Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
அன்பின் தன்மையை அறிந்த பின்னே - cover

அன்பின் தன்மையை அறிந்த பின்னே

ரமணிசந்திரன்

Publisher: Publishdrive

  • 0
  • 0
  • 0

Summary

கண்ணாடி முன் நின்று முகத்தைச் சீர் செய்து கொண்டிருந்த வசுந்தராவுக்கு உள்ளேயிருந்து உத்தர விட்டுக் கொண்டிருந்த தாயின் குரல், எரிச்சலூட்டியது.‘எப்படியாவது, இன்று வருகிறவனையாவது, விட்டு விடாமல் பிடித்துக் கொள்’ என்று, கீறல் விழுந்த ரிக்கார்டு மாதிரி சொல்லிக் கொண்டே இருந்தால், என்ன அர்த்தம்? அவள் என்ன, வருகிறவனின் கையைப் பற்றியா, பிடித்து வைக்க முடியும்?அல்லது, ஒவ்வொருவனாக வந்து, நன்றாக மூக்குப் பிடிக்க முழுங்கிவிட்டு, அவளைத் தட்டிக் கழித்து விட்டுச் செல்வதில்தான், அவளுக்குச் சந்தோஷமா?அன்றி, இப்படி அடிக்கடி யார் முன்னேயாவது காட்சிப் பொருளாக நிற்பதில்தான், மகிழ்ச்சியா?சொல்லப் போனால், முதலிலிருந்தே அவளுக்கு அதில் மிகவும் வெறுப்புதானே? அருவறுப்பும் தானே? அவளும், உயிரோடு உணர்ச்சியும் உள்ள, கூடவே சிந்திக்கவும் தெரிந்த ஒரு மனிதப் பிறவியாயிற்றே என்கிற எண்ணமே இல்லாமல், அவளது மூக்கு, முழி, நிறம் பற்றி விலாவாரியாகப் பேசி, அதற்கு மேல் நகை, தொகை பேரம் நடத்துவதைக் கேட்க, அவளுக்கும் தான் எப்படி இருக்குமாம்?ஒருதரம் வந்தவர்களில், ஓர் அம்மாள், வசுவின் தலைமுடியை இழுத்துக் கூடப் பார்த்தாள். ஒட்டு முடியா என்று பரிசோதித்தாளாம். அதிர்ச்சியும் ஆத்திரமுமாக வசுந்தரா தலையை இழுத்துக் கொண்டு முறைக்க, ‘சந்தையிலே மாடு பிடிக்கும்போதுகூடப் பல்லைப் பிடித்துப் பாராமல் ஓட்டி வருவது இல்லை, வீட்டுக்கு மருமகளைச் சும்மா இழுத்துக் கொண்டு போக முடியுமா?’ என்று கேட்டாள், அந்தப் பெண்மணி.இழுப்பதாமே?மாடும் நானும் ஒன்றா?’ என்று கேட்கத் துடித்த நாவை, உறுத்து நோக்கி, உதட்டின் மீது கை வைத்துக் காட்டிய தாயின் சைகை அடக்க, வசுந்தரா வாயை மூடிக் கொண்டு பேசாதிருந்தாள்.‘இழுத்துக் கொண்டு போவது’ என்று சொன்னதற்காக, அம்மாவுக்கே, அந்த அம்மாள் மேல் ஆத்திரம் வந்திருக்க வேண்டும். அதைவிட்டு, மகளான அவளை அடக்குகிறார்களே என்று, உள்ளூரப் பொறுமிய போதும், தாயின் கோபத்துக்கு அஞ்சி, வசுந்தரா, தலையைக் குனிந்து, தரையைப் பார்த்தபடி சும்மா உட்கார்ந்திருந்தாள்.ஆயினும், அவள் முறைத்துப் பார்த்ததே, பெரும் குற்றமாகி, இந்தத் திமிர் பிடித்த பெண் வேண்டாம் என்று, அந்தப் பிள்ளை வீட்டார் சென்றுவிட, வசுவுக்கு அவள் தாயிடமிருந்து நல்ல திட்டு கிடைத்தது.பெண் என்றால் ஐம்புலன்களையும் அடக்க வேண்டுமாம், எரிச்சலைக் காட்டக் கூடாது, முகத்தைச் சுளிக்க கூடாது, நினைப்பதைப் பேசக் கூடாது, நிமிர்ந்து நோக்கக் கூடாது.ஆனால், இந்த மாதிரி அறிவுரைகள் எல்லாம், அடுத்த பெண் விஷயத்தில் மட்டும், அம்மாவுக்கு நினைவிருப்பதே இல்லையே?செல்லப் பெண் என்ன செய்தாலும் அது தான் சரியென்று, தோன்றி விடுகிறதே. அப்போதுதான், வசுந்தராவுக்கு மிகவும் மனதுக்குக் கஷ்டமாகிவிடும்.மூத்த மகள் செய்யும் போது, தப்பு என்று சொல்லித் திட்டுகிறவள், அதையே இளைய மகள் செய்தால், ஒரு புன்னகையோடு கண்டு கொள்ளாமல் போய்விடுவாள்.ஒருவேளை, அவளும், சௌந்தர்யாவைப் போல, அம்மாவைக் கொண்டு அதே அழகுடன், எலுமிச்சம்பழ நிறத்தில் பிறந்திருந்தால், அவளுக்கும் அம்மாவின் ‘செல்லம்’ கிடைத்திருக்கக் கூடும். ஆனால், வசு, அவள் அப்பாவின் வாரிசாக அல்லவா பிறந்து தொலைத்திருக்கிறாள். அதுதான், அம்மாவைப் பொறுத்தவரையில், வசுந்தரா செய்த பெரும் தவறாக ஆகிவிட்டது.ஆனாலும், இது ரொம்பவும் அநியாயமாகத்தான், வசுந்தராவுக்குப் பட்டது
Available since: 04/03/2025.
Print length: 230 pages.

