Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
தாலாட்டும் பூங்காற்று - cover

தாலாட்டும் பூங்காற்று

கிரிஸ் ப்ரெண்டிஸ்

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

ஆகாயத்தில் பறப்பது போன்ற உணர்வு.பார்க்கும் விஷயங்கள் எல்லாமே அவர்களை சந்தோஷப்படுத்துகிறது. சின்ன கண்ணனின் வரவு, உலகின் ஒட்டு மொத்த இன்பத்தையும் அவர்கள் மடியில் போட்டு தாலாட்டுவது போன்ற நிறைவு...உடலின் ஒவ்வொரு ‘செல்’லிலும் இவன் என் மகன் என்ற எண்ணம் படிந்து போக, இருவரும் அன்பையும், பாசத்தையும் அவன் மேல் மழையாக பொழிகிறார்கள்.“இவ்வளவு சொல்லியும் கேட்காமல், யாரோ பெத்த பிள்ளையை அதுவும் முறை தவறி பிறந்தவனை, தூக்கிட்டு வந்து கொண்டாடுறீங்க... இது நம் குல தெய்வத்துக்கு ஆகாது. என்ன கஷ்டம் வரப் போகுதோ தெரியலையே...”“தூக்கிட்டு போங்க. இனி இவனை மகன்னு சொல்லிட்டு என் எதிரில் வராதீங்க...”அம்மா, அன்போடு வரவேற்பாள் என்று ஆசையுடன் வந்தவன், வீட்டிற்குள் நுழைய விடாமல் சப்தம் போட,“வா சாந்தி போகலாம். நம் மனசையும், உணர்வையும் அவங்க மதிக்கலை. ஒரு குழந்தைக்காக தவம் இருந்த ஏக்கம் நமக்கு தான் தெரியும்.இனி நம் உலகமே சூர்யா தான். அவனுக்காக வாழ்வோம். உறவுன்னு சொல்ல, அவன் ஒருவன் நமக்கு போதும்.”சாந்தியுடன், குழந்தையை தூக்கியபடி வெளியேறுகிறான் சங்கர்.குழந்தை சூர்யாவுடன் இரண்டு வருட வாழ்க்கை இனிமையாக போக,அந்த கருப்பு நாள் சாந்திக்காக விடிகிறது.வேலைக்கு போன சங்கர், லாரியில் அடிபட்டு பொட்டலமாக திரும்புகிறான்“ஐயோ சாந்தி, உனக்கு இப்படியொரு நிலைமையா வரணும். கல்யாணமாகி இப்ப தானே இரண்டு வருஷமாக உன் முகத்தில் மலர்ச்சியைப் பார்த்தோம். அதை பொறுக்கமுடியாமல் அந்த கடவுள், சங்கரை அழைக்கிட்டாரே...”தோழியை கட்டிக் கொண்டு புவனா தான் கதறி அழுகிறாள்.“எனக்கு அப்பவே தெரியும். குழந்தைங்கிற பேரில் இந்த சனியனை வீட்டுக்குள் கொண்டு வந்தாங்க.இந்த குட்டிச்சாத்தான் என் மகனை வெளியே அனுப்பிட்டானே... சண்டாளி எல்லாம் இவளால் வந்த வினை.இந்த மலடி தான் என் பிள்ளை மனசை கலைச்சு... இப்படி செய்து... இப்ப என் மகனின் உயிரை பலி கொடுத்துட்டா”மகன் போன துக்கத்தில் வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லி அவர்களை தூற்றுகிறாள்.“சாந்தி தனியாக இருக்கிறாள் என்ற பரிதாபம் சிறிதும் இல்லாமல், வந்த உறவு ஜனம் காரியம் முடிந்த கையோடு கிளம்ப, முதல் ஆளாக சங்கரின் தாய் வெளியேறுகிறாள்.”“என்ன ஒரு கல் மனசு. உன் நிலைமையை நினைச்சு பார்க்காமல் எல்லாரும் ஒட்டு மொத்தமாக போய்ட்டாங்களே...”சினேகிதிக்காக புவனா கவலைப்பட,“என் சூர்யா மட்டும் எனக்கு போதும் புவனா. இந்த உலகமே என்னை கை விட்டாலும் என் சூர்யாவின் அருகாமையில் நான் வாழ்ந்துடுவேன் புவனா.அவருடைய இழப்பை... என் மகன் சரிகட்டுவான். இவனோட தாய்ங்கிற சந்தோஷம் மட்டும் எனக்கு கடைசிவரை இருந்தால் போதும்”சுரேனும், புவனாவும் சாந்திக்கு உதவியாக இருக்கிறார்கள். கவினும், சூர்யாவும் சகோதர பாசத்துடன் பழக, புவனாவுடன், சாந்தி வேலைக்கு போக தொடங்குகிறாள்.காலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே... நாட்கள் வேகமாக நகர்ந்து, வருடங்கள் உருளகவின் படித்து முடித்து, திருமணமாகி, வேலை பார்க்கும் சேலத்தில் செட்டிலாக,இன்று வரை புவனா தான் சாந்திக்கு துணையாக அருகிலேயே இருக்கிறாள்.கதவு தட்டப்பட,“வா புவனா... இந்த சூர்யா நேரத்துக்கு கிளம்பாமல் லேட் பண்ணிட்டான். இப்ப தான் போனான்.இதோ அஞ்சு நிமிஷம், புறப்பட்டு வரேன்”“ஒண்ணும் அவசரமில்லை. மெதுவா வா... நமக்கு இன்னும் நிறைய டயம் இருக்கு.”சோபாவில் உட்கார்ந்தவள், மாலையுடன் காட்சியளிக்கும் சங்கரின் படத்தையும், மகனுக்காக தவ வாழ்க்கை வாழும் சாந்தியையும் மாறி, மாறி பார்க்கிறாள்
Available since: 02/12/2024.
Print length: 88 pages.

Other books that might interest you

  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Show book
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Show book
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Show book
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Show book
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Show book
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Show book