Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
கீதா - cover

கீதா

ரமணிசந்திரன் Ramanichandran

Publisher: Publishdrive

  • 0
  • 0
  • 0

Summary

கீதா பரபரத்துக் கொண்டு இருந்தாள்!கால்கள் தரையில் பரவாமல், காற்றிலே மிதக்கும் வானத்துத் தேவதைபோல, வீட்டுக்கும், வாசலுக்குமாக ஓடிக்கொண்டு இருந்தாள்.வெளியில் - வீதியில் ஒரு சிறு ஓசை கேட்டால் போதும், “அதோ அண்ணா வந்துவிட்டார்!” என்று வாசலுக்கு ஓடுவாள்! “சே” என்று ஏமாற்றத்துடன் திரும்புவாள்.“கொஞ்சம் நில்லுடி” என்று குரல் கொடுத்துக் கொண்டே சிவகாமி அம்மாள் வந்தாள். அவள் கையில் மல்லிகைக் கொத்து இருந்தது. “இந்தப் பூவை தலையில் வைத்துக் கொள்.”கீதா அழகாக இரட்டைச் சடை பின்னியிருந்தாள். இரண்டு கருநாகப் பாம்புகள் போல அவை நீண்டு தொங்கின.“சீக்கிரம் வையுங்கள் அம்மா” என்று அவசரப்பட்டுக் கொண்ட கீதா, தாயிடம் தலையைத் திருப்பிக் காட்டினாள்.அவள் கூந்தலில் மல்லிகைச் சரத்தை வைக்க சிவகாமி அம்மாள் முயற்சித்தபொழுது, வெளியில் “ஜல் ஜல்’ என்ற ஓசை கேட்டது.“அம்மா அதோ குதிரை வண்டி, அண்ணா வந்து விட்டார்” என்று கூறிக்கொண்டே கீதா வாசலுக்கு ஓடினாள். ஆசையோடு வெளியில் எட்டிப் பார்த்தாள். அது குதிரை வண்டிதான். ஆனால், அது அவளது வீட்டைத் தாண்டிப் போய்க் கொண்டு இருந்தது. அந்த வண்டியில் அவளுடைய அண்ணன் இல்லை. செந்தில்ஆண்டவன் கோயிலுக்குச் செல்லும் யாரோ அமர்ந்து இருந்தார்கள்.கீதா முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வீட்டுக்குள் திரும்பினாள்
 
கூடத்தில் அமர்ந்து இருந்த சிவநேசர், “என்னம்மா கீதா உன் அண்ணன் வந்தாகி விட்டதா?” என்று கேட்டார். அவரது குரலில் கேலியும் கிண்டலும் குழைந்து இருந்தன.“இல்லேப்பா” என்று வருத்தத்துடன் கூறிக்கொண்டே கீதா உள்ளே சென்றாள்.மகனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் சிவநேசருக்கும்தான் இருந்தது. ஆனால் அவர் கீதாவைப் போல சிறு பிள்ளை அல்ல. எனவே, ஆசையை அடக்கிக் கொண்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்து இருந்தார்.அவருடைய மூத்த பிள்ளை குமரேசன், மூத்த பிள்ளை மட்டுமல்ல; ஒரே மகனுங்கூட. இராணுவத்தில் பணியாற்றுகிறான். அவன் விடுமுறையில் வருகிறான் என்றால், வீட்டில் உள்ள அனைவருமே ஆவலுடன் தானே எதிர்பார்ப்பார்கள்!கீதாவின் கூந்தலைப் பிடித்து இழுத்து, பூவை வைத்துக் கொண்டே “என்னடி உன் அண்ணன் வந்தாகி விட்டதா!” என்று சிவகாமி அம்மாளும் குத்தலாகக் கேட்டாள்.கீதாவுக்குக் கோபம் வந்து விட்டது. “ஏம்மா அண்ணனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இல்லையா?” என்று வெடுக்கென்று கேட்டாள்.“இல்லாமல் என்னடி? என் ராஜாவைப் பார்த்து எவ்வளவு காலமாகி விட்டது!”சிவகாமி அம்மாள் பேசவில்லை, பெற்ற வயிறு பேசியது. பிள்ளையைக் காணும் ஆவல் அந்தத் தாய் உள்ளத்தில் வெள்ளம் போல புரண்டு கொண்டு இருந்தது. ஆனால் கீதாவைப் போல பரபரக்கவில்லை.கீதா ஏமாற்றத்தோடும், எரிச்சலோடும் உட்கார்ந்து விட்டாள். ‘சே இந்த அண்ணா சுத்த மோசம்’ என்று அண்ணனை அர்ச்சனை பண்ணத் தொடங்கி விட்டாள்.அப்பொழுது வெளியில் மீண்டும் “ஜல் ஜல்” என்ற சலங்கை ஓசை கேட்டது.அந்த ஓசை கீதாவின் காதுகளில் நன்றாக விழுந்தது. ஆனால், அவள் பிடிவாதமாக பிடித்து வைத்த பிள்ளையார் போல இருந்த இடத்திலே இருந்தாள், இன்னொரு முறை ஏமாந்தால், அவளுக்கு அழுகையே வந்து விடும் போல இருந்தது
Available since: 04/03/2025.
Print length: 218 pages.

