Kannathil Muthamittaal
Indumathi
Narrator GG
Publisher: Storyside IN
Summary
தன்னை நேசிக்கும் குடும்பத்திடம் நேர்மையுடனும் அன்புடனும் இருக்கும் சத்யா பணி நிமித்தமாய் தன் தாயின் விருப்பத்தை மீறி வெளிநாடு செல்ல நேர்கிறது. சென்ற இடத்தில் வெளிநாட்டு பெண் ஒருத்தி வேறொருவனால் ஏமாற்றப்பட்டு விட்டதாயும், அவளை ஏற்குமாறும் சத்யாவிடம் வேண்டுகோள் வைக்கிறாள். ஊரில் வசிக்கும் சத்யாவின் தங்கை யாமினி , குணத்திலும் பண்பிலும் சிறந்தவனான அவளது அத்தை பையன் சிவாவை மணந்து கொள்ளாமல் பட்டிக்காட்டான் என அலட்சியம் செய்கிறாள். பின்னர் ரவிச்சந்திரன் என்ற கல்லூரி நண்பனால் கெடுக்கப்படுகிறாள். மாமா குடும்பத்தின் மீது பெருமதிப்பு கொண்ட சிவா என்ன செய்தான் என்பதையும் அவன் முடிவை கண்ட சத்யா எடுக்கும் முடிவையும் பற்றின சுவாரஸ்யம் நிறைந்த கதை தான் கன்னத்தில் முத்தமிட்டால்.
Duration: about 5 hours (05:25:47) Publishing date: 2021-03-19; Unabridged; Copyright Year: 2020. Copyright Statment: —

