¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
ஆசை ஆசை ஆசை - cover

ஆசை ஆசை ஆசை

ரமணிசந்திரன்

Editorial: Publishdrive

  • 0
  • 0
  • 0

Sinopsis

இனிமையான நாதஸ்வர இசை! கம்பீரமும் குழைவுமாகக் கேட்பதற்கு மிகவும் அற்புதமாக இருந்தது!ஆனாலும் ஒரு குறை! ஓடிக் கொண்டிருந்தது, டேப்! பெரிய வித்வானின் வாசிப்புதான் என்றாலும், அந்தப் பெரிய திருமண மண்டபத்துக்கும், அதில் நடக்க இருக்கும் விழாவுக்கும், டேப்ரிகார்டருக்கும் சற்றும் ஒத்து வராதது போல, மதிவதனிக்குத் தோன்றியது!அதுவும் கொஞ்சம் விலை மலிவான ப்ளேயர்! அத்தை வீட்டில் விலை உயர்ந்ததும் இருக்கத்தான் செய்கிறது! ஆனால், மண்டபத்துக்கு அதைக் கொணர்ந்து திருட்டுப் போய்விட்டால்?அந்த ஒரு காரணத்துக்காகவே கொண்டு வரப்பட்டது, இது! அதற்காக, இது திருட்டுப் போனால் பரவாயில்லை என்பதல்ல!“அதன் மேல் ஒரு கண் வைத்துக்கொள், வதனிக் கண்ணு! திருமணமும் அதுவுமாக உருப்படியான ஒரு பொருள் தொலைந்து போனால் நல்லதில்லை! அதனால் தான் பார்த்துக்கொள் என்று உன்னைச் சொல்லுகிறேன்! உனக்குத் துணையாகத்தான், உன் சித்தி, மாமா, பெரியம்மா, அவர்கள் பிள்ளைகள் என்று பெரிய கூட்டமே வந்திருக்கிறார்களே! ஒரு கண் வைத்துக் கொள்ளும்படி, எல்லாரிடமும் சொல்லி வைத்துவிடு!” என்று சொல்லி விட்டுத்தான் அத்தை நகர்ந்தாள்.“எங்கள் அண்ணி கூப்பிட்டிருக்கிறார்கள். வராவிட்டால் தப்பாகி விடும். அதனால், குடும்பத்தோடு எல்லோருமே வந்துவிடுங்கள்” என்று மதியுடைய அன்னை சொல்லித்தான், அவள் வழி உறவினர் எல்லோரும், இந்த மாப்பிள்ளை அழைப்பும் பட்டுக் கட்டுவதுமான முந்தைய நாள் விழாவுக்கே வந்ததே!இப்போது, அதையுமே மட்டம் தட்டுவது போலப் பேசுவதா என்று, மதிவதனிக்குச் சற்றுக் கோபம்தான்! அத்தையின் பேச்சு எப்போதுமே, இப்படித்தான்! தரம் சற்றுக் குறைவுதான்இந்த டேப் ரிக்கார்டரைப் போல!கொஞ்சம் இரண்டாவது நிலையில் உள்ள நாயனம் என்றாலும், ஒத்தும், தவிலும், தாளமுமாக, அந்தக் கம்பீரத் தோற்றமே, திருமணத்தை அழுத்தத்துடன் முன் மொழிவது போல இருக்குமே!அதை விட்டு, இருந்திருந்து, இதில் போய்ப் பெரிதாகச் சிக்கனம் பிடிக்கிறார்களே, இந்த அத்தை! இதில் மட்டுமல்ல! அவர்களால் முடிந்த எல்லாவற்றிலும்!மதிவதனியுடைய தந்தைகூட, அவருடைய தங்கையும், மணப் பெண்ணான மோனி என்கிற மோகனாவுடைய தாயுமான சுந்தரியிடம் சொல்லிப் பார்த்தார்!“போங்கண்ணா! நானே பெரிய இடத்தில் பெண்ணைக் கொடுக்கிறோமே என்று, தங்கமும் வெள்ளியுமாகப் பெரும் செலவில் மாட்டிக் கொண்டு தவிக்கிறேன்! இந்த மண்டபத்துக்கே எவ்வளவு பணம்! உங்களிடம் பணம் இருந்தால், நல்லதாக ஒரு நாதசுர செட்டை நீங்களே ஏற்பாடு பண்ணுங்கள்! என்னால் ஆனது இவ்வளவுதான்!” என்று முடித்துவிட்டு, “எனக்கு எவ்வளவு வேலை கிடக்கிறது? உதவிக்கு ஒரு நாதி இல்லாமல் நான் பாடாய்ப் பட்டுக் கொண்டிருக்கிறேன்! என்னை நிறுத்தி வைத்துப் பேசுகிறீர்களே!” என்று குறைப்பட்டவாறே, அங்கிருந்து போய் விட்டாள்.உதவிக்கு ஒரு நாதி இல்லாமலா?வேர்த்து வடிய, இங்குமங்கும் ஓடி, மண்டபத்துக்கு முன்னதாக வந்துவிட்ட உறவினர்களை வரவேற்பதும், உணவு பானம் அளித்து உபசரிப்பதும், இடையிடையே சுந்தரியின் அழைப்புகளுக்கு ஓடுவதுமாகப் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்த மனைவியைப் பார்க்கையில், சுதர்சனத்துக்கே பாவமாக இருந்தது!அதே போல, மகள் மதிவதனியும், மண்டபத்துக்கு வந்ததில் இருந்து வேலைதான் செய்து கொண்டிருக்கிறாள்!அவள் மட்டுமல்ல! அவளுடைய தாய்வழி உறவுப் பெண்களும், அவளோடு வந்து, மாப்பிள்ளை அழைப்புக்கான ஆரத்தித் தட்டுகளை விதம் விதமாக அலங்கரித்து அடுக்கிக் கொண்டிருந்தார்கள்!
Disponible desde: 03/04/2025.
Longitud de impresión: 185 páginas.

