.
    
    சுந்தர ராமசாமியின் சிறுகதைகளிலே உருவ அமைதியுடன் கருத்தமைதியும் கலந்து வந்துவிடுகிறது என்பது அவருடைய தனிச் சிறப்பாகும். ஜானகிராமனின் கிண்டல், கசப்புடன், சுந்தர ராமசாமி தனது என ஒரு ஆழத்தையும் கனத்தையும் சேர்த்துக் கொண்டுவிடுகிறார்.
    Show book
  • கனிச்சாறு இரண்டாம் தொகுப்பு - cover

    கனிச்சாறு இரண்டாம் தொகுப்பு

    Perunchiththiranar

    • 0
    • 0
    • 0
    பெருஞ்சித்திரனார் (1933–1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கைக‌ள் கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். முப்பத்தைந்து படைப்புகளைப் படைத்துத் தம் இலக்கிய ஆளுமையைத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் நிலைநாட்டினார். இவர் படைப்புகளைப் பயின்றோர் தமிழ் உணர்வும் ஊக்கமும் பெற்றனர். தமிழ்ப்பற்றும் தமிழ் உணர்வும் கொண்டு தம் பாட்டாற்றலால் இதழை நடத்திய பெருஞ்சித்திரனார் அக்காலத்தில் சுடர் விட்டு எழுந்த இந்தி எதிர்ப்புப் போரில் சிறையில் இருந்தபோது ஐயை என்னும் தனித்தமிழ்ப் பாவியத்தின் முதல் தொகுதியை எழுதினார். இந்தியாவில் நெருக்கடி நிலை நடைமுறைக்கு வந்தபோது பெருஞ்சித்திரனார் சிறைப்பட்டார். அப்போது ஐயை நூலின் இரண்டாம் பகுதியை எழுதி முடித்தார். பெருஞ்சித்திரனார் பன்னெடுங்காலமாக எழுதிக் குவித்திருந்த தமிழ் உணர்வுப் பாடல்கள் முதற்கட்டமாக முறையாகத் தொகுக்கப்பட்டு கனிச்சாறு என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக (1979) வெளிவந்தன. பெருஞ்சித்திரனாரின் பாட்டுத்திறமை முழுவதையும் காட்டுவனவாகவும், கொள்கை உணர்வினை வெளிப்படுத்துவனவாகவும் விளங்குவன இவர்தம் கனிச்சாறு நூலாகும். பெருஞ்சித்திரனாரின் படைப்புகளில் தமிழ்க் குமூகத்தில் உள்ள அனைவரும் தமிழ்ப்பணியாற்ற வேண்டும்; இழந்த பெருமையை மீட்க வேண்டும்; பகையை நீக்குவதற்குப் பாடுபட வேண்டும் என்பன உள்ளடக்கமாக அமைந்துள்ளன. சாதி ஒழிப்புப் பாடல்கள் பலவற்றை எழுதியவர். தமிழர்களை ஒன்றுபடுத்தும் பல பாடல்களும் இவரால் படைக்கப்பட்டுள்ளன. திருவெம்பாவை, திருப்பாவைப் பாடல்களைப் பெண்டிர் பாடுவதை அறி
    Show book
  • Andal hymns - cover

