Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
எனக்காகவே நீ… - cover

எனக்காகவே நீ…

ரமணிசந்திரன்

Publisher: Publishdrive

  • 0
  • 0
  • 0

Summary

பூரண நிலவின் தண்ணொளியில், சிலுசிலுத்த தென்றல் காற்றினால், பரந்து விரிந்த கடல்பரப்பில் எழுந்த எண்ணிலடங்காத சின்னஞ்சிறு அலைகள் வெள்ளிப்பாளங்களாக மின்னுவதைப் பார்க்கப் பார்க்கப் பரவசமாக இருந்தது திவ்யாவுக்கு.“ஆகா! என்ன அழகு!” என்று ரசனையோடு அவள் ‘இயம்ப, “ஆமாமாம்!” என்று அதை அப்படியே ஆமோதித்தான் அவள் அருகே அமர்ந்திருந்த மனோரஞ்சன்.“தனக்குத்தான் - சந்திரன் என்று வானம் பெருமைப்பட்டுக் கொண்டு இருந்திருக்கும், இல்லையா? ஆனால் கடலில் இத்தனை லட்சம்... கோடிக் கணக்காய் வெண்ணிலவுகள் மிதப்பதைப் பார்க்கும் போது... ரஞ்சன், இதைப் பார்க்கவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இல்லையா?” என்று கேட்டாள் அவள்.“ஆமாமாம்” நிச்சயம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்தான் என்று அவளது பக்கவாட்டுத் தோற்றத்தில் ஓரக்கண் பார்வையைப் பதித்து ஒத்துப் பாடினான் அவன்.“இயற்கையாகப் பார்த்து, மனம் உவந்து அளிக்கும் இந்த அழகை ரசித்து அனுபவியாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறவர்களை நினைத்தால் கோபம்தான் வருகிறது...”அவள் பேசுகையிலேயே, “அப்படி ரசிக்கவென்று எந்தக் கழுதையாவது வந்து நின்றால் உதைதான் கிடைக்கும்” என்று அவன் முணுமுணுத்தான்.“என்ன சொன்னீர்கள்? சரியாகக் கேட்கவில்...” என்று திரும்பிய திவ்யா, மனோரஞ்சனின் பார்வை கடலை விடுத்து அவளிடம் பதிந்திருப்பதைக் கண்டதும் கலீரென்று நகைத்து விட்டு “உதைவிழும்.” என்று சுட்டுவிரலால் ‘பத்திரம்’ காட்டினாள்“முதலில் உனக்கு உதை விழாமல் பார்த்துக் கொள். மணி என்ன தெரியுமா? பதினொன்று. இப்போதே கிளம்பினால் கூட உன் வீடு போய்ச்சேர மணி பதினொன்றரை ஆகிவிடும். இவ்... வளவு நேரம் எங்கே சுற்றினாய் என்று உன் பெரியப்பா பெல்ட்டால்... உன்னை விளாசப் போகிறார்.”