Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
மணம் வீசும் மலர்கள் - cover

மணம் வீசும் மலர்கள்

கிரிஸ் ப்ரெண்டிஸ்

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

“விக்ரம், ஊருக்கு போய்ட்டு வந்தாலே, உன் மூடு சரியாக இரண்டு நாளாகுது. இஷ்டமில்லாமல் ஏன் போற.”“அப்படி விட முடியலைடா. என் தங்கைக்காகதான் போறேன்.”“சரி, வா, இன்னைக்கு ஹாஸ்டலில் மட்டன் சாப்பாடாம். போய் சாப்பிடலாம்.”“நான் வரலை குமார். நீ போ. எனக்கு கொஞ்சம் ‘ப்ராஜெக்ட்’ வேலை இருக்கு. முடிச்சுட்டு மெதுவா சாப்பிடறேன்.”“ஆமாம், நீ இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு வந்தா, வெறும் தயிர் சாதம் தான் கிடைக்கும். சொன்னா கேளு...” கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்கிறான் குமார்.“சரி, இப்படி பெத்தவரை விஷமாக வெறுக்கிறியே, படிப்பு முடிஞ்சதும் என்ன செய்யப்போற. ஊர் பக்கம் போய்தானே ஆகணும்.”சாப்பிட்டபடி கேட்கும் நண்பனை பார்த்தவன்,“அதை பத்தி நானும் யோசிச்சுட்டு இருக்கேன். ஏதாவது கிடைக்கிற வேலையை தேடிக்கிட்டு, எங்காவது போகப்போறேன். நிச்சயமாக ஊர் பக்கம் போகமாட்டேன்.”“நீ சொல்ற. உன் அப்பா அப்படி விட்டுடுவாறா. இல்லை, அவங்களுக்காக உன் தங்கையைதான் வேண்டாம்னு விட்டுடுவியா.”“புரியலை குமார். பாவம் வித்யா... பொம்பளபுள்ளை. அவங்க சொல்றபடி கேட்டு இருந்துதான் ஆகணும். அப்பாவோட ஒய்ப்போடு சேர்ந்து வீட்டுவேலையெல்லாம் செய்யறாஅப்பாவுக்கு கடையில் வியாபாரம் இல்லையாம். ப்ளஸ்டு படிச்சது போதும்னு படிப்பை நிறுத்தப்போறாங்க. இதில் கல்யாணமும் பண்ணப் போறாங்களாம். எப்ப ஒழிச்சுக் கட்டுவோம்னு அந்த கிராதகி நினைச்சுட்டு இருக்கா. இப்போதைக்கு என்னாலும் எதுவும் செய்ய முடியலை. அதான் வருத்தமாக இருக்கு.”“சரி, நீ சொல்றதை பார்த்தா, உன் தங்கையும் உங்க சித்திக்கிட்டே கஷ்டப்பட்டுகிட்டுதான் இருக்கா போலிருக்கு. கல்யாணம் பண்ணி வைக்கிறது நல்ல விஷயம்தானே. அதுக்கப்புறமாவது அவங்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் இல்லையா.”குமார் சொல்ல, அவன் சொல்வதும் ஒரு விதத்தில் சரியாக இருக்குமென்று விக்ரமிற்கு படுகிறது.கண்ணாடி முன் நின்று தலை சீவுகிறான் முகுந்தன். சுருளான முடி படிய மறுக்கிறது.கருப்பாக இருந்தாலும் பார்க்க அழகாகதான் இருக்கிறேன். தனக்குள் சிரித்தவன்,“அம்மா, அம்மா...” என்றான்.“எதுக்கு முகுந்தா கூப்பிடறே. இப்பதான் அடுப்பில் குழம்பை வச்சேன். என்ன விஷயம் சொல்லு.” வருகிறாள் சாரதா.“ஸ்கூலில் பி.டி. மாஸ்டராக இருக்கேன். பார்க்கவும் ஆஜானுபாகுவாக அழகாகவே இருக்கேன். எதுக்காக, பெண் வீட்டில் என்னை வேண்டாம்னு சொல்லிட்டாங்க.”