Other books that might interest you

  • Hymns from 11th Thirumurai - cover

    Hymns from 11th Thirumurai

    Nampiandarnampikal

    • 0
    • 0
    • 0
    பதினொன்றாம் திருமுறையில் பத்துப் பிரபந்தங்களை அருளிச் செய்தவர் நம்பியாண்டார் நம்பிகள். தேவாரத் திருமுறைகளை பொல்லாப் பிள்ளையார் துணைக்கொண்டு தில்லையிலிருந்து வெளிப்படுத்தியும் திருமுறைகளை வகுத்தும் தந்த பெருமைக்குரியவர் இவர். விநாயகர் மீது திரு இரட்டை மணிமாலை என்னும் பிரபந்தம் பாடிப் போற்றினார். 
    நம்பியாண்டார் நம்பிகள் திருஞானசம்பந்தர் அருளிய தேவாரத் திருப்பதிகங்களை முதல் மூன்று திருமுறைகளாகவும், திருநாவுக்கரசர் அருளிய தேவாரத் திருப்பதிகங்களை நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகளாகவும், சுந்தரர் தேவாரத்தை ஏழாந் திருமுறையாக வும் தொகுத்ததோடு மணிவாசகரின் திருவாசகம் திருக்கோவையார் ஆகியவற்றை எட்டாம் திருமுறையாகவும், திருமாளிகைத்தேவர் முதலானவர்கள் அருளிய திருவிசைப்பா திருப்பல்லாண்டு ஆகிய வற்றை ஒன்பதாம் திருமுறையாகவும், திருமூலர் அருளிய திரு மந்திரத்தைப் பத்தாம் திருமுறையாகவும், திருவாலவாயுடையார் அருளிய திருமுகப்பாசுரம் முதலிய பிரபந்தங்களைத் தொகுத்துப் பதினொன்றாம் திருமுறையாகவும் வகுத்தருளினார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொகை யின் வகைநூலாய் பொல்லாப்பிள்ளையார் தமக்கு உணர்த்தியருளிய நாயன்மார்களின் பிற வரலாற்றுச் செய்திகளையும் குறிப்பிட்டு திருத் தொண்டர் திருவந்தாதி என்ற வகை நூலையும் திருஞானசம்பந்தப் பிள்ளையார் மீது திருஏகாதசமாலை என்னும் பிரபந்தத்தையும் அருளி இத்திருமுறையில் சேர்த் தருளினார்.
    Show book
  • கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் | பாகம் 1 | Kalki Krishnamurthi in Ponniyin Selvan | Pagam 1 | Audio Book - cover

    கல்கி கிருஷ்ணமூர்த்தியின்...

