Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
மயங்குகிறாள் ஒரு மாது - cover

மயங்குகிறாள் ஒரு மாது

கிரிஸ் ப்ரெண்டிஸ்

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

“இதிலே ஐயாயிரம் இருக்கு. விஜய்க்கு ஸ்கூல் பீஸ் கட்டிட்டு, டியூசனுக்கும் ஏற்பாடு பண்ணிடுங்க சார். டென்த் எக்ஸாம் எழுத நான் நல்ல மார்க் எடுக்கணும். சயின்ஸ்தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறதா நினைக்கிறான்”“உங்களோட அன்பான கவனிப்பில் அருணும், விஜய்யும் நல்லா படிக்கிறாங்க. நீங்க சொன்ன மாதிரியே ஏற்பாடு பண்றேன். அப்புறம் சொல்லுங்க சார். பிள்ளைகளை பார்த்தாச்சா”“இல்லை. இனிமேதான் போகணும். அதான் உங்களை பார்த்துட்டு போகலாம்னு நேரா இங்கே நுழைஞ்சிட்டேன்”சரி போய் பாருங்க, ஆபிஸ் ரூமை விட்டு வெளியே வருகிறார் குருநாதன்.பிள்ளைகள் அங்கிங்குமாக ஓடி விளையாடிக் கொண்டிருக்க, அவர்களை தாண்டி விசிட்டர் ஹாலுக்கு வருகிறார்.“சார் வாங்க”அங்கிருக்கும் கண்காணிப்பாளர் குருநாதனை வரவேற்க,“உங்க பிள்ளைகளை பார்க்க வந்திங்களா, இப்பதான் காபி குடிச்சுட்டு, ரூமுக்கு போனாங்க. இருங்க வரச் சொல்றேன்”சிறிது நேரத்தில் இருவரும் அவரை நோக்கி வேகமாக வருகிறார்கள்.“அப்பா” ஆளுக்கொரு பக்கம் அன்போடு பற்றிக்கொள்ள,“என்னப்பா, எப்படியிருக்கீங்க?”“நாங்க நல்லா இருக்கோம். அக்காவெல்லாம் வரலையா?”அருணா செமஸ்டர் எக்ஸாம். கல்பனாவுக்கு வேலை சரியா இருக்கு. நான்தான் பத்து நாளாச்சேன்னு புறப்பட்டு வந்தேன்”“வாங்கய்யா மரத்தடியில் போய் உட்கார்ந்து பேசுவவோம்” அருண் சொல்ல.“இந்தாப்பா இதிலே பால்கோவா இருக்கு. உங்க ப்ரெண்ட்ஸ்க்கு கொடுத்துட்டு சாப்பிடுங்க. கொண்டு போய் ரூமில் வச்சுட்டுவா அருண். நான் விஜய்யோடு வேப்பமரத்தடியில் உட்கார்ந்திருக்கேன்”சொன்னவர், விஜய்யுடன் நடக்கிறார். மரத்தை சுற்றி வட்டமாக கட்டப்பட்டிருந்த சிமெண்ட் மேடையில் அமர்ந்தவர்,“விஜய், இந்த வருஷம் பத்தாவது. படிப்பில் அதிக கவனம் இருக்கணும். நீ இஷ்டப்பட்டபடி மெக்கானிக் லயனில் நல்லபடியா படிச்சு, பெரிய ஆளாக வரணும். ஒரு இலக்கை நோக்கி வரும்போது நம் கவனத்தை சிதற விடக்கூடாது”“அப்பா, நான் ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணினவன். பெத்தவங்க யாருன்னு தெரியாத எனக்கு, ஒரு அன்பான குடும்பம் கிடைச்சிருக்கு அக்காவும், நீங்களும் என் மேல் காட்டற அன்புக்கு என்னைக்கும் கட்டுப்பட்டவனாக இருப்பேன்.நல்லா படிக்கிறேன்பா. நீங்க பாராட்டற அளவுக்கு நல்ல மார்க் எடுப்பேன்”அருண் அவர்களை நோக்கி ஓடிவர,“பார்த்து அருண். எதுக்கு இப்படி அவசரமா ஓடிவரே”மூச்சிறைக்க அருகில் வந்தவன்“அப்பா நீங்க எங்ககூட இருக்கிற இந்த கொஞ்ச நேரமும், உங்க பக்கத்திலேயே இருக்கணும். அதுக்காகதான்”அன்பை கண்களில் தேக்கி பார்க்கும் அவனை தழுவிக்கொள்கிறார்.“அருண், விஜய் நான் உங்களுக்கு சொல்றதெல்லாம் இதுதான். கடவுள் படைப்பில் எத்தனையோ வினோதங்கள் அன்புக்கு ஏங்கற குழந்தைகள். பிள்ளைகளின் பாசம் கிடைக்காமல் வருந்தும் வயதானவர்கள்கை, கால் இல்லாமல் சிரமப்படும் மனிதர்கள், வறுமையில் வாடும் குடும்பங்கள், இப்படி எத்தனையோ இருக்கு. நமக்கு இதிலே கிடைச்சிருக்கிற நல்லதை பார்க்கற பக்குவத்தை வளர்த்துக்கணும்.உங்க பிறப்பு பரிதாபத்துக்குரியதாக இருக்கலாம். என் மூலமா கடவுள் உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை காண்பிச்சுருக்காரு. உங்களுக்கு அப்பா, இரண்டு அக்கா, உங்க நலனில் அக்கறை காட்ட இருக்கிறோம். அதனால எப்போதும் மனசை தளரவிடாம சந்தோஷமா இருக்கணும். நல்லா படிக்கணும். அடுத்தவங்ககிட்டே அன்பு பாராட்டற நல்ல மனசு இருக்கணும்.நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் வாழ்க்கையில் உயர்ந்து சந்தோஷமா இருக்கிறதை இந்த அப்பா பார்க்கணும், செய்வீங்களா?”“நிச்சயம்பா. உங்க சொல் எங்களுக்கு வேதவாக்கு. நல்லா படிப்போம். எங்களை பத்தி கவலைப்படாதீங்க”விஜய் சொல்ல,“அப்பா, பிரஷர் இருக்குன்னு சொன்னீங்களே, ஒழுங்கா மருந்து, மாத்திரை சாப்பிடறீங்களா? டாக்டர்கிட்ட செக் அப்புக்கு போனீங்களா?”“இல்லப்பா... போகணும்”“என்னப்பா இது. நீங்க உடம்பை பார்த்துக்கணும். நீங்க நல்லா இருந்தாதான் எங்களால நிம்மதியா இருக்க முடியும். இனிமே தனியே வராதீங்க. அக்காவோடு வாங்க. வரமுடியலைன்னா போனில் பேசுங்கப்பா போதும்” “நீங்க முந்தி மாதிரி இல்ல. இளைச்சு போயிட்டீங்க”கவலையாய் பேசும் அருணை அன்புடன் பார்க்கிறார்
Available since: 02/12/2024.
Print length: 92 pages.

Other books that might interest you

  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Show book
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Show book
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Show book
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Show book
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Show book
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Show book