Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
உன் பார்வை ஒரு வரம் - cover

உன் பார்வை ஒரு வரம்

ஆர்.மகேஸ்வரி

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

பௌர்ணமி நிலவு ஒன்று பூமிக்கு வந்தது போல்... பளிச்சென்று... வைரத்தின் ஒளிவீச்சுடன்... அழகின் இலக்கணமாய் ஹாலுக்கு வந்தாள் கீர்த்தனா.சாதாரண காட்டன் சேலையிலும் தேவதைக்கணக்காய்... புத்தம் புது மலராய்... மணம் வீசிக் கொண்டு வந்து நின்றாள்.சமையலறையைப் பார்த்து குரல் கொடுத்தாள்.“அம்மா... அம்மா...”“இதோ வந்துட்டேம்மா...” கைகளை முந்தானையில் துடைத்துக் கொண்டு வந்தாள் தாய் தமிழ்ச்செல்வி.“எனக்கு நேரமாயிடிச்சி...வரவா?” என்ற மகளை ஆச்சரியமாய்ப் பார்த்தாள்.“எங்கேடி...இந்த காலம் கார்த்தால போறே? இன்னைக்கு ஆபீசும் இல்லையே!”‘என்னம்மா மறந்துட்டியா? நேத்து நைட் சொன்னேனே! இன்று தைக்கிருத்திகை. வட சென்னிமலை கோவிலுக்கு போறேன்னு.”“ச்சே! நான் ஒரு ஞாபகமறதிக்காரி. எப்படியோ அந்த சென்னிமலை முருகன் இனிமேலாவது உனக்கு நல்ல புத்தி கொடுக்கட்டும். இந்த வருடமாவது திருமணயோகம் வந்து... சமூக சேவை, நியாயம், தர்மம் எல்லாத்தையும் விட்டு ஒழிச்சிட்டு... உனக்குன்னு ஒரு நல்ல வாழ்க்கை அமைய... அந்த கடவுள்தான் கருணை காட்ட வேண்டும்!” அம்மா கவலையாய் கூறினாள்.“ஏம்மா... சலிச்சுக்கிறே! நான் இப்போ அங்கே போறது சாமி கும்பிட மட்டும் இல்லை!’’ புதிராய் பேசினாள் கீர்த்தனா.“பின்னே?”வயதான பெரியவர்கள் எத்தனை பேர் முருகனை தரிசிக்க ஆசைப்பட்டு... படியேற முடியாமல்... தவிச்சிட்டு இருப்பாங்க. அவங்களை எல்லாம் என் ஸ்கூட்டியில ஏத்திட்டு... பாதை வழியா கொண்டு போய் சாமி கும்பிட வைத்து... திரும்ப மலையிறங்க உதவி செய்யத்தான் அங்கே போறதே!”“சேவை...ம்...சமூக சேவை! உன் வயசுல இருக்கிறவ எல்லாம் கையில ஒண்ணும், வயித்துல ஒண்ணுமா... புருஷனோட லட்சணமா இருக்க... நீ மட்டும் ஏன்டி வருகிறவனையெல்லாம் விரட்டிகிட்டு... சேவை சேவையின்னு அறிவு கெட்டத்தனமா அலையறே!” தமிழ்ச்செல்வி கோபமாய் கூறினாள்.“உன் பொண்ணு ஒரு நல்லது செய்தா...உனக்குப் பிடிக்காதே! திட்டாதேம்மா! நான் செய்யும் நல்லதிற்கு புண்ணியமே கிடைக்காது!”“பிடிக்காம இல்லடி கீர்த்தனா, நீ சேலத்துல இருந்து அவ்ளோ தூரம் ஸ்கூட்டியில போய்... மேலேயும், கீழேயும் மலை ஏறி இறங்கினால்... இந்த மண்டையைப் பிளக்கும் வெய்யிலில் உன் உடம்புக்கு..., ஏதாவது வந்துட்டா... என்னால் தாங்க முடியுமா? சொல்லு.”“வயசானவங்களுக்கு செய்யறது கோடி புண்ணியம்மா!”“புண்ணியமும் வேண்டாம்... ஒண்ணும் வேண்டாம். போக ஆசையானால்... பஸ்ல போயிட்டு உடனே திரும்பிடு” கட்டளையாய் தாய் கூற, தவித்து விட்டாள் கீர்த்தனா.“என்னம்மா நீ! நான் செய்யும் அத்தனை நல்லதோட பலனும், உன்னையும்... அப்பாவையும் தான் வந்து சேரும். என்னை ஆசீர்வதிக்கற அத்தனை பேரும்... நீயும். உன்னை பெற்றெடுத்த மகராசனும், மகராசியும் நல்லாயிருக்கணும்னு சொல்லும்போது... என்மனசு குளிர்ந்துடும். அப்போ எவ்வளவு சந்தோஷப்படுவேன் தெரியுமா? மனித ஜென்மமா பிறப்பதே ஒரு தடவைதான்! மனிதர்களுக்கு எந்த நேரத்துல எதுவரும் என்று சொல்ல முடியாது. அப்படியிருக்க உயிரோடு இருக்கும் காலம் வரை... மத்தவங்களுக்கு உபத்திரவம் இல்லாமல்... உதவியா இருந்தால்... என்னம்மா கெட்டுப்போகும்? ம்ம்...?” சாமர்த்தியமாய் பேசினாள்
Available since: 02/15/2024.
Print length: 148 pages.

