ஒழிவில் ஒடுக்கம் - சைவ சித்தாந்த ஞானம்
சீர்காழிக் கண்ணுடைய வள்ளல்
Narrateur Ramani
Maison d'édition: Ramani Audio Books
Synopsis
வள்ளலார் ஏன் //ஒழிவில் ஒடுக்கம்// எனும் சைவ சித்தாந்த ஞானம் என்ற நூலைப் பதிப்பித்தார்? ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம் அருளியவர் சீர்காழிக் கண்ணுடைய வள்ளல் ஆவார். இவர் திருஞான சம்பந்தரின் முதல் மாணாக்கர் ஆவார். இந்நூல் எல்லா நூல்களைக் காட்டிலும் மிகவும் மாறுபட்டு இருக்கின்றது ஏன் எனில் இது சரியை, கிரியை, யோகம் இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – மதிப்பதே இல்லை எனவும் கூறலாம். இந்நூலின் சாராம்சம் என்னவென்று ஆய்ந்தால், 1. 36 தத்துவங்களை கடத்தல் 2. அருள் பெறுதல் 3. தற்போதம் ஒழித்தல் 4. தான் அவனாதல் மேற்கூறியவைகளை சரியை கிரியைகளால் அடைய முடியாது என்பதால் அவைகளை ஆற்ற வேண்டியதில்லை என்றே வலியுறுத்துகின்றது இந்நூல் பிராமணர்களுக்கு எதிராக இருப்பதால் , அன்னாளில் இதை எரித்ததாகக் கூறுவர். பகிஷ்காரம் செய்ததாகவும் கூறுவர். இந்நூலின் பெருமையை உணர்ந்துதான் வள்ளலார் இதனை தானே பதிப்பித்தார். ஒழிவில் ஒடுக்கத்தின் இரத்தினச் சுருக்கம் – முப்பத்தறுவரையும் கடந்து ” சும்மா இரு” – மௌனத்தில் இரு ” – ” தற்போதம் ஒழித்து நில் ”. அவ்வளவே.
Durée: environ 2 heures (01:38:01) Date de publication: 30/06/2023; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

