Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
காதல் தென்றல் வீசுமா? - cover

காதல் தென்றல் வீசுமா?

ஆர்.மகேஸ்வரி

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

அம்மா... நான் கோவிலுக்குப் போய்ட்டு வர்றேன்... அப்பா... வர்றேன்ப்பா!”“போய் வாம்மா!” பட்டாபிராமன் மகளை வழியனுப்பி வைத்துவிட்டு சேரில் வந்தமர்ந்தார். கூந்தல் இடை தாண்டி சதிராட நடந்து சென்ற மகளையே பெருமையுடன் பார்த்தார். கூடத்தில் அமர்ந்தபடி தெருக்கோடி வரை பார்க்கலாம். அப்படியொரு காற்றோட்டமான பெரிய வீடு!‘சித்ரா... எப்படி வளர்ந்துவிட்டாள்? செண்பகம் நேற்றுதான் பிரசவித்ததுப் போலிருந்தது. அதற்குள் என் மகளுக்கு பதினெட்டு வயதாகிவிட்டதா? என் செல்ல மகளை நல்ல வசதியான இடமாய் பார்த்து கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும். இப்பவிருந்தே வரன் பார்க்க ஆரம்பித்துவிடவேண்டும்’பட்டாபிராமன் அந்த ஊரின் பெரிய மனிதர்களில் ஒருவர். அந்த காயல்பட்டணத்தில் ஏழெட்டு வீடுகள், நிலபுலன்கள் இருந்தது. வசதிக்கு குறைச்சலில்லை. விவசாயம்தான் அவரது தொழில்.சித்ரா நன்றாகப் படிக்க கூடியவள். பள்ளியில் எல்லாப் பாடத்திலும் அவள்தான் முதலாவதாய் வருவாள். +2 வரை படித்தவள் மேற்கொண்டு படிக்க ஆசைப்பட்டாள். சுற்று வட்டாரத்தில் எந்த கல்லூரியும் இல்லை. வெளியூரில் ஹாஸ்டலில் தங்கியிருந்துதான் படித்தாகவேண்டும். மூன்று வருடம் மகளை பிரிந்திருக்க இரண்டு பேருமே சம்மதிக்கவில்லை. வேறு வழியின்றி சித்ராவும் அடம்பிடிக்காமல் பெற்றோரின் அன்புக்கு அடிபணிந்து அவர்களையே சுற்றி சுற்றி வந்தாள்.செண்பகம் காபியுடன் கணவரின் அருகில் வந்தாள்.“இந்தாங்க...”பட்டாபிராமன் காபி டம்ளரை வாங்கிக் கொண்டார்இந்த சித்ரா... நான் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் கேக்கவே மாட்டேங்கிறா... காலையிலே எந்திரிச்சி... வாசல் தெளிச்சு, கோலம் போடறா! அதானே! இதே டயலாக்கை தினசரி நீயும்தான் சளைக்காம சொல்றே! அவளும் சளைக்காம கோலம் போடத்தான் செய்யறா! அதைதானே சொல்ல வர்றே?”“ம்...”“செய்துட்டுப் போகட்டுமே செண்பகம்! அதையேன் தடுக்கறே? இன்னொரு வீட்டுக்கு வாழப்போகிறப் பொண்ணு... எல்லா வேலையும் செய்ய பழகிட்டாதான் நல்லது. அவளுக்கு சமைக்கவும் கத்துக்கொடுக்க ஆரம்பி!”“என்னங்க சொல்றீங்க நீங்க? நம்ம சித்ரா சமைக்கறதா? இதோப் பாருங்க... அவ வாழப்போகிற இடத்திலேயும் மகாராணி மாதிரி வாழணும். அவ சிட்டிகை போட்டா ஏழெட்டு வேலைக்காரங்க வந்து கை கட்டி நிக்கணும். அப்பேர்ப்பட்ட இடத்திலேதான் என் பொண்ணை கட்டிக்கொடுக்கணும்!”“அதுசரி...” என்று கூறிவிட்டு வாய்விட்டு பலமாக சிரித்தார்.“நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி சிரிக்கறீங்க?” முகம் சுருங்கிப் போயிற்று செண்பகத்திற்கு.