Otros libros que te pueden interesar

  • திருப்புகழ் - Volume 10 - cover

    திருப்புகழ் - Volume 10

    நிலோபர் அன்பரசு

    • 0
    • 0
    • 0
    திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். திருப்புகழில் 1340 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்திருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர். திருப்புகழில் மிகச் சிறந்த சொல்லாட்சி, இசை நூட்பங்கள், கவித்துவம், இலக்கிய நயம், தாள நுட்பம், சந்தபேதம், இனிய ஓசை ஆகியவை அடங்கியது. இது இசை நூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றது. அருணகிரிநாதர் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருப்புகழில், இலக்கியமும் பக்தியும் இணக்கமாகக் கலக்கப்பட்டுள்ளதைக் காணலாம். மேலும், "திருப்புகழ்" இடைக்கால தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்புகளில் ஒன்றாக உள்ளது. இது கவிதை மற்றும் இசை நயத்திற்காகவும், அதன் மத, தார்மீக மற்றும் தத்துவ உள்ளடக்கங்களுக்காகவும் மக்களால் அறியப்படுகின்ற ஒரு நூலாக இருக்கிறது. திருப்புகழ் பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன. மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக அவை உள்ளன. "திருப்புகழ்" தேவாரத்திற்கு இணையாகவும், "கந்தர் அலங்காரம்" திருவாசகத்திற்கு இணையாகவும், "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் முருக பக்தர்களால் போற்றப்படுகின்றன. 
    ரமணியின் ஒலி நூலாக்கத்தில் பத்தாம் தொகுதியாக 701 முதல் 778 வரையிலான 78 திருப்புகழ்ப் பாடல்கள் அமைகின்றன. இப்பாடல்கள் மாடம்பாக்கம் கோடை நகர் திருப்போரூர் உத்திரமேரூர் மதுராந்தகம் சேயூர் திருவக்கரை சிறுவை திருவாமூத்தூர் தச்சூர் திருக்கோவலூர் கோவனூர் திருவதிகை திருவாமூர் வடுகூர் திருத்துறையூர் திருநாவலூர் திருவெண்ணெய்நல்லூர் திருப்பாதிரிப்புலியூர் திருமாணிகுழி திருவேட்களம் திரு நெல்வாயில் விருத்தாசலம் வேப்பூர் நிம்பபுரம் வேப்பஞ்சந்தி திருக்கூடலையாற்றூர் கடம்பூர் திருவரத்துறை யாழ்ப்பாணாயன்பட்டினம் ஸ்ரீமுஷ்டம் திருநல்லூர் திருமயேந்திரம் சீகாழி கரியவனகர் தலங்களில் பாடப்பட்டவை.
    Ver libro
  • Brahmaratchas - cover