Other books that might interest you

  • Irantam Thirumurai - cover

    Irantam Thirumurai

    Sampanthar

    • 0
    • 0
    • 0
    இரண்டாம் திருமுறை என்பது பன்னிரு சைவத் திருமுறைகளில் இடம்பெற்றுள்ள இரண்டாம் தொகுப்பாகும். இவை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடிய தேவாரங்களில் ஒரு பகுதியை உள்ளடக்கியது. இத் திருமுறையில் 122 பதிகங்களில் அடங்கும் 1331 பாடல்கள் உள்ளன. இத்தேவாரங்கள் தமிழ்நாடு முழுவதிலும் பரந்துள்ள பல்வேறு கோயில்களில் உள்ள சிவபெருமானைக் குறித்துப் பாடப்பட்டவையாகும்.
    Show book
  • Kaalandhorum Penn - cover

    Kaalandhorum Penn

    Rajam Krishnan

    • 0
    • 0
    • 0
    காலங்கள்தோறும் பெண்ணின் நிலை எப்படி ஆணுக்குக் கீழானதாக ஆக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை இந்திய வரலாற்றின் மதநூல்கள் தொடங்கி மேற்கத்திய ஆய்வுகள், அம்பேத்கரின் எழுத்துக்கள் மற்றும் சமகாலப் பெண்கள் பிரச்சினைகளிலிருந்து அணுகும் ஒரு சமூக ஆய்வு நூல். இது வேதங்கள், திருமணச் சடங்குகள், மந்திரங்கள், மத குருமார்கள் எப்படிப் பெண்ணை அடிமைத்தனம் எனும் 'பாசிக்குட்டையில்' பிணித்துவைத்திருக்கின்றனர் என்பதை ஆதாரங்களுடனும் அறச்சீற்றத்துடனும் முன்வைக்கும் கட்டுரைகளின் தொகுப்பு. கற்பு, குடும்பம், பதிதன்மை என அமைக்கப்பட்ட மரபுகளைக் கட்டுடைக்கும் பெண்ணிய ஆராய்ச்சி ஆயுதம்.
    Show book
  • பாச்சோறு - cover

