Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Listen online to the first chapters of this audiobook!
All characters reduced
திருவகுப்பு - cover
PLAY SAMPLE

திருவகுப்பு

அல்டிவான் டோரஸ்

Narrator Ramani

Publisher: Ramani Audio Books

  • 0
  • 0
  • 0

Summary

ஒரே பொருளை பலவிதமாக வகுத்து தொகுத்து சொல்லும் நூல் வகைக்கு வகுப்பு என்று பெயர். அருணகிரியார் இவ்வகையில் 25 வகுப்புகள் பாடியுள்ளார். அவையாவன‌ 1. சீர்பாத வகுப்பு , 2. தேவேந்திர சங்க வகுப்பு 3. வேல் வகுப்பு 4. திருவேளைக்காரன் வகுப்பு  5. பெருத்த வசன வகுப்பு 6. பூத வேதாள வகுப்பு  7. பொருகளத் தலகை வகுப்பு 8. செருக்களத் தலகை வகுப்பு  9. போர்க்களத் தலகை வகுப்பு 10. திருஞான வேழ வகுப்பு 11. திருக்கையில் வழக்க வகுப்பு  12. வேடிச்சி காவலன் வகுப்பு 13. சேவகன் வகுப்பு 14. வேல்வாங்கு வகுப்பு 15. புய வகுப்பு 16. சித்து வகுப்பு 17. கடைக்கணியல் வகுப்பு 18. சிவலோக வகுப்பு 19. மயில் வகுப்பு 20. கொலு வகுப்பு 21. வீரவாள் வகுப்பு  22. சிவகிரி வகுப்பு 23. திருச்செந்தில் வகுப்பு 24. திருப்பழநி வகுப்பு. இவற்றுள் முதல் 18 தான் அருணகிரியாரின் வாக்கு என்று ஆறுமுக நாவலர் போன்ற ஆன்றோர்களின் கருத்தாகும். ஏழையின் இரட்டைவினை யாயதொரு டற்சிறையி  ராமல்விடு வித்தருள்நி   யாயக் காரனும் என்று அருணகிரிப் பெருந்தகை திருவகுப்பில் கூறுவதினால் அவர் மனித உடம்பை விட்டு கிளி ரூபம் பெற்ற பின் திருவகுப்புகளை பாடியிருப்பார் எனத் தோன்றுகிறது. இக்கருத்திற்கு போதுமான ஆதாரங்களும் உள்ளன. பெண்ணாசை பெரும் தீமை விளைவிக்கும் என்பதை பல திருப்புகழில் அருணகிரியார் கூறி இருப்பதை பார்க்கிறோம்.ஆனால் திருவகுப்புகளில் பெண்ணாசையைப் பற்றி எங்குமே கூறப்படவில்லை. மேலும் எம பயத்தைப் பற்றி பல திருப்புகழ் பாக்களில் சித்தரித்திருக்கிறார். முதல் 18 வகுப்புகளில் சேவகன் வகுப்பைத்தவிர வேறு எந்த வகுப்பிலும் இது பற்றி கூறப்படவே இல்லை. உரைபெற வகுத்தருணை நகரின்ஒரு பத்தனிடும் ஒளிவளர் திருப்புகழ் மதாணிக்ரு பாகரனும் என்று வேடிச்சி காவலன் வகுப்பில் 'நான்' என்று சொல்லாமல் 'ஒரு பத்தன்' (பக்தன்) படர்க்கையில் கூறி இருப்பது கவனிக்கப்பாலது. தான் முன்பு மானிடப் பிறவியில் திருப்புகழை இயற்றினேன் என்கிற தொனி இங்கு ஒலிக்கிறது. 
இவ்விருபத்தைந்து வகுப்புகளையும் ரமணியின் நேர்த்தியான சந்த ஓசையில் கேட்கலாம்.
Duration: about 2 hours (01:44:39)
Publishing date: 2023-09-19; Unabridged; Copyright Year: — Copyright Statment: —