    Brahmaratchas

    Kottayam Pushpanath

    • 0
    • 0
    • 0
    "'Brahmaratchas' is a novel by Kottayam Pushpanath. It was published in the period of the 1980s. It is one of the most famous among his works.
    It reveals the culture of rural people and their belief in that period. The novel revolves around mythological beliefs.
    The novel has been translated into many languages ​​such as Malayalam, Hindi and Tamil etc.
    'Brahmarakchas' was made into a movie in Malayalam.
    "பிரம்மராட்சஸ்" கோட்டயம் புஷ்பநாத் அவர்களின் கதை. இது 1980 களில் வெளியிடப்பட்டது. அவரது படைப்புகளில் மிகவும் பிரபலமானது. கிராமப்புற மக்களின் நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரத்தை பற்றி எடுத்துக்காட்டுகிறது.புராண நம்பிக்கைகளையும் எடுத்தியம்புகிறது. மலையாளம் ,ஹிந்தி, தமிழ் போன்ற பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பிரம்ம ராக்ஷஸ் மலையாளத்தில் ஒரு படமாக எடுக்கப்பட்டுள்ளது."
    Ver libro
  • Chandu - cover

    Chandu

    Shanthinath Desai

    • 0
    • 0
    • 0
    ಶಾಂತಿನಾಥ ದೇಸಾಯಿ ಅವರು ಪ್ರಮುಖ ಆಧುನಿಕ ಕನ್ನಡ ಲೇಖಕರಾಗಿದ್ದಾರೆ ಮತ್ತು ಅವರ ಕಥೆಗಳು ಮಾನವ ಸಂಬಂಧಗಳ ವಿಷಯಗಳೊಂದಿಗೆ ವ್ಯವಹರಿಸುತ್ತದೆ ಮತ್ತು ಬದಲಾಗುತ್ತಿರುವ ಸಮಾಜದ ಸವಾಲುಗಳನ್ನು ಮತ್ತು ಸಾಂಪ್ರದಾಯಿಕ ಮೌಲ್ಯಗಳಿಂದ ಅದರ ದಿಕ್ಚ್ಯುತಿಯನ್ನು ಅನ್ವೇಷಿಸುತ್ತದೆ.
    Ver libro
  • Puthra - cover

    Puthra

    La Sa Ramamirtham

    • 0
    • 0
    • 0
    புத்ர தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நூறு ஆண்டுகளாகத் தொடரும் சாபம்தான் நாவலின் மையம். கதை, கதையின் மூலம் என அடுக்கடுக்காக நாவல் விரிந்துகொண்டே செல்கிறது.
    Ver libro
  • Yellara Mane Carigoo neggu - cover

    Yellara Mane Carigoo neggu

    Vasudhendra

    • 0
    • 0
    • 0
    ತಾಯಿ ಮತ್ತು ಮಗನ ನಡುವಿನ ಸೂಕ್ಷ್ಮ ಒಡನಾಟದ ಹೃದ್ಯ ಬರಹಗಳು. ಈ ಪುಸ್ತಕಕ್ಕೆ ರಾಜ್ಯ ಸಾಹಿತ್ಯ ಅಕಾಡೆಮಿಯ ಪುಸ್ತಕ ಬಹುಮಾನ ಬಂದಿದೆ.
    Ver libro
  • Madhyastharu - cover

    Madhyastharu

    Shanthinath Desai

    • 0
    • 0
    • 0
    ಶಾಂತಿನಾಥ ದೇಸಾಯಿ ಅವರು ಪ್ರಮುಖ ಆಧುನಿಕ ಕನ್ನಡ ಲೇಖಕರಾಗಿದ್ದಾರೆ ಮತ್ತು ಅವರ ಕಥೆಗಳು ಮಾನವ ಸಂಬಂಧಗಳ ವಿಷಯಗಳೊಂದಿಗೆ ವ್ಯವಹರಿಸುತ್ತದೆ ಮತ್ತು ಬದಲಾಗುತ್ತಿರುವ ಸಮಾಜದ ಸವಾಲುಗಳನ್ನು ಮತ್ತು ಸಾಂಪ್ರದಾಯಿಕ ಮೌಲ್ಯಗಳಿಂದ ಅದರ ದಿಕ್ಚ್ಯುತಿಯನ್ನು ಅನ್ವೇಷಿಸುತ್ತದೆ.
    Ver libro