    பாச்சோறு

    Perunchiththiranar

    • 0
    • 0
    • 0
    பெருஞ்சித்திரனார் (1933–1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கைக‌ள் கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். முப்பத்தைந்து படைப்புகளைப் படைத்துத் தம் இலக்கிய ஆளுமையைத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் நிலைநாட்டினார். இவர் படைப்புகளைப் பயின்றோர் தமிழ் உணர்வும் ஊக்கமும் பெற்றனர். தமிழ்ப்பற்றும் தமிழ் உணர்வும் கொண்டு தம் பாட்டாற்றலால் இதழை நடத்திய பெருஞ்சித்திரனார் அக்காலத்தில் சுடர் விட்டு எழுந்த இந்தி எதிர்ப்புப் போரில் தம் உரையாலும் பாட்டாலும் பெரும் பங்காற்றினார். இவர் எழுதிய பாடல்கள் இந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதாக அரசால் குற்றம் சாற்றப்பெற்றது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது ஐயை என்னும் தனித்தமிழ்ப் பாவியத்தின் முதல் தொகுதியை எழுதினார். இந்தியாவில் நெருக்கடி நிலை நடைமுறைக்கு வந்தபோது பெருஞ்சித்திரனார் சிறைப்பட்டார். அப்போது ஐயை நூலின் இரண்டாம் பகுதியை எழுதி முடித்தார். பெருஞ்சித்திரனார் பன்னெடுங்காலமாக எழுதிக் குவித்திருந்த தமிழ் உணர்வுப் பாடல்கள் முதற்கட்டமாக முறையாகத் தொகுக்கப்பட்டு கனிச்சாறு என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக (1979) வெளிவந்தன. பெருஞ்சித்திரனாரின் பாட்டுத்திறமை முழுவதையும் காட்டுவனவாகவும், கொள்கை உணர்வினை வெளிப்படுத்துவனவாகவும் விளங்குவன இவர்தம் கனிச்சாறு நூலாகும். பெருஞ்சித்திரனாரின் படைப்புகளில் தமிழ்க் குமூகத்தில் உள்ள அனைவரும் தமிழ்ப்பணியாற்ற வேண்டும்; இழந்த பெருமையை மீட்க வேண்டும்; பகையை நீக்குவதற்குப் பாடுபட வேண்டும் என்பன உள்ளடக்கமாக அமைந்துள்ளன.
    Show book
  • Ponniyin Selvan Part 5 - cover

    Ponniyin Selvan Part 5

    Kalki Kalki

    • 0
    • 0
    • 0
    Listen to Amarar Kalki's Ponniyin Selvan audiobook by Deepika Arun to get teleported to the golden era of Chozhas. 
    காலத்தால் அழியாத அமரர் கல்கியின் மாபெரும் காப்பியத்தை ஒலிவடிவில் தீபிகா அருணின் குரலில் கேளுங்கள்
    Show book
  • Irunta Veetu - cover

    Irunta Veetu

    Bharathidasan

    • 0
    • 0
    • 0
    ஒரு கிராமத்தில் உள்ள குடும்பத்தில் தலைவன், தலைவி, மகன் மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இவர்களின் அன்றைய நிகழ்வுகள் வாயிலாக எப்படி ஒரு குடும்பம் இருக்கக்கூடாது என்பதை பாரதிதாசன் தனது கவிதை நடையில் பொருட்பட புனைந்துள்ளார். எந்த ஒரு குடும்பத்தில் சோம்பேறி குணமும், மூட நம்பிக்கைகளும் இருக்கின்றனவோ அவையே "இருண்ட வீடு'. குடும்பத் தலைவர் வாணிகத்தின் வழியாகப் பொருள் ஈட்டுகிறார். அவருக்குச் சிற்றம்பலம் என்பவர் கடன் கொடுக்க வேண்டும். இந்தச் சிற்றம்பலம் கடனைக் கொடுக்காமல் ஐதராபாத்திற்கு ஓடிவிடத் திட்டம் தீட்டியிருந்தார். இதை அறிந்த தலைவரின் நண்பர் ஒருவர், இச்செய்தியைக் கடிதம் வாயிலாகத் தெரிவித்திருந்தார். தலைவரின் வீட்டுக்கு வந்த கடிதத்தைத் தலைவி பார்த்தாள். அவள் கல்வி அறிவு இல்லாதவள். ஆதலால், அந்தக் கடிதத்தைத் திருமண அழைப்பிதழ் என்று எண்ணினாள்; அக்கடிதத்தை ஒரு வாரமாகத் தலைவரிடம் காட்டவில்லை. கடிதம் கிடைக்காததால் தலைவர், சிற்றம்பலத்திடம் பணம் வசூலிக்க உடனே ஆள் அனுப்பவில்லை. அவன் பணத்தைக் கொடுக்காமல் ஐதராபாத்திற்கு ஓடி விட்டான் என்ற செய்தியை அறிந்து தலைவர் வருந்தினார். தலைவி கல்வி அறிவு இல்லாதவள். எனவே, தலைவனுக்குப் பொருள் இழப்பு ஏற்படக் காரணமாகிவிட்டாள். பொருள் இழப்பு ஏற்பட்டதால் தலைவர் கோபம் கொண்டார். தலைவியும் ‘விட்டேனா பார்’ என்று சண்டைக்கு எழுந்தாள். இனி இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று கோபித்துக் கொண்டு தலைவர் வெளியேறி விட்டார். தலைவர் தமது கோபத்தை உணர்த்தக் கருதியதால் வீட்டை விட்டு வெளியேற எண்ணினார். தலைவி தன்னை ‘வெளியே போக வேண்டாம்’ என்று சொல்லித் தடுப்பாள் என்று அவர் எதிர்பார்த்தார். கல்வி அறிவும் குடும்பப் பொறுப்பும் சிறிதும் இல்லாத தலைவிக
    Show book
  • Kaadu Haadiya Jaadu Hatthi - cover