    Anonymous

    • 0
    • 0
    • 0
    பொன்னியின் செல்வன் என்பது கல்கி என்று அழைக்கப்படும் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்ட சிறந்த காவிய கதை. சோழர் காலத்தில் அருள்மொழி வர்மன், குந்தவை, வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலன், நந்தினி ஆகியோரின் வாழ்க்கை, அரசியல், துரோகம், காதல், போராட்டங்கள் என பல ரகசியங்களை வெளிப்படுத்தும் ஒரு பிரமாண்டக் கதை இது. இது மொத்தம் 5 பாகங்கள் கொண்டது. இது முதல் பாகம்.
    Show book
  • Second Hand - cover

    Second Hand

    Vaikom Mohammed Bashir

    • 0
    • 0
    • 0
    முற்போக்கு இலக்கியம் முதன்மையான நடைமுறையாக இருந்த காலப் பகுதியில் எழுத்தில் ஈடுபட்டவர் பஷீர். 'ஜீவன் சாஹித்ய பிரஸ்தானம்' (வாழ்விலக்கிய இயக்கம்) என்று அழைக்கப்பட்ட போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் பஷீர், தகழி சிவசங்கர பிள்ளை, பி. கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி ஆகியோர். இவர்களின் எழுத்தில் புதுவகையை உருவாக்கியவர் பஷீர். நடைமுறை உலகை மாற்றிப் புதிய உலகைச் சமைப்பதற்கான அறைகூவலைப் பிற எழுத்தாளர்கள் முன்னிருத்தினர். இந்த முழுமையற்ற உலகத்தை மாற்றி முழுமையான உலகைப் படைப்பது பற்றிய கனவை முன்வைத்தார்கள். ஆனால் பஷீர் இந்த முழுமையற்ற உலகை நேசித்தவராக இருந்தார். தீமையும் கீழ்மையும்இந்த உலகின் உயிரோட்டமான அம்சங்கள் என்று உணர்ந்திருந்தார். நடைமுறை உலகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களேஅவரது கதை மாந்தர்களாக இருந்தனர். அவர்களது வாழ்க்கையே அவருக்குக் கதை நிகழ்வுகளாக இருந்தன. பொறுக்கிகள், வேசிகள், திருடர்கள், முட்டாள்கள், பைத்தியங்கள், ஏமாற்றுப்பேர்வழிகள் எல்லாரும் அவருடைய அன்புக்குரிய பாத்திரங்களாக இருந்தார்கள்.அந்தப் பாத்திரங்கள்மீது வாசகரும் அன்பு பாராட்டக் கட்டாயப்படுத்தியதுதான் பஷீர் கலையின் வெற்றி.
    Show book
  • Nirkaadhe Gavanikkadhe - cover

    Nirkaadhe Gavanikkadhe

    Pattukkottai Prabhakar

    • 0
    • 0
    • 0
    Two rich young men are not satisfied with the luxurious life they have but want to enjoy adrenaline rush by committing some heinous crime! This is the story of the police playing hide and seek with these 2 youngsters. Listen to Nirkadhe Gavanikkadhe.
    
