Hymns from 11th Thirumurai
IlamperumanAtikalAthiraAtikalPattinaththuAtikal
Narrator Ramani
Publisher: RamaniAudioBooks
Summary
இளம்பெருமானடிகள் சிவபெருமான் திருமும்மணிக்கோவை என்னும் நூலின் ஆசிரியர். இவரது ஆசிரியப்பாக்கள் சங்கப்பாடல் போன்ற அமைப்பினைக் கொண்டுள்ளன. வெண்பாச் செய்தி அகத்திணையின் வரும் கைக்கிளைப் பாடல்களாக உள்ளது. கட்டளைக்கலித்துறைப் பாடல்களும் இவ்வாறே அமைந்துள்ளன. இவற்றில் சங்க காலத் தமிழ்ச்சொற்கள் பெரிதும் பேணப்பட்டுள்ளன. எனினும் மும்மணிக்கோவை என்னும் சிற்றிலக்கியப் பாங்கு தேவாரக் காலத்துக்குப் பிந்தியது. எனவே இவரது காலத்தை கி. பி. எட்டாம் நூற்றாண்டு என அறிஞர்கள் கணிக்கின்றனர். அதிராவடிகள் (அதிரா அடிகள்) என்னும் புலவர் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் இயற்றிய மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இவரது தமிழ்நடை சங்கப்பாடல் நடைபோல் காணப்படுகிறது. எனினும் வடசொற்கள் மருவி வருகின்றன. ஆனைமுகன் பற்றிய கற்பனைக் கதைகள் தழுவப்பட்டுள்ளன. இளம்பெருமான் அடிகள் இவர் வாழ்ந்த நூற்றாண்டில் வாழ்ந்தவர். என்றாலும் அவரது கைக்கிளைத் திணைப் பொருள் பாணி அதிராவடிகள் பாடல்களில் காணப்படவில்லை. பதினோராம் திருமுறையில் கோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, திருஏகம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபா ஒருபது என்னும் 5 நூல்கள் பட்டினத்து அடிகளால் பாடப்பட்டவை. பட்டினத்தார், பட்டினத்துப் பிள்ளை, பட்டினத்துப் பிள்ளையார், திருவெண்காட்டு அடிகள் என்னும் பெயராலும் இவர் குறிப்பிடப்படுகிறார். இவரது புகார்ப்பட்டினம் பெரிய பட்டணம் ஆதலால் இவரைப் 'பட்டணத்தார்' எனவும் வழங்குகின்றனர்.
Duration: about 3 hours (02:45:59) Publishing date: 2022-03-16; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