    Kaadu Haadiya Jaadu Hatthi

    Karthikadithya Belgodu

    • 0
    • 0
    • 0
    ನನ್ನ ಮೊದಲನೇ ಪುಸ್ತಕ ಕಾಡು ಹಾದಿಯ ಜಾಡು ಹತ್ತಿ ಎಂಬುದು ಒಂದು ರೀತಿಯ ಆಕಸ್ಮಿಕ ಕೃತಿ ಅಂತಲೇ ನನ್ನ ಭಾವನೆ. ಇದು ನನ್ನ ಪ್ರಥಮ ಪ್ರಯತ್ನವಾಗಿದ್ದರಿಂದ ದೊಡ್ಡ ದೊಡ್ಡ ಕಥೆಗಳನ್ನು ಯಾರೂ ಓದಲಾರರು ಹೀಗಾಗಿ ಪುಟ್ಟ ಕಥೆಗಳನ್ನೇ ಬರೆಯಬೇಕು ಎಂಬುದಷ್ಟೇ ತಲೆಯಲ್ಲಿತ್ತೇ ಹೊರತು, ಎಂಥಾ ಕಥೆಯನ್ನು ಬರೆಯಬೇಕೆಂಬ ಪೂರ್ವಾಲೋಚನೆ, ಸಿದ್ದತೆಯಿರಲಿಲ್ಲ. ಹೀಗಾಗಿ ಅದರಲ್ಲಿರುವ ಎಲ್ಲಾ ಕಥೆಗಳೂ ಸಂದರ್ಭಾನುಸಾರಕ್ಕೆ ತಕ್ಕಂತೆ ಸೃಷ್ಟಿಸಲ್ಪಂಟಂತವು. ನಾನು ಕಂಡು ಕೇಳಿ, ಅನುಭವಿಸಿದ ಘಟನೆಗಳನ್ನೇ ಪುಟ್ಟ ಪುಟ್ಟ ಕಥೆಗಳನ್ನಾಗಿ ಹೊಸೆದೆ, ಓದುಗರಿಗೆ ಕಥೆಗಳು ಹತ್ತಿರವಾದವು. ಅನುಭವದ ಕಥೆಗಳಾಗಿದ್ದರಿಂದಲೇ ಅವು ಓದುಗರಿಗೆ ಆಪ್ತವಾಗಿದ್ದು. ಕಾರಣ, ನನ್ನ ಅನುಭವಗಳು ಅವರವೂ ಆಗಿದ್ದವು.
    ಹೀಗಾಗಿಯೇ ಈಗಲೂ ಎದುರಾಗುವ ಓದುಗರು ಆ ಪುಸ್ತಕದ ಕುರಿತೇ ಹೆಚ್ಚು ಮಾತನಾಡುತ್ತಾರೆ.
    Show book