Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
ஆச்சர்யம்! ஆனால் உண்மை! - cover

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!

ரமணிசந்திரன்

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

போலீஸ் உத்யோக அட்டையைப் பார்த்ததும் அதற்குள் முகம், கழுத்து, பிடரி என்று அவசர அவசரமாய் வியர்த்தான் கௌதமன்.“வா... வாட்... டு...யூ... வாண்ட்... ஸார்...”“உங்க பேரென்ன?”“கெளதமன்.”“இந்த பாருக்கு அடிக்கடி வருவீங்களா?”“நோ நோ அக்கேஷனல்.”“பெர்மிட் வெச்சிருக்கீங்களா...?”“ம்...”“ஷோ... மீ...”கோட்டின் இடது பக்க பாக்கெட்டில்வைத்திருந்த பெர்மிட் கார்டை எடுத்துக் காட்டினான். அவர் அதை வாங்கிப் பார்த்துவிட்டு - அவனிடமே கொடுத்தார்.“ஸாரி ஃபார் த ட்ரபிள்... ப்ளீஸ் கேரி ஆன்...”கௌதமனுக்கு மனதில் தைரியம் ஊறியது. கேட்டான்.“ஸாரி... எதுக்காக இந்த என்கொய்ரின்னு தெரிஞ்சுக்கலாமா...?”ஆபீஸர் புன்னகைத்தார்.“இந்த ‘பார்’க்குள்ளே சில பேர் போதை மருந்துகளைக் கொண்டு வந்து யூஸ் பண்றதா எங்களுக்கு தகவல் வந்தது. அதான் இந்த செக்கிங். வாரத்துல ரெண்டு தடவை இது மாதிரியான செக்கிங் வருவோம்...” சொல்லிக் கொண்டே பக்கத்து மேஜையிலிருந்த இளைஞர்களை நோக்கிப் போனார்.கௌதமன் அவசர அவசரமாய் சிக்கனை விழுங்கினான். பேரர் அதற்குள் கொண்டுவந்திருந்த - செக்கண்ட் லார்ஜையும் மடமடவென்று உள்ளே தள்ளி - டம்ளரை கீழே வைத்தான். பேரரை கையசைத்துக் கூப்பிட்டு “பில்” என்றான்.பில் வந்தது.! - அமௌண்ட் எவ்வளவு என்று பார்த்து ரூபாய் நோட்டுக்களைத் திணித்துவிட்டு எழுந்தான். இளைஞர்களிடம் பெர்மிட் கார்டு வாங்கி பார்த்துக் கொண்டிருந்த விஜிலென்ஸ் ஆபீஸரை கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே ‘விறுவிறு’வென்று நடந்து பாரை விட்டு வெளியே வந்தான்.இப்போது மழை லேசாய் தூறிக் கொண்டிருந்தது. மழையில் நனைந்து கொண்டிருந்த கார்களின் மண்டைகள் குழல் விளக்குகளின் வெளிச்சத்தில் மின்னியது.‘மிருதுளா அறைக்குள் பிணமாய் கிடப்பது எந்த நிமிஷமும் வெளிப்பட்டு விடலாம்...’‘சீக்கிரம் ஹோட்டலை விட்டு வெளியேறி விடுவது உத்தமம்.’பார்க்கிங்கைத் தொட்டு தன் கண்டேஸாவுக்குள் நுழைந்தான். இக்னீஷியனை உசுப்பி, காரை வெளியே கொண்டு வந்து விரட்டினான். கார் ட்ராஃபிக்கில் கலந்ததும் உற்சாகம் கொப்பளித்தது.‘இனிமேல் கவலையில்லை...’ஆக்ஸிலேட்டரை அவனுடைய வலது கால் அழுத்திப் பிடித்தது.காலிங் பெல் வீறிட்டு அலறிய சத்தம் கேட்டு, மெடிசன் சம்பந்தப்பட்ட புத்தகமொன்றில் ஆழ்ந்திருந்த டாக்டர் அற்புதராஜ் எழுந்து போய் தாழ்ப்பாளை விலக்கினார்.கதவுக்கு வெளியே –கௌதமன்.அணிந்திருந்த கண்ணாடியைக் கழற்றி தன் பெரிய நெற்றியை மேலேற்றினார்.“என்னாச்சு கெளதம்...?”உள்ளே வந்தான் அவன்.“மொதல்ல கதவைச் சாத்துங்க டாக்டர்...”அவர் கதவை சாத்தி தாழிட்டு விட்டு வந்தார். ஆர்வம் தாளாமல் கௌதமனின் தோள்களைப் பற்றிக் கொண்டார்.“என்ன...?”“காரியத்தை முடிச்சுட்டேன்...”“குட்... டைமண்ட் எங்கே...?” கோட் பாக்கெட்டுக்குள் கையை நுழைத்து கர்ச்சீப்பில் சுற்றி வைத்திருந்த அந்த வைரத்தை எடுத்துக்காட்டினான். டாக்டர் அற்புதராஜ் கண்களை விரித்து, உதட்டை குவித்து சந்தோஷமாய் ஊளையிட்டார்.“வீ காட் இட்! கெளதம் யூ ஹேவ் டன் ஏ மார்வலஸ் ஜாப். மிருதுளாவை முடிச்சுட்டு தானே கொண்டு வந்தே?”“ஆமா...”“யாரும் பார்த்துடலையே?”“பார்க்கிற மாதிரியா காரியம் பண்ணுவேன்? எட்டே நிமிஷம். பார் பின்பக்க மாடிப்படி வழியா மிருதுளாவோட ரூமுக்குப் போய் அவளுக்கு ஒரு தோட்டாவை குடுத்துட்டு நான் இந்த ‘சூரஜ்’ஜை கொண்டு வந்துட்டேன்...”“சரியா சுட்டியா?”“தோட்டா சரியா மார்பில் பாய்ஞ்சிருச்சு.”“செத்துட்டாளான்னு பார்த்தியா?”“பார்க்கலை. ஆனா செத்துடுவா?”நீ பார்த்துட்டு வந்திருக்கணும். இல்லை ரெண்டாவது தடவையாவது சுட்டிருக்கணும். ஏன்னா கடைசி நேரத்துல இந்த மாதிரியான விஷயங்கள் காலை வாரும். தோட்டா சரியா மார்புல பாயாமே, அதுக்கு மேலேயோ, கீழேயோ, பாய்ஞ்சிருந்தா அரை மணி நேரத்திலிருந்து ரெண்டு மணி நேரம் வரைக்கும் உயிரோடு இருக்க வாய்ப்பிருக்கு. அந்த நேரத்துல அவ சுட்டது யார்னு போலீஸ்கிட்டே ஸ்டேட்மெண்ட் கொடுக்க வாய்ப்பிருக்கே?”கௌதமனின் நெற்றி இப்போது வியர்த்து. மினுமினுத்தது
Available since: 02/08/2024.
Print length: 96 pages.

