தென்றலே என்னைத் தொடு!
ஆர்.சுமதி
Publisher: Pocket Books
Summary
“மாமா...”புத்தகப் பையை முதுகில் மாட்டிக் கொண்டு வந்த ஜான்சியை நோக்கி ஓடினான் அசோக்.“ஜானுக்குட்டி...” என அவளைத் தூக்கிக் கொண்டான்.ஒரு கையில் அவளையும் இன்னொரு கையில் அவளுடைய ஸ்கூல் பேகையும் தாங்கியபடி தன்னுடைய பைக்கை நோக்கி நடந்தான்.“மாமா... இன்னைக்கு எங்களுக்குப் புது மிஸ் வந்தாங்க தெரியுமா?” - என அசோக்கின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் ஜான்சி.“அப்படியா! வெரி குட் நல்லாப் பாடம் நடத்தினாங்களா?”“பாடமா?” - என்றவள் கலகலவெனச் சிரித்தாள்.“ஏன்... பாடம் நல்லா நடத்தலையா?”“நாங்க இன்னைக்கு மிஸ்கிட்ட படிக்க மாட்டோம், எழுத மாட்டோம்னு சொல்லிட்டோம்.”“ஐய்யோ... அப்ப உங்களையெல்லாம் சரியான மக்குப் பசங்கன்னு நினைக்க மாட்டாங்களா?”“இல்லையே! இன்னைக்குப் பூரா எங்க கூட மிஸ் பாட்டு, டான்ஸுன்னு ஒரே ஜாலியா இருந்தாங்க.”“அப்படியா!. வந்தவுடனே ஸ்கேலைக் கையில் எடுக்காம இப்படி ஜாலியா இருந்திருக்காங்களே! அப்ப உண்மையிலேயே நல்ல மிஸ்தான்!” என்றபடி அவளைப் பைக்கில் உட்கார வைத்துத் தானும் அமர்ந்து இயக்கியபோது...“மாமா... எங்க மிஸ் பேர் என்னன்னு உனக்குத் தெரியுமா?”அவங்களுக்குப் பேர் வைக்கிற விழாவுக்கு என்னைக் கூப்பிட்டிருந்தா ஒருவேளை தெரிஞ்சிருக்கும். என்னை அவங்க கூப்பிடலையே?”“போ... மாமா!” - அவள் சிணுங்கிய அதே நிமிடம்... ஒரு சில ஆசிரியைகளுடன் சந்திரபிரபா வந்து கொண்டிருந்தாள்.“மாமா.. மாமா... அங்க பார். அதுதான் எங்க மிஸ்...”கைநீட்டிய திசையில் பார்த்தான் அசோக்.“அங்கே மூணு டீச்சர் வர்றாங்க. அதுல யாரு உன் புது டீச்சர்?”“அதோ நடுவுல சிவப்பா உயரமா ரொம்ப அழகா இருக்காங்களே... அவங்கதான்.”அதற்குள் அவர்கள் நெருங்கி விட்டனர்.நடுவில் வந்தவளைப் பார்த்தான். நட்சத்திரக் கூட்டங்களுக்கு மத்தியில் வந்த நிலவைப் போல்...மலர்ந்த முகம். கவர்ந்த அழகு. எடுக்க முடியாமல் போனது பார்வை.தொடுக்க முடியாமல் உதிர்ந்த பூக்களாக உணர்வுகள்.வாகனத்தை இயக்க முனைந்தவன் இயக்க முடியாமல் மயக்கமுற்றதைப் போல் ஒரு நிலை...!தயக்கமாக இழுக்க வேண்டியிருந்தது புத்தியை.“மாமா... எங்க மிஸ் எப்படி?”“ம்...”உள்ளுக்குள் எதுவோ நிகழ்ந்த நிலையில் அவன் உயிர் இல்லாத உடல் வாகனத்தை இயக்கும் அதிசயத்தை செய்து கொண்டிருந்தான்.பள்ளி வளாகத்தைக் கடந்தபின் சாலையில் பரவியபோது கேட்டான்.“ஜானு...”“என்ன மாமா?”“உங்க மிஸ் பேர் என்ன?”அசோக் அப்படிக் கேட்டதும் ஜான்சி கலகலவெனச் சிரித்தாள்
