Kamparamayanam Kishkinthakantam
Kampar
Narrator Ramani
Publisher: RamaniAudioBooks
Summary
கம்பராமாயணம் ஆறு காண்டங்களையும், 123 படலங்களையும், 10,589 பாடல்களையும் கொண்ட நீண்ட காப்பியமாகும். 4 கிட்கிந்தா காண்டம் 17 படலங்கள் பம்பை வாவிப் படலம் அனுமப் படலம் நட்புக் கோட்படலம் மராமரப் படலம் துந்துபிப் படலம் கலன் காண் படலம் வாலி வதைப் படலம் தாரை புலம்புறு படலம் அரசியற் படலம் கார்காலப் படலம் கிட்கிந்தைப் படலம் தானை காண் படலம் நாட விட்ட படலம் பிலம் புக்கு நீங்கு படலம் ஆறு செல் படலம் சம்பாதிப் படலம் மயேந்திரப் படலம் சீதையைத் தேடிச் செல்கின்ற இராமனும், இலக்குவனும் கிட்கிந்தைக்கு வருகிறார்கள். அங்கு அனுமனைச் சந்திக்கிறார் இராமர். அனுமன் சுக்கிரீவன் என்பவரை இராமருக்கு அறிமுகம் செய்கிறார். சுக்கிரீவனின் மனைவியை சுக்கிரீவனுடைய அண்ணன் வாலியே கவர்ந்து சென்று விடுகிறார். அதனால் இராமன் வாலியைக் கொன்று சுக்கிரீவனின் மனைவியை மீட்கிறார். இராமனும் தன்னைப் போல மனைவியை இழந்து தவிக்கிறான் என்பதை அறிந்த சுக்கிரீவனும், அவனுடைய குடிமக்களான வானரங்களும் இராமனுக்கு உதவ முன்வருகிறார்கள். அங்கதன் என்பவர் தலைமையில் அனைவரும் செல்கின்றனர். வழியில் சம்பாதி எனும் சடாயுவின் அண்ணனைச் சந்திக்கின்றனர். சம்பாதி இலங்கையில் சீதை சிறைப்பட்டு இருப்பதைத் தெரிவிக்கின்றார். இலங்கைக்குச் செல்ல ஏற்றவர் அனுமன் என்று தீர்மானித்து அனுமனிடம் தெரிவிக்கின்றனர். அனுமனுக்கு அவருடைய பெருமையை உணர்த்தி அவர் இலங்கை செல்ல விஸ்வரூபம் எடுக்கிறார்.
Duration: about 5 hours (05:02:39) Publishing date: 2022-03-31; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