Other books that might interest you

  • Thirakkadha Kadhavugal - cover

    Thirakkadha Kadhavugal

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    The protagonist meets his boss in his hotel suite. When he is talking, he gets shocked to see the prostitute who comes to meet the boss. Why is he shocked? How does it impact his family? Listen to Thirakkadha Kadhavugal.
    
    தான் பணிபுரியும் அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவரைச் சந்தித்துப்
    பேசுவதற்காக அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வருகிறான் கதையின் நாயகன். அவருடன் பேசிக்கொண்டு இருக்கும் போது அந்த அதிகாரியை சந்தோஷப்படுத்துவதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள ஓர் அழகான பெண் வருகிறாள். அந்தப் பெண்ணைப் பார்த்ததும் அதிர்ந்து போகிற கதையின் நாயகனுக்கு அடுத்தடுத்து வரும் குழப்பங்கள்தான் ஒட்டு மொத்த கதையும். குழப்பத்திற்கான பதில் கேட்டு எந்தக் கதவைத் தட்டினாலும் அந்தக்கதவு திறக்கப்படுவதில்லை. இறுதியில் ஒரு கதவு திறந்த போது அவனுக்குக் கிடைத்த பதில்தான் என்ன ?
    Show book
  • Edhayum Oru Thadavai - cover

    Edhayum Oru Thadavai

    Anonymous

    • 0
    • 0
    • 0
    சென்னையிலும், சிகாக்கோவிலும் மர்மமான முறையில் சில சம்பவங்கள் நடைபெறுகின்றன். அஸ்திரா தன் கணவன் சூர்யகுமார் மேல் சந்தேகம் கொள்கிறாள். இரண்டு ட்ராக்குகளில் பயணிக்கும் இந்த நாவல் க்ளைமேக்ஸில் அசர வைக்கும்.
    Show book
  • Thik Thik Thilaga - cover

    Thik Thik Thilaga

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    Serial murders happening in the city pose a great challenge to the police officers. Searching the scene of crimes, police find a clue - just the name Thilaga. Who is this Thilaga? What happens when she appears in the story? Listen to Thik Thik Thilaga.
    