Other books that might interest you

  • பட்டத்தரசி - cover

    பட்டத்தரசி

    Suratha

    • 0
    • 0
    • 0
    சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 29 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர். 
    பட்டத்தரசி என்ற நூலில் வாசல், சோலையில் ஓர் நாள், கவிஞன் கவலை, ஆயிரம் பொன், அங்கங்கே, ஆரியத்தின் அச்சம், தோற்றான் வென்றான், தேய்ந்த கனவு, கூத்தாடி மீசை என்று ஒன்பது கவிதைக் கதைகளை சுரதா படைத்துள்ளார்,
    Show book
  • Maththuru Thayir - cover

    Maththuru Thayir

    Jeyamohan

    • 0
    • 0
    • 0
    ‘மத்துறு தயிர்’ என்பது காதல், இழப்பு, பக்தி மற்றும் பல நுண்ணிய உணர்வுகளை ஆராயும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான கதை. முதிய ஒரு பேராசிரியரின் வாழ்க்கையின் ஊடாக, அவரது நம்பிக்கை, இலக்கியம் மற்றும் அவரை உருவாக்கிய உறவுகள் பற்றிய சிந்தனைகளை பின்னிப்பிணைந்து, தமிழரின் செழுமையான இலக்கிய பாரம்பரியத்துடன் நம் தினசரி அனுபவங்களை இணைக்கிறது இந்தக் கதை. குறிப்பாக கம்பர் ராமாயணம் மூலமாக மனித துயரத்தின் ஆழம் மற்றும் அதிலிருந்து எழும் சகிப்புத்தன்மையை அழகாக விவரிக்கிறார் எழுத்தாளர். மத்துறு தயிர் ஒரு புத்திசாலியின் உள்மன அழுத்தங்களை, அவருடைய ஆசான்மீது கொண்டிருந்த மரியாதையை, மற்றும் இழந்த நட்பு-உறவுகளின் இருண்ட அனுபவங்களை வெளிப்படுத்துகிறது. இலக்கியத்தின் நிலையான ஆற்றலுக்கும், உறவுகளின் நிலையற்றத்தன்மயையும் ஒரு சேர அளிக்கும் கதை.
    Show book
  • புதுவெளிச்சம் - cover

