காலங்களில் அவள் வசந்தம்
கிரிஸ் ப்ரெண்டிஸ்
Maison d'édition: Pocket Books
Synopsis
“அப்பப்பா என்ன கூட்டம். இப்ப வியாழக்கிழமையில் பாபா கோயிலுக்கு அதிக கூட்டம் வருது. சாமியை பார்க்கவே இரண்டு மணி நேரமாயிடுச்சே. நல்லவேளை முன்னால வீடு வந்து சேர்ந்துட்டோம்.”பேசியபடி கமலம் சோபாவில் அமர,“ஆமாம்மா... இனிமே, வியாழக்கிழமை பாபா கோயிலுக்கு காலையிலேயே போய்ட்டு வந்துடலாம்.”“உனக்கு காலேஜிக்கு லேட்டாயிடுமே.”“கொஞ்சம் சீக்கிரம் கிளம்பினா நேரத்துக்கு வந்துடலாம். என்ன பார்த்துட்டு நிக்கற, தலைவலிக்குது, போய் சூடா ஒரு டம்ளர் காபி போட்டு எடுத்துட்டு வா. அம்மா உங்களுக்கு...”“எனக்கு வேணாம்பா. நேரம் கெட்ட நேரத்தில் காபி குடிச்சா, எனக்கு சரிவராது. நீ குடி.”கையிலிருந்த காபியை அவனிடம் கொடுத்தவள், மெளனமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.“என்ன இது, இருந்த பழைய மாவை சரிகட்டி தோசை ஊத்திட்டியா... வாயிலே வைக்க முடியலை. ஏன் வந்து ஒரு இடியாப்பம் செஞ்சு, குருமா வைக்க உனக்கு வணங்க மாட்டேன்னு சொல்லிடுச்சா.”“இன்னைக்கு ஆபீசிலும் வேலை அதிகம். அதுவும் வந்ததும் அடுப்படியில் எல்லாம் அப்படியே கிடந்ததால், ஒழிச்சு போட்டு டிபன் செய்ய நேரமாயிடும்னு செய்தேன்.”“இப்ப என்ன மகாராணி வரும்போது, எல்லாத்தையும் சுத்தமா எடுத்து வைக்கணும்னு சொல்றியா. இந்த குட்டியை பார்த்துக்கிட்டு என்னால் இவ்வளவுதான் செய்ய முடியும் புரிஞ்சுதா. வாய்க்கு வாய் பேசாம போய் வேலையைப் பாரு.”சாப்பிட்டு விட்டு ஹாலில் உட்கார்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தவன், தனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்பது போல, டி.வியில் லயித்திருந்தான்சாப்பிட கூட தோன்றாமல் எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு, படுக்கை அறைக்குள் நுழைந்தாள்.அம்மாவுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்துவிட்டு, உள்ளே நுழைந்த கணவனை பார்த்தாள்.“ஏன் எப்போதும் மூஞ்சியை தூக்கி வச்சிட்டு இருக்கே. ஆனா வீட்டில்தான் இப்படி, வெளியே கிளம்பிட்டா முகத்தில் சிரிப்பும், பொலிவும் தாண்டவமாடுது. போன வாரம் உன் ப்ரெண்ட் அவ பேரென்ன... மாலினி... அவகூட அப்படி சிரிச்சு பேசிக்கிட்டு நான் பைக்கில் வர்றதை கவனிக்காம கூட ரோடில் போனே. வீட்டுக்கு வந்தா முகமே மாறிடுது.”தேவையில்லாமல் தன்னை சீண்டுகிறான் என்று புரிந்து கொண்டவள்,“தலை வலிக்குது. சாப்பிட கூட பிடிக்கலை. அதான் சோர்வாக இருக்கு.”“ஊசி போன மாவை சாப்பிட்டா வயிறு கெட்டுடும்னு எங்களுக்கு கொடுத்துட்டு, சாப்பிடாம வந்துட்டியா?”இப்படிகூட ஒரு மனிதனால் பேச முடியுமா. வார்த்தைகளில் விஷத்தை தடவி... அடுத்தவர் மனம் புண்பட பேசுவதில்தான் எவ்வளவு சந்தோஷம். இரண்டு வருஷ தாம்பத்யம். கையில் குழந்தை... இன்னும் கட்டின மனைவியை புரிந்துக் கொள்ளாமல் இருக்கிறானே. இதற்கு மேல் பேசி விவாதத்தை வளர்க்க விரும்பாமல் படுத்துக்கொண்டால் நந்தினி.ராத்திரி எதுவும் சாப்பிடாமல் படுத்தது, வயிற்றை பிரட்ட, சமாளித்துக்கொண்டு காலை டிபன், சாப்பாடு வேலையை முடித்து ஆபீசுக்கு கிளம்ப...“நந்தினி, என் வெள்ளை ஷர்ட்டை அயர்ன் பண்ணிக் கொடு. இன்னைக்கு அதைத் தான் போடணும்.”குழந்தை சுமிக்கு பால் கொடுத்தவள்,“எனக்கு லேட்டாச்சு. அப்புறம் பஸ்ஸை மிஸ் பண்ணிடுவேன். வேறு ஏதாவது அயர்ன் பண்ணின ஷர்ட் போட்டுக்குங்க. சாயந்திரம் வந்து அயர்ன் பண்ணி வைக்கிறேன்.”“அரவிந்தா உன் இஷ்டத்துக்கு சட்டைகூட போட முடியாது போலிருக்கே. மகாராணி உத்தரவுபடி நடந்துக்க.”கோபமாக அவள் முன் வந்தான்