    நகரில் நடைபெறும் தொடர் கொலைகள் போலீஸார்க்கு பெரும் சவாலாக
    இருக்கின்றது. கொலையுண்ட நபர்கள் இறந்து கிடக்கும் இடத்தில் கிடைக்கும் சீன் ஆஃப் க்ரைம் சோதனையின் அடிப்படையில் 'திலகா ' என்கிற பெயர் அந்தக் கொலையில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வருகிறது. 'யார் அந்த திலகா ?' என்கிற கேள்வியோடு போலீஸ் களம் இறங்குகிறது. விசாரணையில் வியப்பான விஷயங்கள் வரிசை கட்டி வருகின்றன. க்ளைமேக்ஸில் திலகா வரும்போதும், கொலைகளுக்கான காரணம் இதுதான் என்று
    தெரிய வரும்போதும் போலீஸ் அதிகாரிகள் உறைந்து போகிறார்கள்.
    Show book
  • Neeyum Bommai Naanum Bommai - cover

    Neeyum Bommai Naanum Bommai

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    ராஜலிங்கம் என்னும் மிக பெரிய செல்வந்தர் தன் மகளின் சிகிச்சைக்காக உச்சிமலை சித்தரிடம் செல்கிறார்.ஒரு தீவிரவாத கூட்டம் ராஜலிங்கத்தின் சொத்தினை கைப்பற்றுவதற்காக திட்டம் தீட்டுகிறார்கள். சித்தருக்கும் தீவிரவாத கூட்டத்திற்கும் என்ன சம்மந்தம், ராஜலிங்கத்தின் மகள் உயிர் பிழைத்தாளா? தீவிரவாதிகளின் திட்டம் நிறைவேறியதா? மிக விறு விறுப்பாகவும், ஸ்வாரஸ்யமாகவும் கதை நகர்கிறது.
    Show book
  • Theepiditha Thendral - cover

    Theepiditha Thendral

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    "சற்றே அமானுஷ்யம் கலந்த ஒரு ஃபேமிலி த்ரில்லர் இந்த நாவல். மொத்தம் இரண்டு ட்ராக்குகள். ஒரு ட்ராக்கில் ஒரு அழகான குடும்பக்கதை. இரண்டாவது ட்ராக்கில் ஒரு அமானுஷ்ய கதை.
    
    இந்த அமானுஷ்ய கதையில் வரும் சிவகாமியின் நடவடிக்கைகள் திகிலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
    
    சிவகாமியின் ஒரே மகள் இதயா. சிவகாமியின் கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் மகள் இதயாவுக்கு திருமணத்தை நடத்த முடிவு செய்து வரன் பார்க்கிறான். நல்ல வரன்கள் வருகின்றன. அந்த வரன்களில் யாரைத் தேர்ந்து எடுப்பது என்கிற குழப்பம் வருகிறது.
    
    குழப்பத்தை தீர்த்துக்கொள்ள, சிவகாமி தன் மகள் இதயா வெளியே போனதும், மாடியில் பூட்டப்பட்டிருக்கும் ஒரு அறையைத் திறந்து கொண்டு உள்ளே போகிறாள். நூலாம்படைகளை விலக்கிக்கொண்டு ஒரு தேக்குமர பழைய பீரோவைத் திறக்கிறாள். பீரோ சத்தமில்லாமல் திறந்து கொள்ள, உள்ளே பீரோவின் இரண்டாவது அறையில் இரண்டடி உயரத்திற்கு ஒரு பெரிய கண்ணாடி ஜாடி தெரிய, ஜாடியின் கழுத்துப் பாகம் வரைக்கும் ஃபார்மலிக் அமிலம் நிரம்பிருக்கிறது... அதன் உள்ளே..?
    
    தீப்பிடித்த தென்றலைக் கேளுங்கள். செவிகளும் தீப்பிடிக்கும்."
    Show book
  • Abaaya Malli - cover

    Abaaya Malli

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    When horror meets Romance, it is Abaaya Malli! Are ghosts real? Ghosts are better than traitors! With research done on ghosts, this is an enthralling story!
    
    திகிலும் காதலுமான மர்மக்கதை. ஆவிகள் உண்மையா? ஆவிகளை விட கொடியவர்கள் துரோகிகள். ஒரு ஆவியுலக ஆய்வு கொண்ட பரபரப்பான புதினம்.
    Show book