Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
மலருக்குத் தென்றல் பகையானால் - cover

மலருக்குத் தென்றல் பகையானால்

ஆர்.சுமதி

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

சுதாகரும், குமாரும் ஒருவர்மேல் ஒருவர் கையைப் போட்டுக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தனர். அந்தப் பிணைப்பை பாசம் என்று கூறமுடியாது. தூக்கத்தில் ஒருவரை ஒருவர் தலையணை எனத் தவறாக நினைத்துக்கொண்டதுதான்.அவர்கள் படுத்திருந்த கோலத்தைப் பார்க்க முழுமதிக்குச் சிரிப்பு வந்தது. சிறுவர்களைப் போல் உறங்கும் அவர்களைத் தட்டி எழுப்பினாள்.“சுதாகர்... எழுந்திரு... எழுந்திரு. குமார்... ஏய்...”இருவரையும் உலுக்க இருவரும் எழுந்தனர்.கண்மலர்ந்த அவர்கள், ஏதோ புது உலகத்திற்கு வந்ததைப் போல் திருதிருவென விழித்தனர்.சுதாகர், அவசரமாக லுங்கியைச் சரிசெய்து கொண்டு எழுந்தான்.“மணி என்ன?”“ஆறரை.”“இன்னைக்கு இன்டர்வியூவுக்குப் போகணும். சீக்கிரம் எழுப்புன்னு ராத்திரியே சொல்லிட்டுத்தானே படுத்தேன்.”“மறந்துட்டேன்” - முழுமதி மன்னிப்புக் கேட்டாள்.“ஆமா. உனக்கென்ன? பொழுது விடிஞ்சதுமேவா இன்டர்வியூ நடத்தறாங்க” - கேட்ட தம்பியை முறைத்தான்.“பொழுது விடிஞ்சதுமே திமிர் பேச்சு பேசாதே. நான் சில விஷயங்களை தயார் பண்ணனும்.”“ஆமா! அப்படியே தயார் பண்ணிக்கிட்டு போய் எல்லாக் கேள்விக்கும் டாண் டாண்னு பதில் சொல்லி வேலையை வாங்கிட்டு வந்திடுவே பாரு...பெரிதாகச் சிரித்தான், குமார்.“அடுத்தவங்களைக் கிண்டல் பண்ணுவதை விட்டுட்டு ஆகவேண்டியதைக் கவனி. கல்லூரியில் ஆறு, ஏழு பாடங்களை ‘பாஸ்’ ஆகாமல் வைச்சுக்கிட்டு பேச்சைப் பாரு” எரிச்சலாகத் திட்டிவிட்டு வெளியே சென்றான், சுதாகர்.“என்ன கூழ் வைச்சிட்டியா?” என்றான் குமார்.“வைச்சிருக்கேன். கொண்டுவரட்டா?”“இப்ப வேண்டாம். பிறகு குடிக்கிறேன்” என எழுந்தான்.முழுமதி வெளியே வந்தாள்.கனிமொழிக்குப் பால் ஆற்றிக் கொடுத்துவிட்டு சீதாவின் அறைக்கு அனுப்பினாள். முகம் கழுவிக்கொண்டு துண்டால் துடைத்தபடியே வந்த சுதாகருக்குக் காபி கொடுத்தாள்.“இதென்ன... காபியில் சர்க்கரையே இல்லை...” கத்தினான் சுதாகர்.“சர்க்கரை பத்தலைன்னா ஏன்டா இப்படி கத்துறே? கொஞ்சம் இரு. போடுறேன்.”“கத்துறேனா? இந்த ஒரு தம்ளர் காபியில்தான் இன்றைய உற்சாகமே அடங்கியிருக்கு, தெரிஞ்சுக்க. காலையில் எழுந்ததும் முதன்முதலா குடிக்கிற காபியினால் உண்டாகிற உற்சாகம், திருப்திதான் பொழுது சாயிறவரை சாதிக்க வைக்கும். இப்படி சப்புன்னு ஒரு காபியைக் குடிச்சா, காலையிலேயே எல்லா வேலையுமே பாழ்தான்” சலித்துக்கொண்டான்.“அப்படின்னா இந்த ஒரு தம்ளர் காபியில்தான் உன் எதிர்காலமே அடங்கியிருக்கா?” -’க்ளுக்’கென சிரித்துவிட்டாள், முழுமதி.“எதையும் ஒழுங்கா செய்யத் தெரியலை. சிரிப்பு என்ன வேண்டிக்கிடக்கு?” சுள்ளென அவன் எரிந்து விழ, ஏனோ துடித்துப் போனாள், முழுமதி.
Available since: 02/14/2024.
Print length: 89 pages.

Other books that might interest you

  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Show book
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Show book
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Show book
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Show book
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Show book
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Show book