    புதுவெளிச்சம்

    வெள்ளியங்காட்டான்

    • 0
    • 0
    • 0
    வெள்ளியங்காட்டான் (1904 - 1991) என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி. தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில் மெய்ப்புப் பார்ப்பவராக (Proof Reader) பணியாற்றியவர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர். தன்னுடைய ஊரை அடியாகக்கொண்டு வெள்ளியங்காட்டான் என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார்.  "ஒரு எழுச்சி, ஒரு நுழைவு, ஒரு நெகிழ்வு, ஒரு பொறி, ஒரு ஏக்கம், ஒரு வியப்பு, ஒரு தோற்றம், ஒரு மின்னல், இவற்றுக்கு வண்ணம் கொடுத்து வெளிப்படுத்தும் கவிதைக்கு "லிரிக்' என ஆங்கில இலக்கியத்தில் அடையாளம் கூறப்படுகிறது. வெள்ளியங்காட்டான் கவிதைகளைப் படித்தபோது "லிரிக்' கவிதைகளுக்கு வேண்டிய கனல் மூண்டிருப்பதைக் கண்டேன்” என்கிறார் கவிஞர் திரிலோக சீதாராம். "வயல் வெளிகளிலே அன்பு / வடிவ நெல்லெல்லாம் / சுயநல எருமை அந்தோ / சூறையாடுதே' என்ற வெள்ளியங்காட்டான் பாடலையும் இதர பாடல்களையும் குறிப்பிட்டு எளிமையும், உண்மையான உணர்ச்சியும் உள்ள பாடல்கள் வெள்ளியங்காட்டான் பாடல்கள் என பேராசிரியர் அ. சீனிவாசராகவன் குறிப்பிடுகிறார். “வெள்ளியங்காட்டானை யார் என்று எனக்குத் தெரியாது. அவர் பாடல்களோ எனக்கு பழக்கமிருக்கிறது. அவர் பாடல்களில் நாட்டின் பண்பு நன்றாக இருக்கிறது. உண்மைகளையே சொல்லியிருப்பதனால் பாட்டுகள் பொருளுடையனவாக இருக்கின்றன” என்கிறார் கொத்தமங்கலம் சுப்பு. 
    கவிஞர் புவியரசுவின் அருமையான முன்னுரையோடு வெளிவந்த தத்துவ விளக்க நூல் புது வெளிச்சம். ”அறிவியல் பார்வையும் விசாலமான சமய நூலறிவும் உண்மையை உரக்கச் சொல்லும் துணிவும் காலத்திற்கேற்ற சிந்தனையும் கொண்டு படைத்துள்ள இந்தப் புது வெளிச்சம் என்ற ஆய்வு நூல் நம் சிந்தைக் குழப்பத்தைத் தெளிவுபடுத்தும் அரிய படைப்பு.” 
    பேராசிரியர் ரமணியின் வாசிப்பில் உபநிடதங்களை வாழ்வியலாக்கிய வெள்ளியங்காட்டானின் நூல் ஒலி நூலாக….
    Show book
  • Avvaiyar Verses - cover

