லிட்டில் பிரின்சஸ்ஸும் பட்டாணியும்
Indira Srivatsa
Publisher: IN Publications
Summary
ஒரு காலத்தில் இளவரசர் ஒருவர், பெரிய அரண்மனையில் வாழ்ந்தார். ஆனால், இளவரசர் தனிமையில் இருந்தார். அவர் உண்மையில் ஒரு இளவரசியை மணக்க விரும்பினார்...
Publisher: IN Publications
ஒரு காலத்தில் இளவரசர் ஒருவர், பெரிய அரண்மனையில் வாழ்ந்தார். ஆனால், இளவரசர் தனிமையில் இருந்தார். அவர் உண்மையில் ஒரு இளவரசியை மணக்க விரும்பினார்...
கிஷ்கிந்தா காண்டத்தில் ராமர் அனுமனையும் சுக்ரீவனையும் சந்திப்பது, சுக்ரீவனுடன் நட்பு கொள்வது, வாலி-சுக்ரீவன் கதை, ராமர் வாலியைக் கொன்று, சுக்ரீவனை வானர அரசனாக்குவது, சுக்ரீவன் தன் வானரர்களை சீதையைத் தேடும் பணியில் அனுப்புவது, அங்கதன் தலைமையில் தெற்கே செல்லும் வானரர் படை, கழுகு சம்பாதியின் மூலம் சீதை இலங்கையில் இருப்பதை அறிவது, ஆஞ்சனேயர் இலங்கைக்குப் பறந்து செல்லத் தயாராவது – ஆகியவை இடம் பெறுகின்றன.Show book
ராமரைச் சந்தித்து வாழ்த்த வந்த அகஸ்திய முனிவர் ராமருக்கு ராவணனின் முழு சரித்திரத்தை சொல்ல ஆரம்பிப்பது, ராவணனின் முன்னோர்கள் பற்றிய கதைகள், ராவணனும் அவன் சகோதரர்களும் பற்றிய கதைகள், ராவணன் போர் வெறியுடன் பல உலகங்களுக்கும் திக் விஜயம் செய்து பலரையும் வெல்வது, ராவணனின் அகங்காரத்தை சிவபெருமான் அடக்குவது, ராவணன் குபேரனின் மகனிடமிருந்து சாபம் பெறுவது, ராவணன் வாலியிடமும், கார்த்த வீரியார்ஜுனனிடமும் அவமானப் பட்டு, சமாதானமாய்ப் போனது, ராவணன் மகன் இந்திரஜித்தின் அபார ஆற்றல் ஆகியவை முனிவரால் சொல்லப் படுகின்றன. தொடர்ந்து , அயோத்தி மக்கள் சீதையைப் பற்றி அவதூராய்ப் பேசியதை அறிந்த ராமர் அவளை வனவாசம் செய்ய அனுப்புவது, சீதை வால்மீகி முனிவருடன் தங்கி, ராமரின் வாரிசுகளான லவ குசர்களைப் பெற்றெடுப்பது, ராமரின் சிறப்பான ஆட்சி, பரதன், சத்ருக்னன், லக்ஷ்மணன் ஆகியோரின் வாரிசுகளுக்கு ஆள்வதற்கு நாடுகளை வழங்குவது, ராமர் சம்புகனை வதம் செய்வது, ராமர் அச்வமேத யாகம் நடத்திய சமயத்தில் லவ குசர்கள் வந்து வால்மீகி முனிவர் இயற்றிய ராமாயணத்தைப் பாடுவது, ராமர் சீதையை மீண்டும் தன் கற்பை நிரூபிக்கக் சொல்வது, சீதை அழைத்ததும் அவள் தாய் பூமாதேவி வந்து தன்னுடன் பூமிக்கு அடியே பாதாள லோகத்துக்குக் சீதையை கொண்டு போய்விடுவது, சீதை இல்லாத ராமரின் துக்கம், மகாவிஷ்ணுவான ராமர் தம் அவதாரத்தை நிறைவு செய்து, அயோத்தி வாசிகளுடன் சரயூ நதியிலிறங்கி உலககைத் துறந்து வைகுண்டத்துக்குத் திரும்புவது – ஆகியவை இடம் பெறுகின்றன.Show book
