மகரந்த மலர்கள்
கிரிஸ் ப்ரெண்டிஸ்
Publisher: Pocket Books
Summary
விடிந்தும் விடியாத காலைப் பொழுது. கீழ்வானில் சூரியன் மெல்ல உதயமாக...“பலமே, அம்பலமேபொன்னம்பழ சிவமே... சிவமே...”சிவன் கோவிலில் போடும் பாட்டு, கிராமத்தின் எல்லா வீதிகளிலும் கேட்கிறது.தூக்கம் கலைந்த வேதா, மெல்ல எழுந்து வந்து வாசலில் நின்று- கோபுரத்தைப் பார்த்து கையெடுத்துக் கும்பிடுகிறாள்.“சிவபெருமானே... உன் அருளால இன்றைய பொழுது நல்லவிதமா போகணும். உலகத்து ஜனங்க எல்லாரும் நிம்மதியா இருக்கணும்.”“என்ன வேதா... எழுந்தாச்சா?”“.....”“எழுந்தாச்சா வேதா...?”வாசலுக்கு வருகிறார் சபாபதி.“நாலு மணிக்கே முழிப்பு வந்துடுச்சு. விடியட்டுமேன்னு படுத்திருந்தேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் கந்தன் வந்துடுவான். பால் கறக்கட்டும். காப்பி போட்டுத் தரேன்.”“ஒண்ணும் அவசரமில்லை. நான் காலார சித்த நேரம் நடந்துட்டு வரேன். ஆற்றங்கரை காத்தை சுவாசிச்ச மாதிரியும் இருக்கும்.”கால்களை செருப்பில் நுழைத்துக்கொண்டு, தெருவில் இறங்கி நடக்கும் கணவரைப் பார்க்கிறாள்வயது எண்பதை நெருங்குகிறது என்று சொன்னால், யாரும் சத்தியமாக நம்ப மாட்டார்கள். வயல் வெளியில் உழைத்து உரமேறிய உடம்பு. கம்பும், கேப்பையுமாக சத்தான உணவுகளை சாப்பிட்டு வளர்ந்த தேகம்.இன்று வரை மகிழ்ச்சி குறையாமல்தான் இருவரும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.மனம் நிறைகிறது வேதாவுக்கு.“பெரியம்மா... என்ன யோசனை?”எதிரில் கந்தன்.“வா... வா... உன்னைத்தான் எதிர்பார்த்தேன். உனக்காக மங்களம் காத்திருக்கு. போய் பால் கறந்துட்டு வா.”பசு மாட்டுக்கு அவர்கள் வைத்த பெயர் மங்களம்.“குறையொன்றுமில்லை... மறைமூர்த்தி கண்ணாகுறையொன்றுமில்லை கோவிந்தா.”‘அவருடைய செல்போன் அல்லவா பாடுகிறது. யாராக இருக்கும்...?’- பச்சைப் பொத்தானை அழுத்தியவள்,“ஹலோ... யாரது... நான்தான் வேதா பேசறேன். அவரு வெளியே போயிருக்காரு” என்றாள்.எதிர்முனையில் சிரிப்பொலி கேட்க,“அம்மா, நான் மாது... மாதவன் பேசறேன்.”“மாது... நீதானா? நான் யாரோன்னு நினைச்சேன். எப்படிப்பா இருக்கிறீங்க? என் மருமகள், பேரன், பேத்தி எப்படி இருக்காங்க?”“ம்... எல்லோரும் நல்லா இருக்கோம். உன் பேரன் பரணி, கோயம்புத்தூரில் பாங்கியில் ஆபீசர். அவனுக்கென்ன குறை...? பேத்தி சஹானாவுக்கு இது கடைசி வருஷம். படிப்பை முடிக்கப்போறா. மருமகள் கவிதா, கவிதையாய் வாழ்ந்துட்டு இருக்கா...”“அறுபது வயசு நெருங்கப்போகுது. உனக்கு இன்னும் கிண்டலும், கேலியும் குறையலையே.”“முகத்தை உம்முன்னு வச்சுட்டிருந்தா வாழ்க்கையின் சுவாரசியமே போயிடும்மா. அரசாங்க வேலையில் இருந்து ஓய்வு வாங்கிட்டேன். உன் மருமகளுக்கு அடுப்படி வேலையில் இருந்து, தோட்ட வேலை வரைக்கும் உதவி செய்துட்டு பொழுதைக் ஓட்டிட்டு இருக்கேன்.”“அப்படிதாம்ப்பா இருக்கணும். என் மருமக சொக்கத் தங்கம். அருமையா குடித்தனம் நடத்திட்டு இருக்கா.”“மருமகளை இந்த அளவுக்கு தலையில் தூக்கி வச்சு புகழ்றீங்க ஆனா, இங்கே வந்து எங்களோடு இருங்கன்னு கூப்பிடுறோம். கிராமத்தைவிட்டு நகரமாட்டேங்கிறீங்களே...?”“நாங்க வாழ்ந்த கிராமம். விட்டுட்டு வர மனசு வரலைப்பா அதுவுமில்லாம... உடம்பு ஆரோக்கியத்தோடு நல்லாவே இருக்கு... அப்புறம் என்னப்பா? நீயும், கவிதாவும் வந்து பார்த்துட்டுப் போறீங்க. நான் வராட்டியும், உன் அப்பா மாசம் ஒரு தடவை உங்களைப் பார்க்க பட்டணம் வந்துடுறாரு.தூக்க முடியாத அளவுக்கு எங்களுக்கு பலகாரமும், தேவையான பொருட்களையும் வாங்கி அனுப்பிடறா மருமக கவிதா.இந்த அன்பு பரிமாற்றம் வற்றாத ஜீவநதியா பெருகிப் பாய்கிற வரை எங்களுக்கு தனியா இருக்கிற உணர்வே இல்லைப்பா.”“சரிம்மா! நீங்க வரவேண்டாம். சஹானாவுக்கும், பரணிக்கும் கல்யாணம் பண்ணி வச்சுட்டு... நானும், கவிதாவும் கிராமத்துக்கு வந்துடுறோம்.”“ரொம்ப நல்லது. அதைச் செய்யுங்க. நானும், என் மருகளும் சந்தோஷமா இருக்கோம்.”“கவிதா... அம்மா பேசுறாங்க”- குரல் கொடுக்கிறான்