    Avvaiyar Verses

    Avvaiyar

    • 0
    • 0
    • 0
    அவ்வையார் பாடிய பாடல்கள் சங்க இலக்கியங்களில் குறுந்தொகையில் 15, நற்றிணையில் 7, அகநானூற்றில் 4,புறநானூற்றில் 33 என்ற எண்ணிக்கையில்  அமைந்துள்ளன. தம்மை அன்புடன் ஏற்றுக்கொண்டு, நெடுங்காலம் தம் அரசவையிலேயே ஔவையாரை அமர்த்தி அவர் புலமையை மதித்தவன் அதியமான் நெடுமான் அஞ்சி ஆவான். ஔவையார் தன் காதலைப் புரிந்து கொள்ளாமல் உறங்குகின்ற ஊரைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டு அந்த ஊர்மக்களைத் தாக்கி வீழ்த்தித் தன்னிலையைப் புலப்படுத்த முயல்கிறாள். 
    முட்டுவேன்கொல்! தாக்குவேன் கொல்! 
    ஓரேன் யானும்; ஓர் பெற்றி மேலிட்டு 
    ஆஅ! ஒல் எனக் கூவுவேன் கொல்! 
    அலமரல் அசைவளி அலைப்ப, என் 
    உயவுநோய் அறியாது, துஞ்சும் ஊர்க்கே! 
    ஆத்திசூடி என்பது 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி. 
    தமிழ் கற்கும் போது தமிழின் உயிரெழுத்துகளைச் சொல்லித் தருகின்ற பொருட்டு ஔவையின் ஆத்திசூடியைக் கொண்டு கற்பிப்பதை ஆசிரியர்கள் கடைப்பிடித்து வருகின்றார்கள். 
    கொன்றை வேந்தன் ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். கொன்றை மரத்தின் மலரை விரும்பி அணியும் கடவுள் சிவன். அவரது புதல்வர்களுள் ஒருவராகிய முருகனைப் போற்றி இந்நூல் பாடப்பட்டுள்ளது. இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல்: 
    “கொன்றை வேந்தன் செல்வன் அடிஇணை 
    என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே” 
    நல்வழி: மக்கள் தம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நல்வழிகளை நேரிசை வெண்பாவில் இந்நூல் எடுத்துரைப்பதால் இப்பெயர் ஏற்பட்டது. இந்நூலின் க
    Show book
  • Vivek In Tokyo - cover

    Vivek In Tokyo

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    நேர்மையான நீதிபதி ஸ்வாதி சிங்கிற்கு பல இடையூறுகள் வருகின்றன. தன் பதவியை விட்டு ஓய்வு பெற்று, தன் மகளின் சிகிச்சைக்காக டோக்கியோ செல்ல திட்டமிடுகிறார். அங்கு இடையூறுகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக ரகசிய உளவுத்துறை அதிகாரிகளான விவேக் மற்றும் விஷ்ணுவின் உதவியை நாடுகிறார். அதற்குப் பின் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கின்றன. யார் உண்மையான குற்றவாளி என்று அறிந்து கொள்ள கேளுங்கள் விவேக் இன் டோக்கியோ!
    Show book
  • Mayil Kazhuththu - cover

    Mayil Kazhuththu

    Jeyamohan

    • 0
    • 0
    • 0
    ‘மயில் கழுத்து’ மனித உணர்வுகள், தத்துவ சிந்தனைகள் மற்றும் உறவுகளின் சிக்கலான தன்மைகளை ஆராய்கிறது. பாலசுப்ரமணியனும் ராமனும் வாழ்க்கை, இலக்கியம் மற்றும் மனித இயல்பு குறித்து ஆழமான உரையாடல்களில் ஈடுபடுகிறார்கள். கலாச்சாரம் மற்றும் அறிவுசார் விவாதங்களின் பின்னணியில் விரியும் இந்தக் கதையில், அவர்கள் சந்திக்கும் மனிதர்கள் அவர்களுக்கு ஏற்படுத்தும் உணர்ச்சி கொந்தளிப்புகள், அதை அவர்கள் எதிர்கொள்வதில் உள்ள சிக்கல்கள் என அவியலாக பரிமாறுகிறார் எழுத்தாளர். சந்திரா போன்ற ஆளுமைகள் அவர்களின் வாழ்க்கையில் எழுப்பும் கேள்விகள், ஈர்ப்பு, அதிகாரம் மற்றும் மனதின் குழப்பங்கள் குறித்த சிந்தனைகளை எழுப்புகின்றன. ஒவ்வொரு உரையாடலுக்கும் ஆழமான அர்த்தம் உள்ள ஒரு உலகத்திற்குள் வாசகர்களை அழைத்துச் செல்கிறது இந்தக் கதை.
    Show book