Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
அழகு மயில் ஆடும் - cover

அழகு மயில் ஆடும்

ரமணிசந்திரன்

Publisher: Publishdrive

  • 0
  • 0
  • 0

Summary

“தொம்த தானி தார திரனா... திரனா... திரனன...” சவுக்க காலத்தில் தொடங்கி மத்திமத்தில் ஆடி கடைசியாகத் துரித காலத்தில் மின்னல் வேகத்தில் தாளம் தவறாமல் ஆடி முடித்தாள் மீரா.“பிரமாதம்!” என்று கைதட்டினான் சுந்தரேசன்.“இதே ஆட்டம். இங்கொன்றும் அங்கொன்றுமாய் நகைகள். நல்ல இங்கிலீஷ் கலர்களில் ஆடை. போதும், எல்லா வெளிநாட்டுக்காரர்களும் உன் காலடியில் தான் கிடக்கப் போகிறார்கள்” என்று கூறியவாறு ஒரு நீளமான சிகரெட்டைப் பற்ற வைத்தான் அவன்.இது ஒன்று அவனிடம் மீராவுக்குப் பிடிக்காது, ஆடும் போது நடராஜப் பெருமானை மனதில் வைத்து, மேடையைக் கோவிலாக உருவகித்து, அவருக்குச் செய்யும் பூஜையே தன் ஆட்டம் என்று எண்ணுவாள் அவள்.அங்கே வந்து சுந்தரேசன் சிகரெட்டுப் புகையை ஊதினால் அவளுக்கு வெறுப்பாகிவிடும்.இதை அவனிடம் எத்தனையோ தடவை, ஜாடைமாடையாகவும், பிறகு நேரடியாகவும் கூடச் சொல்லிப் பார்த்துவிட்டாள்.ஆனால், “இது ஒன்றை விட்டுவிடு கண்ணு. தொண்டையிலும் மூக்கிலும் அந்த நெடி இல்லையென்றால் எனக்கு யோசனையே ஓடுவதில்லை” என்று முடித்து விட்டான் அவன்அதற்குமேல் அதிகமாக அவனிடம் ஏதும் சொல்ல அவளுக்கும் மனம் வரவில்லை.எப்படிச் சொல்வது?ஒருவகையில் அவளது முன்னேற்றத்துக்காக முழுமூச்சுடன் பாடுபடுகிறவன் அவன். அவனது ‘நடராஜ தரிசனம்’ குழுவில் அவளை முக்கிய நாயகியாக்கி சிறப்பு தந்திருக்கிறவன்.அத்தோடு அவளது வாழ்விலும் பங்கேற்கப் போகிறவன். அவனிடம் அவளால் எப்படிக் கடுமையாகப் பேச முடியும்?ஆனால் கடுமையென்ன, வெள்ளமாய்ப் பெருகிய வியர்வையை ஒற்றி எடுத்தபடி பெரிய பெரிய மூச்சுகளை உள் எடுத்து வெளி விட்டுக்கொண்டிருந்த அவளுக்குச் சற்று நேரம் சும்மா கூடப் பேச முடியவில்லை.வேகமாக ஆடியதால் சிவந்திருந்த கன்னங்களையும், வியர்வையால் ஒட்டியிருந்த உடை வெளிப்படுத்திய வடிவான உடல் அமைப்பையும், வேக மூச்சுகளால் அது விம்மித்தணிந்த விதத்தையும் சற்று நேரம் வெறித்த சுந்தரேசன், “இது ஒரு மடத்தனம் இந்த நாட்டில்” என்றான் எரிச்சலோடு.‘எது?’ என்பது போல அவனை ஏறிட்டாள் மீரா.டஇதுவே மேல்நாடாக இருக்கட்டும்; இப்போது இருவரும் முத்தமிட்டுக் கொண்டு இருப்பார்கள். சேர்ந்தே வாழுவார்கள். இந்தப் பட்டிக்காட்டு பாரத நாட்டில் என்னடா என்றால் ஒழுக்கக்கேடு என்று முத்திரை குத்தி ஒரேயடியாக ஒதுக்கிவிடுவார்கள்” என்றான் வெறுப்புடன் அவன்.அவன் சொல்வது புரிந்து பார்வையைத் தாழ்த்திக் கொண்டு பேசாதிருந்தாள் மீரா.அவன் இன்னமும் எரிச்சலுற்று, “சரி, இலைமறைகாய் போல வாழலாம் என்றால் நீ அதற்குமேல் பெரிய பட்டிக்காடு. ஸ்டார் டி.வி. தொடர்களை எல்லாம் பார்த்து என்ன பிரயோசனம்?” என்றான் மேலும்.இனி இதே குரலில் அடுக்கத் தொடங்கிவிடுவான். என்னதான் மணக்கப் போகிறவன் என்றாலும் அதற்குமுன் சேர்ந்து வாழ்வது என்றால் அவள் மனம் ஒப்புவதாக இல்லை. அதை வெளிப்படையாகச் சொல்லி இன்னமும் ‘மூடை’க் கெடுக்க வேண்டாம் என்று நினைத்தவளாக, “சிவதாண்டவத்தில் ஒரு சின்ன இடம் சரியாக வரவில்லை. சுந்தரேசன். அதை மட்டும் இன்னொருதரம் பயிற்சி செய்துவிடலாமா? இன்று புரோகிராமில் ஆட வேண்டுமில்லையா?” என்று பேச்சை மாற்றினாள்
Available since: 04/03/2025.
Print length: 126 pages.