நம் இதிகாசங்கள், புராணங்கள் எல்லாவற்றுக்கும, குறிப்பாக ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றுக்கு மூன்று மரபுகள் இருக்கின்றன – காவிய மரபு, கலை மரபு மற்றும் வழிபாட்டு மரபு. அதிலும் மகாபாரதத்தில் கலை மரபில் பல பிராந்திய அளவிலான கதைகள் கிளைத்திருக்கின்றன அல்லது இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த மரபு சில சமயம் வழிபாட்டு சடங்குகளாகவும் பரிணமித்திருக்கறது. தமிழகத்தைப் பொறுத்த வரை நாட்டுப் பாடல்கள், நாட்டார் கதைகள் – குறிப்பாக புகழேந்திப் புலவர் 15-ஆம் நூற்றாண்டில் எழுதியதாக சொல்லப்படும் அம்மானைகள் – கலை மரபின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன. இவை பாட ஏற்றவை. பாடவே எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏறக்குறைய ஆசிரியப்பாவின் சந்தத்தில் அமைந்திருக்கின்றன. பிற்காலத்தில் இவற்றின் அடிப்படையில் இசை நாடகங்கள், தெருக்கூத்துக்கள் எழுதப்பட்டு நடிக்கப்பட்டிருக்கின்றன. கதைப்பாடல் காவிய மரபு என்றும் சொல்லலாம். அது என்னவோ தெருக்கூத்தில் பாரதக்கதைகள் அதிகம், ராமாயணம் அதிகமாகக் காணப்படுவதில்லை. அபிமன்னன் சுந்தரி மாலை, அல்லி அரசாணி மாலை, ஏணியேற்றம், பவளக்கொடி மாலை, புலந்திரன் களவு மாலை, புலந்திரன் தூது, பொன்னருவி மசக்கை, மின்னொளியாள் குறம், திரௌபதி குறம், அல்லி குறம், விதுரன் குறம், பஞ்சபாண்டவர் வனவாசம், சுபத்திரை மாலை ஆகியவற்றை புகழேந்திப் புலவர் எழுதி இருக்கிறாராம். அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை ஆகியவை புகழ் பெற்றவை.Show book
மூதுரை – ஒளவையார்: தமிழ் இலக்கியத்தின் பொற்கால படைப்புகளில் ஒன்றான மூதுரை, ஒளவையார் அவர்களால் இயற்றப்பட்டது. குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் வாழ்வியல் நெறிகளை எளிமையான மற்றும் இனிமையான சொற்களில் போதிக்கும் இந்த நூல், ஒழுக்கம், நற்பண்புகள், கல்வி, மரியாதை போன்றவற்றை கற்றுத்தரும் ஒரு வழிகாட்டியாக விளங்குகிறது. பள்ளிக் கல்வியில் முக்கிய இடம் பெற்றிருக்கும் மூதுரை, தமிழர் பாரம்பரியத்தை உணர்த்தும் சிறப்புமிக்க நூலாகும். மூதுரை தமிழ் கலாசாரத்தையும், நல்லொழுக்கப் பாதையையும் தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்கும் அரிய பொக்கிஷமாகும்.Show book
ஆத்திசூடி என்பது ஒளவையார் எழுதிய புகழ்பெற்ற நூல். இந்நூலில் தமிழ் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு நல்லொழுக்கக் கருத்து வழங்கப்பட்டுள்ளது. இதில் தர்மம், ஒழுக்கம், கல்வி, அன்பு, அடக்கம், பணிவு, கடமை போன்ற வாழ்க்கை வழிகாட்டும் நெறிமுறைகள் எளிமையாகவும் சிறப்பாகவும் சொல்லப்பட்டுள்ளன. ஆத்திசூடியை படிப்பதன் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒழுக்க நெறி, பண்பாடு, மனிதநேயம் ஆகியவற்றை எளிதில் கற்றுக் கொள்ள முடியும். இது தமிழ் இலக்கியத்தின் அடித்தள நூல்களில் ஒன்றாகவும், பள்ளிக் கல்வியில் அவசியமான பாடமாகவும் போற்றப்படுகிறது.Show book
நீலா சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த ஓர் ஏழைச் சிறுமி. மாலா சென்னையிலே புகழுடன் விளங்கும் ஒரு டாக்டரின் மகள். இருவரும் நெருங்கிய தோழிகளாகின்றனர். அவர்களது அன்பினால் பல நன்மைகள் விளைகின்றன. அவர்களது நட்பினால் பல அற்புதங்கள் நிகழ்கின்றன.ஒரு சாதாரண கிராமத்தில் தொடங்கிய இந்தக் கதை, உலக அரங்கில் எப்படி அரங்கேறியது ?Show book