புதிராக ஒரு பூ!
ஆர்.சுமதி
Editora: Pocket Books
Sinopse
யுவராணியின் கையிலிருந்த தொலைபேசி கிடுகிடு வென ஆடியது.மெல்ல நழுவியது.அவள் உடலும் மெல்ல சோபாவில் அமர்ந்தது.‘சாந்தகுமார் கொலை செய்யப்பட்டானா? கடவுளே...’ கொஞ்சைப் பிடித்துக் கொண்டாள்.இன்னும் காதில் அந்த இன்ஸ்பெக்டர் சொன்ன அந்த வாசகங்களே திரும்பத் திரும்ப ஒலித்தன.கைகால்கள் நடுநடுங்க என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறினாள்.நம்ப முடியாத அந்தச் செய்தி அவளைத் தலைகீழாகப் புரட்டிப்போட, சாந்தகுமாரின் முகத்தை உடனே பார்த்து விடத் துடித்தது இதயம்.அவசரமாக வாசலுக்கு ஓடினாள்.போர்டிகோவில் நின்றிருந்த காரை எடுத்துக் கொண்டு அந்த இன்ஸ்பெக்டர் சொன்ன இடத்திற்கு விரைந்தாள். கடற்கரையை ஒட்டிய ஆள் நடமாட்டமில்லாத பகுதி அது. சவுக்குக் காட்டின் தொடக்கத்தில் அந்த விடிந்தும் விடியாத பொழுதிலும் சிறு கூட்டம் இருந்தது. போலீஸ் ஜீப் தெரிந்தது.சாலையை ஓட்டிப் பிரிந்த மணற் பாதையில் தெரிந்தது சாந்தகுமாரின் கார்.தன் காரை நிறுத்தி இறங்கிய யுவராணியை நோக்கி வந்தார் இன்ஸ்பெக்டர் சத்யம்.எதையோ பேச வாயெடுத்தவர், எதுவுமே பேசாமல் சாந்தகுமாரின் காரைக் காட்டினார்.யுவராணி காருக்கருகே ஓடினாள்.பின் இருக்கையில் பிணமாகக் கிடந்தான் சாந்தகுமார்பார்த்ததுமே அலறினாள் யுவராணி. வாலிலேயே அடித்துக் கொண்டு அழுதாள்.கூட்டம் வேடிக்கை பார்த்தது.ஃபோட்டோகிராபரும் கைரேகை நிபுணரும் அவர்களுடைய பணியைத் தொடங்க, இன்ஸ்பெக்டர் சத்யம் போஸ்ட்மார்ட்டத்திற்கு பாடியைக் கொண்டு போக உத்தரவிட்டார்.அழுது கொண்டிருந்த யுவராணியை நெருங்கினார்.‘மேடம்... உங்ககிட்ட சில கேள்விகள் கேட்கணும். நீங்க உங்களைக் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டா...”“கேளுங்க சார்!” கண்ணீரை துடைத்துக் கொண்டு அவரை ஏறிட்டாள்.“உங்க கணவரைக் கயிறால கழுத்தை நெரிச்சுக் கொலை செய்து அவரோட கார்லயே கொண்டு வந்து இங்க போட்டுட்டுப் போயிருக்காங்க. கொலை செய்தவனோ... இல்லை, அவனோட ஆளோதான் காரை ஒட்டிக்கிட்டு வந்திருக்கானுங்க. உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கா?”யுவராணி உதடு பிதுக்கினாள்.“தெரியலை சார். யார் இப்படிப் பண்ணினாங்கன்னு எனக்குத் தெரியலை.”“உங்க கணவர் ஒரு தொழிலதிபர். தொழில் முறையில போட்டியாளர்கள் இருக்க வாய்ப்பிருக்கு. அப்படி யாராவது...”“தெரியலை சார். நான் அவரோட கம்பெனி விஷயத்துல எதிலேயும் ஈடுபடறதில்லை. கம்பெனி விவகாரங்களையும் அவர் இதுவரை வீட்ல பேசினதில்லை. அவர் பேசாதத்துக்குக் காரணம் நான் எப்பவுமே கம்பெனி விஷயங்களை இன்ட்ரஸ்ட்டா கேட்கறதில்லை. அதனால எனக்கு அவரோட தொழில் ரீதியான எந்தப் பிரச்னையும் தெரியாது.”“ஐ...ஸீ... நேத்து அவர் எப்போ வீட்டைவிட்டுக் கிளம் பினார்?”“வழக்கம் போல ஒன்பது மணிக்கு.”“கம்பெனிக்குத்தானே போனார்.”“ஆமா!”“வேற எங்காவது போறதா சொன்னாரா?”“வந்து... ஆமா சார். மதியம் வீட்டுக்குச் சாப்பிட வர மாட்டேன்னு சொன்னார். யாரோ சாப்பிடக் கூப்பிட்டிருக்கறதா சொன்னார். யாருன்னு கேட்டப்ப அவரும் ஒரு தொழிலதிபர் தான்னு சொன்னார்.”“பேர் சொன்னாரா?”“நான் கேட்டிருந்தா சொல்லியிருப்பார். நான் கேட்கலை.”“அதுக்குப் பிறகு அவர் வீட்டுக்கு வரவே இல்லையா?”“ வரலை. ஒரு போன் கூட அவர்கிட்டேயிருந்து வரலை கம்பெனி விஷயமா சில நாள் ராத்திரி வர மாட்டார். அது மாதிரி வரலைன்னு நினைச்சேன். கடைசியில... இப்படி...” அழத் தொடங்கினாள்.போட்டோகிராபர், கைரேகை நிபுணர்களின் வேலை முடிந்ததும், போஸ்ட்மார்ட்டத்திற்குத் தயாரானான் சாந்தகுமார்