Other books that might interest you

  • திருப்புகழ் - Volume 9 - cover

    திருப்புகழ் - Volume 9

    நிலோபர் அன்பரசு

    • 0
    • 0
    • 0
    திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். திருப்புகழில் 1340 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்திருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர். திருப்புகழில் மிகச் சிறந்த சொல்லாட்சி, இசை நூட்பங்கள், கவித்துவம், இலக்கிய நயம், தாள நுட்பம், சந்தபேதம், இனிய ஓசை ஆகியவை அடங்கியது. இது இசை நூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றது. அருணகிரிநாதர் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருப்புகழில், இலக்கியமும் பக்தியும் இணக்கமாகக் கலக்கப்பட்டுள்ளதைக் காணலாம். மேலும், "திருப்புகழ்" இடைக்கால தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்புகளில் ஒன்றாக உள்ளது. இது கவிதை மற்றும் இசை நயத்திற்காகவும், அதன் மத, தார்மீக மற்றும் தத்துவ உள்ளடக்கங்களுக்காகவும் மக்களால் அறியப்படுகின்ற ஒரு நூலாக இருக்கிறது. திருப்புகழ் பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன. மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக அவை உள்ளன. "திருப்புகழ்" தேவாரத்திற்கு இணையாகவும், "கந்தர் அலங்காரம்" திருவாசகத்திற்கு இணையாகவும், "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் முருக பக்தர்களால் போற்றப்படுகின்றன. 
    ரமணியின் ஒலி நூலாக்கத்தில் ஒன்பதாம் தொகுதியாக 636 முதல் 700 வரையிலான 65 திருப்புகழ்ப் பாடல்கள் அமைகின்றன. இப்பாடல்கள் கதிர்காமம் திருக்கோணமலை காசி மாயாபுரி வயிரவிவனம் வெள்ளிகரம் திருவல்லம் வேலூர் விரிஞ்சிபுரம் திருவாலங்காடு திருவோத்தூர் பாக்கம் திருவேற்காடு வடதிருமுல்லைவாயில் திருவலிதாயம் திருவொற்றியூர் திருமயிலை திருவான்மியூர் கோசைநகர் பெருங்குடி தலங்களில் பாடப்பட்டவை. 
     
    Show book
  • Mahabharatham - Full Story - Tamil AudioBook - The Great Epic of Dharma and War - cover

    Mahabharatham - Full Story -...