“மாட்டவே மாட்டார். என் பெரியப்பா எவ்வளவு நல்லவர் தெரியுமா?” என்றாள் திவ்யா பெருமையாக.“அல்லது உன் பெரியம்மா. அவர்கள் கரண்டிக் காம்பைக் காய வைத்து சூடு இழுக்கப் போகிறார்கள், பார்.” என்று மிரட்டினான் மனோரஞ்சன்.“சீச்சீ.” என்றாள் திவ்யா. “விளையாட்டுக்குக்கூட என் பெரியப்பா, பெரியம்மா பற்றி இப்படி சொல்லாதீர்கள் ரஞ்சன். அவர்கள் இரண்டு பேருக்குமே நான் என்றால் உயிர். பிரியம் மட்டுமில்லாமல் என்னிடம் முழு நம்பிக்கையும் உண்டு. திவ்யா மனமறிந்து தப்பு செய்யமாட்டாள் என்பார்கள். பிரபாகூட எப்போதும் குறைப்படுவாள். “அப்பா, அம்மா இரண்டு பேருக்கும் உன்னிடம்தான் உயிர். என்னைக் கண்டாலே கரித்துக் கொட்டுகிறார்களே, மெய்யாகவே என்னைப் பெற்றார்களா அல்லது குப்பைத் தொட்டியிலிருந்து எடுத்து வளர்க்கிறார்களா?” என்று பொருமுவாள். இதைப் பெரியப்பா, பெரியம்மாவிடமே கேட்டுவிட்டு அதற்கு வேறு வாங்கிக்கட்டிக் கொள்ளுவாள்... எனக்குக் கூடச் சில சமயங்களில் ஒருமாதிரி இருக்கும். என்னைக் ‘கண்ணா’ என்று கொஞ்சுகிறவர்கள், அவளை இந்தக் கழுதை எங்கே போயிற்று?” என்று கேட்பார்களா...“போதும் போதும்” என்று கெஞ்சாக் குறையாக திவ்யாவின் உணர்ச்சிவசப்பட்ட பேச்சை இடைமறித்தான் மனோரஞ்சன். “உன் பெரியப்பாவும் பெரியம்மாவும் மிகவும் நல்லவர்கள்தான், திவ்யா. ஆனால் அதற்காக அவர்களது புராணத்தை நான் எத்தனை தடவை கேட்டுக் கொண்டிருக்க முடியும் சொல்லு? சொல்ல உனக்கு அலுக்காமல் இருக்கலாம். ஆனால் கேட்கிற எனக்குக் கொஞ்சம் போ... ரடித்துப் போய்விட்டதே...” என்று வேடிக்கை போலப் பேசியவன், அவள் அதை விளையாட்டாக எண்ணவில்லை என்பதை உணர்ந்து பேச்சை மாற்றினான்
Available since: 04/03/2025.
Print length: 324 pages.