“கோவிச்சுக்காதே செண்பகம். ஊருக்கே ராணியானாலும் ஒரு பொண்ணுங்கறவ புருஷனுக்கு பொண்டாட்டிதானே? பொண்டாட்டி கையால சமைச்சி சாப்பிடதானே ஒவ்வொரு புருஷனும் ஆசைப்படுவான்? நம்ம வசதிக்கு சமைக்கறதுக்கு தனி ஆளேப் போட்டுக்கலாம். ஏன் போட்டுக்கலே? அதிலே எனக்கும் விருப்பமில்லே. உனக்கும் விருப்பமில்லே. இதெல்லாம் ஒரு தனி சுகம் செண்பகம். எல்லா ஆம்பிளைகளும் பொண்டாட்டிகிட்டே படுக்கை விஷயத்துக்கு அடுத்து எதிர்பார்க்கறது சமையல்ல கெட்டிக்காரியா இருக்காளான்னுதான் நீ என்னடான்னா சித்ராவை அலுங்காம, நலுங்காம ஒரு பொம்மை மாதிரி அனுப்பி வைக்கலாம்னு பார்க்கறியா? நமக்கு ஒரு பிள்ளை இருந்து... இப்படி ஒரு பொம்மையா மருமகள் வந்தா... நீ அனுசரிச்சு நடந்துப்பியா?”“.....என்ன பேச்சைக்காணோம்? ஆசைகள், எதிர்பார்ப்புகள் ஆயிரம் இருக்கலாம். ஆனா, யதார்த்த வாழ்க்கை என்று வரும்போது... அத்தனையும் அடிபட்டுப்போயிடும். சித்ராவுக்கு சமைக்க சொல்லிக்கொடு? அந்த காலத்துல முறத்தால புலியை விரட்டினாளாம். வீரத்தமிழச்சி! நம்மப் பொண்ணுக்கு புளியையாவது கரைச்சு குழம்பு வைக்கற வீரமாவது வரட்டும்!”செண்பகம் கவலையுடன் அவர் குடித்துவிட்டுத் தந்த காபி தம்ளரை வாங்கிக்கொண்டு சென்றாள்.‘இப்பவே இப்படின்னா... பொண்ணுக்கும், புருஷனுக்கும் ஊடல் வந்து பொண்ணை கைநீட்டி இரண்டு அடி அடிச்சதை கேள்விப்பட்டா அப்பவே உயிரை விட்ருவாப்போலிருக்கே! ஹூம்... இவளை சமாளிக்கறதே பெரிய விஷயமாயிருக்கும் போல...’ சந்தோஷமும், கவலையுமாய் அங்கலாய்த்தார் பட்டாபிராமன்.குளித்துவிட்டு இடுப்பில் டவலோடு கண்ணாடி முன் நின்றான் கதிரேசன்.கருத்த தேகம். திண்ணென்று புடைத்த தோள்கள். சுருள்முடி. களையான முகம்.‘என்ன குறை எனக்கு? சித்ராவிற்கு என்னை ஏன் பிடிக்கவில்லை? இந்த ஊரிலேயே எத்தனை வயசுப் பெண்கள் நான் அவர்களை நிமிர்ந்து ஒரு பார்வை பார்க்கமாட்டேனா என்று ஏங்குகிறார்கள்? அவர்கள் கண்களுக்கு மன்மதனாய் தெரிகிற நான் சித்ராவின் கண்களுக்கு மட்டும் குரங்காய் தெரிகிறேனா? ஏன் சித்ரா என் மனதைப் புரிந்துகொள்ள மறுக்கிறாய்? நான் உன்மேல் உயிரையே வைத்திருக்கிறேன் தெரியுமா?’
Available since: 01/13/2024.
Print length: 56 pages.

Other books that might interest you

  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Show book
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Show book
  • Kaadhugal - cover

    Kaadhugal

    M V Venkatram

    • 0
    • 0
    • 0
    இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை.
    Show book
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Show book
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Show book
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Show book