Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
மேகமாய் வந்து போகிறேன் - cover

மேகமாய் வந்து போகிறேன்

ஆர்.மகேஸ்வரி

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

சாப்பிட்டு முடித்து... தயாளன் சென்னைக்குப் புறப்பட்டுப் போனதும் சுப்ரியா மனம் கலங்கினாள்.“நீ ஒழுங்காய் இருந்திருந்தால்... நானும் ஒழுங்காய் இருப்பேனே டாடி! இப்படி வீடு வீடா என்னை விட்டு... எதை மாத்தப்போறே?”இந்த சின்ன வீட்டிற்குள் எவ்வளவு நேரம் தான் இருப்பது? போரடித்தது அவளுக்கு!மூன்று பெட்ரூம், ஒரு ஹால், பூஜையறை, கிச்சன், பாத்ரூம் வகையறாவுடன் மொட்டை மாடி! அவ்வளவதான்! இந்த வீட்டின் மொத்தமும், சென்னையில் உள்ள அவள் வீட்டின் ஹாலில் அடங்கி விடும்.அவளுக்கென்று ரோமா தன் அறையை ஒதுக்கித் தந்திருந்தாள்.சுப்ரியா முகம் சுளித்தாள்.“இதுவா... இதிலேயா நான் தங்கணும்? எங்க வீட்டு பாத்ரூம் அளவுக்குதான் இருக்கு?”ரோமா சங்கடமாய் நெளிந்தாள்.“எனக்கு இது அதிகம். ஆனா, உனக்கு பத்தாது தான்!”“பக்கத்து ரூம் கொஞ்சம் பெரிசாயிருக்கே? அங்கே ஷிப்ட் பண்ணு!”“அ... அது... எங்க ஆதி அண்ணாவோடது சுப்ரியா.”“இருக்கட்டுமே... ஸோ வாட்?”“அ... அண்ணனுக்கு தான் வச்சப் பொருள் வச்ச இடத்துல இல்லைன்னா கோபம் வரும். ப்ளீஸ்... அட்ஜஸ்ட் பண்ணிக்க.”“ஏஸியெல்லாம் இல்லையா? அட சீலிங் ஃபேன் கூட இல்லாம எப்படி உயிர் வாழறே ரோமா?”அவளின் பேச்சில் தொனித்த ஏளனமும், கிண்டலும் அவர்களின் வசதியின்மையை சுட்டிக்காட்டுவதை நன்றாகவே உணர்ந்தாலும் ரோமாவிற்கு அவள் மீது கோபமே வரவில்லை.“இது உங்க ஊரு மாதிரி ஹாட் இல்லை சுப்ரியா! வெலிங்டன். ஃப்ரிட்ஜ்ல வச்சிருக்கிற ஊரு. அதோ டேபிள் ஃபேன் இருக்கு. ஆனா, ஈவினிங்ல இந்த ஜன்னலை மூட மறந்துட்டியோ... பனிப்புகை உள்ளே நுழைஞ்சு உன்னை உறைய வச்சிடும். பி கேர்ஃபுல்!”.“ரியல்லி? ஜன்னல் வழியா பனிப்புகை உள்ளேயே வந்துடுமா? சில்லுன்னு இருக்குமா? என்னை அப்படியே... கவர் பண்ணிக்குமா? த்ரில்ங்கா இல்லே?” விழிகள் விரிய ஆர்வமாய் கேட்ட போது...ரோமாவிற்கு சிரிப்புதான் வந்தது.“ஏன் சிரிக்கிறே?”“ரொம்ப சாதாரண விஷயம் தான் இது? ஆனா அதைக் கூட தெரிஞ்சுக்காம... இத்தனை வருஷமா சென்னையிலே மாசுப்பட்ட புகையிலேயே வாழ்ந்திருக்கியே...”“‘வாட்... டு... டூ? இப்படியொரு அத்தை இருக்காங்கன்றதே எனக்கு இப்ப தானே தெரியும்?”“சென்னையை தவிர எங்கேயும் போனதில்லையா?”“பாண்டிச்சேரி, மகாபலிபுரம் தவிர, ரெண்டு முறை கனடாவுக்கும், சிங்கப்பூர், மலேஷியாவுக்கும் ஃப்ரண்ஸோட ஜாலி டூர் போயிருக்கேன். தட்ஸால்!”பேசிக்கொண்டே தன் லெதர் பேக்கிலிருந்து ஷாம்பூ, ஸ்ப்ரே, மாய்ச்ரைஸர் போன்ற பொருட்களை எடுத்து டேபிள் மீது வைத்தாள்.ரோமா பெட் கவரை மாற்றிக் கொண்டே அவளை ரசித்தாள்.மூங்கில் போன்ற தேகம். பள பள சருமம். மாசு மருவில்லாத முகம். உறுத்தாத நிறத்தில் லிப்ஸ்டிக். ஒரே சீராக வெட்டப்பட்ட தோள் தாண்டி புரண்ட கூந்தலுக்கு... அங்கங்கே விட்டு விட்டு தங்க நிறம் பூசியிருந்தாள். முழங்கால் வரை கவ்விப் பிடித்திருந்த பேண்ட்... அவளின் வழுவழுப்பபான கால்களை காட்டியது. டைட்பனியன் அவளின் அளவான அளவை சொல்லியது. மொத்தத்தில் சுப்ரியா அதிரடியான நாகரீகப் பட்டாசு.“உங்கண்ணே எங்கே?”“பெங்களூரில் வொர்க் பண்றார்!”“ஓஹோ... எங்கே... அவரோட போட்டோவையேக் காணோம்”“அதோ... ஹால்ல மாட்டியிருக்கே?”“அதுவா... ஏய்... அது பாரதியார் இல்லே?”“போச்சு... எங்கண்ணன்தான் அது! பாரதியார்னா ரொம்பப்பிடிக்கும். அதனால் அவரை மாதிரி வேஷம் போட்டு போட்டோ எடுத்துக்கிட்டாரு!”அருகில் சென்று உற்றுப் பார்த்தவளுக்கு வித்தியாசம் புரிந்தது.
Available since: 01/13/2024.
Print length: 68 pages.

Other books that might interest you

  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Show book
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Show book
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Show book
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Show book
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Show book
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Show book