    இரண்டு பணக்கார இளைஞர்களுக்கு அத்தனை உல்லாசத்தையும் அனுபவித்ததும் சாகசமான குற்றங்கள் செய்யும் விபரீத எண்ணம் ஏற்படுகிறது.காவல்துறைக்கும் இவர்களுக்கும் நடுவில் நிகழும் பூனை, எலி துரத்தல்களும், மோதல்களுமே கதை.
    Show book
  • கு ப ரா மணிக்கொடி கதைகள் - cover

    கு ப ரா மணிக்கொடி கதைகள்

    கு. ப. ராஜகோபாலன்

    • 0
    • 0
    • 0
    1935 மார்ச் மாதம் முதல் 'மணிக்கொடி' மாதம் இருமுறை பத்திரிகையாக வெளிவந்தது. புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, கு. ப. ராஜகோபாலன், பி. எஸ். ராமையா, ந. சிதம்பரசுப்பிரமணியன், பெ. கோ. சுந்தரராஜன் (சிட்டி), சி. சு. செல்லப்பா, மௌனி, கி. ரா. எம். வி. வெங்கட்ராம், ஆர். சண்முக சுந்தரம், லா. ச. ராமாமிர்தம்ஆகியோருக்கு தக்க தருணத்தில் காலம் அமைத்துக் கொடுத்த இலக்கிய அரங்கம் ஆயிற்று. மணிக்கொடியில் எழுதியவர்கள் ஒரே விதமான இலக்கியக் கொள்கையோ, நோக்கும் போக்குமோ கொண்டிருந்தவர்கள் அல்லர், ஒரே தரத்தினரும் இல்லை. அவர்களுக்கிடையே கருத்து வேற்றுமை அதிகமாகவே இருந்தது. அதை வேகத்தோடு வெளியிடவும் அவர்கள் தயங்கியதில்லை. ஆனால், அவர்கள் உலக இலக்கியத்தின் சிறுகதை வளத்தை நன்றாகப் புரிந்து கொண்டிருந்தவர்கள். அதே தரத்தில் தமிழிலும் சிறுகதைகள் வரவேண்டும் என்ற தீவிர வேட்கை கொண்டவர்கள். ஆர்வமும் எழுத்து அனுபவமும் இலக்கிய ருசியும் உடையவர்கள். தமிழ் இலக்கியம் மறுமலர்ச்சி பெறவேண்டும் என்ற எண்ணத்திலும் அதற்காக உற்சாகமாக உழைப்பதிலும் அவர்கள் ஒத்த மனம் உடையவர்களாக இருந்தார்கள். சங்கு சுப்ரமணியம், தி.ஜ.ரங்கநாதன், க.நா.சுப்ரமணியம், பி.எம்.கண்ணன், சபரிராஜன், பி.எஸ்.சங்கரன், பி.வி.லக்ஷ்மி, ஸ்ரீமதி க.பத்மாவதி, ஸ்ரீமதி மீனாக்ஷி கணேசய்யர், வை.மு.கோதைநாயகி, கு.ப.சேது அம்மாள், சங்கரி ராமசந்திரன், ஸ்ரீமதி சௌபாக்கியம், ஸ்ரீமதி மங்களம், ஸ்ரீமதி ராஜி, ஸ்ரீமதி கமலாபாய், எஸ்.விசாலாட்சி, எஸ்.கமலாம்பாள், மதுரம், என்.நாமகிரியம்மாள், கே.கமலா ,கமலா விருத்தாசலம், அனசூயா தேவி, க. பத்மாவதி ஆகியோரும் மணிக்கொடியில் எழுதியவர்கள். 
    இந்த ஒலி நூலில் ரமணியின் நேர்த்தியான வாசிப்பில் கு ப ரா வின் மணிக்கொடி கதைகளாக 11 கதைகள் ஒலி வடிவம் பெறுகின்றன.
    Show book
  • Athithi Matthu Kothi - cover

    Athithi Matthu Kothi

    Vasudhendra

    • 0
    • 0
    • 0
    ತಾಯಿ ಮತ್ತು ಮಗನ ನಡುವಿನ ಸೂಕ್ಷ್ಮ ಒಡನಾಟದ ಹೃದ್ಯ ಬರಹಗಳು. ಈ ಪುಸ್ತಕಕ್ಕೆ ರಾಜ್ಯ ಸಾಹಿತ್ಯ ಅಕಾಡೆಮಿಯ ಪುಸ್ತಕ ಬಹುಮಾನ ಬಂದಿದೆ.
    Show book