Other books that might interest you

  • Muththuppattan Kathai - cover

    Muththuppattan Kathai

    Vanamamalai

    • 0
    • 0
    • 0
    முத்துப்பட்டன் கதை என்பது தமிழ் நாட்டுப்புற வழக்கில் இடம்பெறும் கதை ஆகும். இக் கதை 18 ஆம் நூற்றாண்டில் முத்துப்பட்டன் என்பவன் சாதி மீறித் திருமணம் செய்ததையும், அவன் மனைவியின் உறவினர்களுக்கு வரும் இடையூறுகளுக்கு எதிர்த்துப் போராடியதையும், அந்தப் போராட்டத்தில் உயிர் நீத்ததையும் பற்றிக் கூறுகிறது.
    Show book
  • Kanthapuranam Makenthirakantam - cover

    Kanthapuranam Makenthirakantam

    Kachiyappasivachariyar

    • 0
    • 0
    • 0
    கந்த புராணம், அல்லது ஸ்கந்த புராணம், என்பது மகாபுராணங்களில் பதின்மூன்றாவது புராணமாகும். காஞ்சிபுரத்தில் இருக்கும் குமரக் கோட்டத்தின் அர்ச்சகர் காளத்தியப்ப சிவாசாரியார். அவருடைய குமாரர் தான் கச்சியப்ப சிவாசாரியார். குமரக் கோட்டத்து முருகக்கடவுளுக்கு நாள்தோறும் பூசனை செய்த மெய்யன்பில் வடமொழிப் புராணத்தின் சிறப்பினைத் தமிழ்கூறு நல்லுலகம் அறியும் வண்ணம் இந்தப் புராணத்தை இயற்றினார். அதன் பின் குமரக் கோட்டத்திலேயே அரசர், பிரபுக்கள், கல்வி கேள்விகளில் சிறந்த வல்லுநர்கள் முன்னிலையில் தினம் ஒரு பகுதியாகப் பாடிப் பொருள் கூறி விளக்கி ஓராண்டுக் காலமாகத் தன் நூலினை அரங்கேற்றினார். பதினெண் புராணங்களும் வடமொழியில் இருப்பவை. இவற்றுள், கந்த புராணத்தின் சங்கர சங்கிதையில் சிவரகசிய கண்டத்தில் வரும் முதல் ஆறுகாண்டங்களின் தமிழ் மொழிபெயர்ப்பே கந்த புராணம். 
    கந்த புராணம் சிவபுராணங்கள் பத்தில் ஒன்றாகும். இது நூறாயிரம் சுலோகங்களால் ஆனது. அது ஆறு சங்கிதைகளைக் கொண்டது. இதில் சங்கர சங்கிதையும் ஒன்றாகும். சங்கர சங்கிதையில் உள்ள பல கண்டங்களில் சிவரகசிய கண்டமும் ஒன்றாகும். இக்கண்டத்தில் ஏழு காண்டங்கள் காணப்படுகின்றன. இவற்றில் உபதேச காண்டம் தவிர ஏனைய ஆறு காண்டங்களதும் தமிழ்த் தொகுப்பே கந்தபுராணமாகும்.உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் என்று ஆறு காண்டங்களை உடையது. இது 135 படலங்களையும், 10345 பாடல்களையும் உடைய இது முருகப்பெருமானின் வரலாற்றை முறையாகவும் முழுமையாகவும் கூறுகிறது. 
    ramaniaudiobooks.comக்காக முனைவர் ரமணியின் குரலில் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம் ஆறு ஒலி நூல்களாக வெளிவருகிறது. 
    மூன
    Show book
  • Thamaraikulam - cover

    Thamaraikulam

    Kottayam Pushpanath

    • 0
    • 0
    • 0
    பற்பல ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த யூதா என்ற அதிபயங்கர பெண்பித்துபிடித்த மந்திரவாதியின் பிடியில் சிக்கும் சோபியாவின் குடும்பம், பலவித துர்சம்பவங்களை எதிர்கொள்கிறது. சோபியாவின் வீட்டில் வேலைசெய்யும் கிளாராவும் , கோவிலகத்தை சேர்ந்த உதயனும் இதை கண்டுபிடித்து அதை தடுக்க மாந்திரிக நம்பூதிரி மற்றும் பாதிரியார் காபிரியேல் உதவியை நாடுகிறார்கள். தெய்வ சக்தியினால் தீய சக்தி எவ்வாறு அழிக்கப்படுகிறது என்பதை சுவாரஸ்யமிகுந்த திகிலூட்டும் அனுபவங்களுடன் அமைந்த கதை "தாமரைக்குளம்"
    Show book
  • Irunta Veetu - cover

