Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
மஞ்சம் வந்த தென்றல்! - cover

மஞ்சம் வந்த தென்றல்!

ஆர்.மகேஸ்வரி

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

சாமி படங்களிலிருந்து பழைய பூச்சரத்தை அகற்றி, சாமந்தி பூச்சரத்தை அணிவித்தாள் ராஜேஸ்வரி. காமாட்சி விளக்கை ஏற்றி விட்டு சூடத்தை தட்டில் வைத்து ஏற்றினாள்.ராஜேஸ்வரியின் இதயத்தில் அடைந்துக்கிடந்த வேதனையெல்லாம் வெப்பத்தில் உருகி கண்களில் துளிர்த்தது. உதடுகள் நடுங்க “தாயே... தாயே...” என்று உச்சரித்ததேத் தவிர அதற்குமேல் அவளால் எதையும் கேட்க முடியவில்லை. சூடத்தட்டை கீழே வைத்துவிட்டு கைகூப்பி வணங்கி நின்றபோதுதான் “வெண்ணிலா” என்றலறிய நீலமேகத்தின் “பதட்டக்குரல் பதட்டமாய் ஒலித்தது.என்னவோ, ஏதோவென்று பதறிய ராஜேஸ்வரி பூஜையறையிலிருந்து ஹாலுக்கு ஓடிவந்தாள்.“என்னங்க... என்ன ஆச்சு?”“வெண்ணிலா மயங்கி விழுந்துட்டா! இந்து ஓடிப்போய் தண்ணிக் கொண்டுவா!”“ஐயோ... கடவுளே... வெண்ணிலா... வெண்ணிலா!” என்று மகளின் கன்னத்தைத் தட்டினாள் ராஜேஸ்வரி.இந்துமதி தந்த தண்ணீரை முகத்தில் தெளித்தார். கண்கள் அசைந்து முயற்சித்து திறந்தது.“வெண்ணிலா... இங்கே பாரும்மா... அப்பாவைப் பாரும்மா!”பார்த்தவள் சிரிக்க முயன்றாள்.“என்ன வெண்ணிலா... என்னம்மா பண்ணுது?” என்றாள் ராஜேஸ்வரி.அம்மாவைப் பார்த்ததும் அழுகை கொப்புளித்து வந்தது. புரிந்துக்கொண்டவராய் நீலமேகம் அவள் தலையை தடவிக் கொடுத்தார்வெண்ணிலாவை டிஸ்டர்ப் பண்ணாதே ராஜி! அவ ரெஸ்ட் எடுக்கட்டும்!” என்றவர் மகளை தாங்கிப்பிடித்தபடி அழைத்துச் சென்று கட்டிலில் படுக்க வைத்துவிட்டு மனைவியை தனியே அழைத்துச் சென்றார்.“பாரு... ராஜி! அவள் செஞ்சது தப்புதான். அதுக்காக எப்பப் பார்த்தாலும் வார்த்தைகளால் கொன்னுட்டிருக்காதே! அவள் கண்ணீருக்குக் காரணம்... உன் உதாசீனம்தான். இந்த மாதிரியான நேரத்திலேதான் தாயோட அன்பும், அனுசரனையும் தேவை!உன்னைப் பார்த்து பிரதீபனும் இந்துமதியும் கூட அவளை உதாசீனம் பண்றாங்க!”“என்னங்க பண்ணமுடியும்? அவள் பண்ணிட்டுவந்த காரியம் அப்படி! நல்ல வழியிலே, கழுத்திலே தாலியோட அந்த கருவை சுமந்திருந்தா... அவளை நான் உள்ளங்கையிலே வச்சு தாங்குவேன்! இப்படி... எந்த ஆதாரமும் இல்லாம சுமந்திட்டு வந்திருக்காளே... எப்படி என்னை நான் சமாதானம் பண்ணிக்க முடியும்? பயமும், வெட்கமும் இல்லாம வளர்கிற பொண்ணுகளுக்கு நல்ல சாவு வராதுங்க!”“ச்சட் என்ன பேச்சு பேசறே? நல்ல நாளும் அதுவுமா உன் வாயால் உன் பொண்ணை சபிச்சிடாதே!”“இப்படி ஒரு அடங்காப்பிடாரியை பெத்ததுக்கு வாழ்த்தவா முடியும்? நாலு பேருக்கு தெரிஞ்சு அசிங்கப்படறதுக்குள்ளே கருவை கலைச்சிடலாம்னா... மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறாளே! இவளைவிட பெரியவள் கல்யாணம் ஆகாம இருக்காளே... அவளுக்கு ஒரு வழி பொறக்கலே... இவ வந்து அடைச்சிட்டாளே!”“எல்லாம் நல்லபடியே நடக்கும்ன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு ராஜி! யோசிச்சி. முடிவெடுப்போம்! அந்தப் பையன் பேரு என்ன சொன்னா?”“என்னமோ கார்த்திக்காம்! பெரிய பணக்கார வீட்டுப்பிள்ளையாம். எனக்கு நம்பிக்கையில்லேங்க! பணக்காரங்களுக்கும், மனசாட்சிக்கும் ரொம்ப தூரம். அந்தப் பையன் இவகிட்டே எதுக்குப் பழகினானோ அது கிடைச்சிட்டப்பிறகு, மறுபடி வருவானா? அந்த வண்டு வேறப் பூவைத் தேடிப்போயிருக்கும்! இதோப்பாருங்க. இதெல்லாம் நடக்காதக் காரியம். உங்கப் பொண்ணுக்கிட்டே நீங்கதான் பக்குவமா பேசணும். நாளாயிடுச்சின்னா ஒண்ணும் பண்ணமுடியாது. இந்த மயக்கம்கூட மசக்கையால வந்ததுதான்! இவள்ஒருத்தியோட பிடிவாதத்துக்காக என் மத்த குழந்தைங்களோட வாழ்க்கையை பலிகொடுக்க நான் தயாராயில்லே... சொல்லிட்டேன்!” பிடிவாதமாய், உறுதியாய் சொன்னாள் ராஜேஸ்வரி.நீலமேகம் கனத்த பெருமூச்சொன்றை வெளியிட்டார்.அதேநேரம்... காலிங்பெல் அலறியது.கல்லூரிக்கு கிளம்ப தயாராகிக்கொண்டிருந்த பிரதீபன் வாசலுக்குப் போக... கைநீட்டித் தடுத்த நீலமேகம் தானேச் சென்று கதவைத் திறந்தார்.ஒரு இளைஞன் நின்றிருந்தான்
Available since: 01/13/2024.
Print length: 65 pages.

Other books that might interest you

  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Show book
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Show book
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Show book
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Show book
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Show book
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Show book