    Andal hymns

    Andal

    • 0
    • 0
    • 0
    நாலாயிர திவ்விய பிரபந்தப் பாடல்களுக்கு சாஸ்திரிய சங்கீத வடிவு தந்திருக்கிறார்கள். அப்படி நம்மை வந்தடையும் பாடல்கள் நாலாயிரத்தில் ஓரிரு நூறு பாடல்களே. சற்றே நீண்ட வடிவில் பாராயணமாகக் கிடைக்கின்றன. 
    பிரபந்தப் பாடல்கள் இயற்றமிழ் பாற்பட்டவை. இயற்றமிழ்ப் பாடல் வகைகளுக்கும் இனங்களுக்கும் ஓசை வகுப்பு முறை இருக்கிறது. இவ்வோசையில் பிரபந்தப் பாடல்கள் அனைத்தையும் தரும் ஒரு முயற்சிதான் இந்த ஒலியாக்கம். செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் ஓசைகளில் யாப்பிலக்கிணத்துக்கு ஏற்ப ஆண்டாளின் பாடல்களை இந்த ஒலி நூலில் கேட்கலாம். 
    ஆண்டாளின் திருப்பாவை 30 பாசுரங்கள் மற்றும் நாச்சியார் திருமொழி 143 பாசுரங்களை இந்த ஒலி நூலில் கேட்கலாம். பன்னிரு ஆழ்வார்களின் பாடல்கள் தனித்தனி ஒலி நூல்களாக ரமணி ஒலி நூலகத்தில் கிடைக்கின்றன. 
     The Vaishnavite hymns, Nalayira Divya Prabantham are set to music as well as recited in the recitation (parayana) tradition. While a randomly selected couple of hundreds of poems only are set to music and sung by performing artists, the recitation has been established as a discipline. These hymns have been composed according to Tamil Prosody known as //yappu//. They belong to what is known as //iyatramiz//. Such classical compositions have four kinds, AkavarpA, Venpa, Kalippa and Vanjippa (Pavinankal). Each of these have several derivative forms known as Pavakaikal. These conform to the traditional method of rendering in Akavalosai, Seppalosai, Thullalosai and Thunkalosai. This tradition has been lost for good. In an attempt to revive the traditional methods of rendering, Ramani Audio Books has recorded about 1500 hours of audio beginning from Ettuththokai down to contemporary literature through Epics, Bhakthi literature (Saivam, Vaishnavam, Buddhism, Islam) as well as Middle Age Tamil Literature. 
    In this audiobook you can listen to Thiruppavai (30 verses) and Nacciyar Thirumozhi (143) verses rendered in crisp and prosodically correct rendering. Other works by Azhvars are given in separate books.
    Show book
  • Diwan Loda Bada Singh Bahadur - cover

    Diwan Loda Bada Singh Bahadur

    Vaduvoor K Duraisamy Iyengar

    • 0
    • 0
    • 0
    பூலோக விந்தை என்ற சமஸ்தானத்தின் புதிய திவான், தன் புகாரை தள்ளுபடி செய்ததால் மகாராஜாவிடம் முறையிட்டு அவரும் திவானின் முடிவையே அங்கீகரித்ததால், பாதிக்கப்பட்ட ஒரு சாமான்யன் ஒரு கற்பனை திவானையே ஏற்படுத்தி மகாராஜாவிற்கும் திவானுக்கும் பாடம் கற்பிப்பதாய் புனைந்த புதினம் இது. நகைச்சுவையும் இனிய ஜனரஞ்சகமான நடையுடன் படிக்க படிக்க மேலும் படிக்கத் தூண்டும் கதை.
    Show book
  • கல்கி சிறு கதைகள் - வீணை பவானி - kalki short stories - Vol 6 - Tamil Short Story Collection - cover

    கல்கி சிறு கதைகள் - வீணை பவானி -...

    Kalki Kalki

    • 0
    • 0
    • 0
    அமரர் கல்கி சிறு கதைகள் தொகுப்பு - 6 
    1. வீணை பவானி  
    2. வைர மோதிரம்  
    3. கடிதமும் கண்ணீரும்  
    4. தூக்கு தண்டனை  
    5. என் தெய்வம்  
    6. எஜமான விசுவாசம் 
    Show book
  • Vibathu - cover

    Vibathu

    Sivasankari

    • 0
    • 0
    • 0
    திருமதி. சிவசங்கரி அவர்களின் சிறுகதைத் தொகுப்பின் இரண்டாம் பாகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கதைகளும் முதல் தொகுப்பினைப் போன்று சுவாரஸ்யமாகவும் ஆவலைத்தூண்டும் வகையிலும் அமைந்துள்ளன. இத்தொகுப்பில் யதார்த்தமான நடையில் வாழ்வின் தினசரி நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டுகிறன. நாம் தினமும் சந்திக்கும் நிகழ்வுகளை நயம்பட வழங்குகியுள்ளார்.
    Show book