    Irunta Veetu

    Bharathidasan

    • 0
    • 0
    • 0
    ஒரு கிராமத்தில் உள்ள குடும்பத்தில் தலைவன், தலைவி, மகன் மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இவர்களின் அன்றைய நிகழ்வுகள் வாயிலாக எப்படி ஒரு குடும்பம் இருக்கக்கூடாது என்பதை பாரதிதாசன் தனது கவிதை நடையில் பொருட்பட புனைந்துள்ளார். எந்த ஒரு குடும்பத்தில் சோம்பேறி குணமும், மூட நம்பிக்கைகளும் இருக்கின்றனவோ அவையே "இருண்ட வீடு'. குடும்பத் தலைவர் வாணிகத்தின் வழியாகப் பொருள் ஈட்டுகிறார். அவருக்குச் சிற்றம்பலம் என்பவர் கடன் கொடுக்க வேண்டும். இந்தச் சிற்றம்பலம் கடனைக் கொடுக்காமல் ஐதராபாத்திற்கு ஓடிவிடத் திட்டம் தீட்டியிருந்தார். இதை அறிந்த தலைவரின் நண்பர் ஒருவர், இச்செய்தியைக் கடிதம் வாயிலாகத் தெரிவித்திருந்தார். தலைவரின் வீட்டுக்கு வந்த கடிதத்தைத் தலைவி பார்த்தாள். அவள் கல்வி அறிவு இல்லாதவள். ஆதலால், அந்தக் கடிதத்தைத் திருமண அழைப்பிதழ் என்று எண்ணினாள்; அக்கடிதத்தை ஒரு வாரமாகத் தலைவரிடம் காட்டவில்லை. கடிதம் கிடைக்காததால் தலைவர், சிற்றம்பலத்திடம் பணம் வசூலிக்க உடனே ஆள் அனுப்பவில்லை. அவன் பணத்தைக் கொடுக்காமல் ஐதராபாத்திற்கு ஓடி விட்டான் என்ற செய்தியை அறிந்து தலைவர் வருந்தினார். தலைவி கல்வி அறிவு இல்லாதவள். எனவே, தலைவனுக்குப் பொருள் இழப்பு ஏற்படக் காரணமாகிவிட்டாள். பொருள் இழப்பு ஏற்பட்டதால் தலைவர் கோபம் கொண்டார். தலைவியும் ‘விட்டேனா பார்’ என்று சண்டைக்கு எழுந்தாள். இனி இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று கோபித்துக் கொண்டு தலைவர் வெளியேறி விட்டார். தலைவர் தமது கோபத்தை உணர்த்தக் கருதியதால் வீட்டை விட்டு வெளியேற எண்ணினார். தலைவி தன்னை ‘வெளியே போக வேண்டாம்’ என்று சொல்லித் தடுப்பாள் என்று அவர் எதிர்பார்த்தார். கல்வி அறிவும் குடும்பப் பொறுப்பும் சிறிதும் இல்லாத தலைவிக
    Show book
  • Vilaivu - cover

    Vilaivu

    Ki Rajanarayanan

    • 0
    • 0
    • 0
    கி. ராஜநாராயணன், ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் மண்ணுக்கே உரித்தான ஒரு பழத்தோட்டம் என்று சொல்லலாம். வித்தியாசமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றும் ஆற்றல் இவர் கலை வன்மை. - சுந்தர ராமசாமி கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி. ராஜநாராயணனின் தேர்ந்தெடுத்த 17 கதைகளின் தொகுப்பு இந்நூல். A collection of 14 selected short stories by well-knows writer Ki.Rajanarayanan. His charachters are as unique as his writing style. Writer Sundara Ramasamy describes the stories of Ki.Ra as a fruit garden of Tamil literary world. His aesthetics is unparalleled and he is considered a pioneer of literature from Karisal region in Tamil.
    Show book
  • Kambarasam - cover

    Kambarasam

    Annadurai

    • 0
    • 0
    • 0
    கம்பரின் கடவுள்பக்தி சொட்டுவதா கம்பராமாயணம் பாரீர், என்று தரப்பட்டதுதான் “கம்பரசம்!” பொதுவாக தெய்வ காவியமாகப் போற்றப்படக் கூடிய நூல் கம்ப இராமாயணம். ஆனால் இது அத்தகைய போற்றுதலுக்கெல்லாம் தகுதியான நூலா? பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் படிக்கக் கூடாத ஓர் ஆபாச நூலாகத் தோன்றுமளவு இருக்கிறது கம்பனின் வர்ணனைகள். ஒரு கடவுள் காவியத்தில் இத்தனை ஆபாசங்களா? என்பது அறிஞர் அண்ணா எழுதிய "கம்பரசம்" எனும் நூலைப் படித்ததும் எழும் கேள்வி. 
    இந்த நூலில் அவர் சுயமாக எந்தக் கற்பனைக் குதிரையையும் அவிழ்த்துவிட்டு மிகைப்படுத்திக் கூறவில்லை. மாறாக தெய்வ காவியமான "இராமாயணத்தில்" கம்பனால் சொட்டப்பட்ட காமரசம் மிகும் பாடல்களைத் தொகுத்து அதற்கான விளக்கங்களை தெளிவுபட எழுதியிருக்கிறார். 
    ரமணியின் நேர்த்தியான வாசிப்பில் இன்னுமோர் ஒலிநூல்...
    Show book