“அட கடவுளே... அதுக்காக இவ்வளவு அவசரமாக கூப்பிட்டே. குறை உன்கிட்டே இல்லைபா. நமக்கு சொந்தமாக வீடு இல்லையாம். அப்பா இல்லாத பையன். கடைசி வரை குடும்ப பொறுப்பு உன் தலையில்... இவன் சம்பாத்தியத்தில் வீடு, வாசல் எல்லாம் வெறும் கனவுதான்னு... வேண்டாம்னு சொல்லிட்டதாக புரோக்கர் சொன்னாருப்பா.”“அப்படியா சொன்னாங்க. ஏதோ நீ சொன்னியேன்னு பார்க்க சுமாராக இருந்தாலும், போட்டோவை பார்த்துட்டு சரின்னு சொன்னேன்.”“பெரிய கோடீஸ்வர வீட்டில் சம்பந்தம் பண்ணட்டும். சரி, விடு. நமக்குன்னு ஒருத்தி இனிமேலா பிறக்கப்போறா. பார்ப்போம்.”“முகுந்தா, நான் சொல்றேன்னு கோபப்படாதே. நீ ஏன் லோன் போட்டு வீடு ஏதாவது வாங்கக்கூடாது.இந்த காலத்தில் சொந்த வீடு இல்லைன்னா, ஒரு படி, மட்டமாகதான் நினைக்கிறாங்கப்பா.”கட்டிலில் உட்கார்ந்தவன், அம்மாவை இழுத்து பக்கத்தில் உட்கார வைக்கிறான்.“அம்மா, அவசரப்படவேண்டாம். என் சம்பாத்தியத்தில் கடன் எதுவும் இல்லாமல் குடும்பம் நடந்தறோம். ஏதோ கையிலும் கொஞ்ச காசு இருக்கு. இப்ப லோன் போட்டு, பணத்தை லோனுக்கு கட்டி சிரமப்படணுமா சொல்லு. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த நாம் நிம்மதியைதான் தக்க வச்சுக்கணுமே தவிர, அடுத்தவங்களுக்காக வாழணும்னு நினைச்சா... நிம்மதி பறி போயிடும்மா.”“நீ சொல்றதும் சரிதான்னு தோணுது. இருந்தாலும் நல்ல இடத்தில் பெண் வரமாட்டேங்குதே. அதான் மனசுக்கு யோசனையாக இருக்கு.”“நீ ஏன் பெரிசா யோசிக்கிறே. நம்மை மாதிரி இருக்கிற இடத்தில் பெண் பாரு. உனக்கு பிடிச்சிருந்தால் போதும். தாலி கட்டி கூட்டிட்டு வரேன்.எனக்கு கல்யாணம் பண்ணி பார்க்கணும்னுதான் ஆசைப்பட்டியே தவிர, பெரிய இடத்து சம்பந்தம் வரணும்னு ஆசைப்பட்டியாம்மா.”“அப்படியெல்லாம் இல்லை முகுந்தா. நல்ல பெண்ணாக மனசுக்கு பிடிச்சவளாக அமைந்தால் போதும்.”“அப்புறம் என்னம்மா. போ. போய் அடுப்பில் வச்ச குழம்பை பாரு. கரிகிடப் போகுது.”வெண் பற்கள் தெரிய சிரிக்கும் மகனை பார்த்தபடி உள்ளே போகிறாள் சாரதா.
Available since: 02/12/2024.
Print length: 94 pages.

Other books that might interest you

  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Show book
  • Kaadhugal - cover

    Kaadhugal

    M V Venkatram

    • 0
    • 0
    • 0
    இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை.
    Show book
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Show book
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Show book
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Show book
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Show book