    Viyasar

    • 0
    • 0
    • 0
    மகாபாரதம் என்பது உலகின் மிகப்பெரிய காவியங்களில் ஒன்றாகும். இதை முனிவர் வியாசர் (வியாச முனிவர்) இயற்றியது 
    இது பாண்டவர்கள் – கௌரவர்கள் இடையிலான குருச்சேத்திரப் போரைக் குறித்து விவரிக்கிறது. அதேசமயம், தர்மம், நெறி, பக்தி, ஆன்மிகம், அரசியல், குடும்பம், காதல், தியாகம் போன்ற வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியது. 
    மகாபாரதத்தில் அடங்கியுள்ள பகவத்கீதை ஆனது உலகின் மிகப் புனித நூல்களில் ஒன்றாகும். இது அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையிலான ஆன்மிக உரையாடல். 
    மகாபாரதத்தை வாசிப்பது அல்லது கேட்பது, வாழ்க்கையில் துணிவு, தர்ம உணர்வு, ஆன்மிக வழிகாட்டுதல் ஆகியவற்றை வழங்குகிறது.
    Show book
  • Sivagamiyin Sabatham -3 - cover

    Sivagamiyin Sabatham -3

    Kalki

    • 0
    • 0
    • 0
    "Sivagamiyin Sabadham' is a historical Tamil novel set in 7th century South India. The struggle for supremacy between the Chalukya Emperor, Pulikesi II, and the Pallava Emperor, Mahendra Varmar and at a later stage, his son, Narasimha Varmar, forms the core of the novel.
    
    அமரர் கல்கி எழுதிய அற்புத வரலாற்றுப் புதினம் 'சிவகாமியின் சபதம்'. பல்லவ சாம்ராஜ்யத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அதிஅற்புத காவியம் இது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இந்தப் புதினத்தில் இளவரசன் முதலாம் நரசிம்ம பல்லவனுக்கு முக்கிய இடம் உண்டு. சிவகாமியின் சபதம் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்ததைப் பற்றியது."
    Show book
  • Thozhi - cover

    Thozhi

    Vidya Subramaniam

    • 0
    • 0
    • 0
    மகன் பத்ரி, இந்து அத்தை வீட்டிற்கு அடிக்கடி வருவதை சந்தேகித்து, அவர் யார் என்று தாயிடம் விசாரிக்கிறான். பத்ரியின் பெற்றோர்கள் உண்மையை கூறவே பத்ரி இந்துவை பார்க்கும் விதம் மாறியதா? கேளுங்கள் "தோழி"
    Show book
  • Badukina Bannagalu - cover

    Badukina Bannagalu

    Chandrakant Kusunur

    • 0
    • 0
    • 0
    Short story by Chandrakant Kusnur
    Show book
  • Avvaiyar Aathichudi - Tamil AudioBook - பாடலும் விளக்கமும் - cover

    Avvaiyar Aathichudi - Tamil...

    Avvaiyar

    • 0
    • 0
    • 0
    ஆத்திசூடி என்பது  ஒளவ்வையார் எழுதிய புகழ்பெற்ற நூல். இந்நூலில் தமிழ் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு நல்லொழுக்கக் கருத்து வழங்கப்பட்டுள்ளது. 
    இதில் தர்மம், ஒழுக்கம், கல்வி, அன்பு, அடக்கம், பணிவு, கடமை போன்ற வாழ்க்கை வழிகாட்டும் நெறிமுறைகள் எளிமையாகவும் சிறப்பாகவும் சொல்லப்பட்டுள்ளன. 
    ஆத்திசூடியை படிப்பதன் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒழுக்க நெறி, பண்பாடு, மனிதநேயம் ஆகியவற்றை எளிதில் கற்றுக் கொள்ள முடியும். 
    இது தமிழ் இலக்கியத்தின் அடித்தள நூல்களில் ஒன்றாகவும், பள்ளிக் கல்வியில் அவசியமான பாடமாகவும் போற்றப்படுகிறது.
    Show book