Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
கொளத்தூர் மணியுடன் நேர்காணல் - Kolathur Maniyudan Nerkaanal - cover
LER

கொளத்தூர் மணியுடன் நேர்காணல் - Kolathur Maniyudan Nerkaanal

Unknown Unknown

Editora: Logital Media

  • 0
  • 0
  • 0

Sinopse

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர். ஈழத்திற்குத் தனித்துப் பயணப்பட்ட போதும், ராஜ்குமாரை வீரப்பனிடமிருந்து மீட்டு வந்த சந்தர்ப்பத்திலும் தமிழக ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டவர். சமீபத்தில் சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட போது அதை வெகுவாக ஆதரித்துக் குரல் கொடுத்த அமைப்பு இவருடையது.
Disponível desde: 01/11/2018.
Comprimento de impressão: 29 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • Article 370 - Indiavin Kashmir - ஆர்ட்டிகிள் 370 - cover

    Article 370 - Indiavin Kashmir -...

    R. Radhakrishnan

    • 0
    • 0
    • 0
    மகாராஜா ஹரி சிங் எதன் அடிப்படையில் இந்தியாவுடன் காஷ்மிரை இணைக்க ஒப்புக்கொண்டார்?ஆர்ட்டிகிள் 370 என்பது என்ன?காஷ்மிருக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது?காஷ்மிருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நிரந்தரமானதா? அதைப் பின்வாங்கிக் கொள்வது காஷ்மிருக்கு இழைக்கப்படும் துரோகமா?இந்தியாவின் காஷ்மிர் தனியாக ஒரு நாடு போல் இயங்க ஆர்டிகிள் 370 அனுமதித்ததா?ஜவாஹர்லால் நேரு, ஷேக் அப்துல்லா காலம் தொடங்கி, இந்திய அரசியல் வரலாற்றில் காஷ்மிரின் சிறப்பு அந்தஸ்து குறித்து நடந்த விவாதங்கள் என்ன? 
    அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்கிறது இந்தப் புத்தகம். பல்வேறு தரவுகளுடன், தொடக்கம் முதல் இறுதி வரை எங்கும் விலகிச் செல்லாமல், இந்தப் புத்தகத்தைக் கோர்வையாக, திறம்பட எழுதி இருக்கிறார் ஆர்.ராதாகிருஷ்ணன். 
    எழுத்தாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
    Ver livro
  • Chhatrapathi Shivaji - cover

    Chhatrapathi Shivaji

    Ananthasairam Rangarajan

    • 0
    • 0
    • 0
    சத்ரபதி சிவாஜி - மாபெரும் மொகலாய சாம்ராஜ்யத்தைத் துணிந்து எதிர்த்து நின்றவர். அராஜகப் போக்குடன் ஆட்சி செய்து அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய ஔரங்கசீப்பை, நியாயமான வழியில் எதிர்கொண்டு மிரள வைத்த ஒரே இந்திய வீரர். சிவாஜியின் வாழ்க்கை பல சாகசங்கள் நிறைந்தது. ஐம்பது வயது வரை மட்டுமே வாழ்ந்த இந்த மாவீரனின் வாழ்க்கையைச் சுவாரஸ்யமாகச் சொல்லிச் செல்கிறார் அனந்தசாய்ராம் ரங்கராஜன். ஒட்டுமொத்த பாரத தேசத்தின் புனிதத்தையும், அதன் நெடிய பாரம்பரியத்தையும் காத்து, இன்றைய இந்தியாவின் சமூக, கலாசார, ஆன்மிக, அரசியல் போக்குகளைத் தீர்மானித்த ஓர் உண்மைத் தலைவனின் உன்னத வரலாறே இந்தப் புத்தகம். சிவாஜி பற்றிய ஆதாரமற்ற மிதமிஞ்சிய புகழுரைகளைத் தவிர்த்துவிட்டு, தரவுகளுடன் எளிய தமிழில் இந்த நூல் எழுதப்பட்டிருப்பது இதன் சிறப்பு. 
    எழுத்தாளர் அனந்தசாய்ராம் ரங்கராஜன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Ver livro
  • ஏலியன் மாமா - Alien Mama - cover

    ஏலியன் மாமா - Alien Mama

    Kavani

    • 0
    • 0
    • 0
    வீட்டை விட்டு ஓடிப் போய் காதல் திருமணம் செய்து கொண்ட வந்தனா; பல வருடங்களுக்குப் பிறகு, கிராமத்திலிருந்து அவளை பார்க்க வரும் அவளது அண்ணன்; டெக்னாலஜி பற்றி ஒன்றுமே தெரியாத தனது மாமாவை ஓர் ஏலியனைப் போல் பாவிக்கும் வந்தனாவின் குழந்தைகள்; மாமாவிற்கும் குழந்தைகளுக்கும் ஏற்படும் நகைச்சுவையான உரையாடல்களும், மாமாவுடன் அவரது ஊருக்குச் செல்லும் குழந்தைகளின் புத்துணர்ச்சி அளிக்கும் சேட்டைகளும் சுவாரசியம். மாமாவால் குழந்தைகளின் சேட்டைகளை சமாளிக்க முடிந்ததா? வந்தனாவை அவளது பெற்றோர் மன்னித்தார்களா? குழந்தைகள் மாமாவை புரிந்து கொண்டார்களா? இறுதியில் அனைவரும் ஒன்றாய் இணைந்தார்களா என்பதெல்லாம் மீதிக் கதை!!! 
    - ஆசிரியர் - கவானி
    Ver livro
  • Iravaan - cover

    Iravaan

    Pa Raghavan

    • 0
    • 0
    • 0
    "இது சாத்தானால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு கடவுளின் கதை.
    நாம் சொற்களில் வாழ்கிறோம். இந்நாவலின் நாயகன் இசையில் வாழ்கிறான். நாம் சமூக விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்குகிறோம். அவன் வாழ்க்கை பிரபஞ்ச விதி எதற்குள்ளும் பொருந்தாமல் புடைத்து நிற்கிறது. அதனாலேயே அது வண்ணங்களோ வாசனையோ இல்லாத ஒன்றாகிறது. காலத்தை வெல்வதற்கு அவனுக்குள்ள வேட்கையும் அவனைத் தோற்கடிக்க விதி மேற்கொள்ளும் வேட்டையும் முட்டி மோதும் கணங்களில் புவி நின்று சுழல்கிறது. அவன் நம்பும் கலையும் அவன் வாழும் உலகும் தயங்காமல் அவனைக் கைவிடும் போதும், அவன் தான் வாழும் உலகுக்குத் தன் இசையையும், தான் நம்பும் இசைக்குத் தன்னையும் ஆகுதியாக்கி அர்ப்பணிக்கிறான். ஒரு மகா கலைஞனின் வாழ்க்கை இவ்வாறாக அல்லாமல் வேறு எந்த விதமாகவும் உருக்கொள்ள முடியாது.
    பா. ராகவனின் 'இறவான்', மிக நுணுக்கமான, கூரான மொழியில் எழுதப்பட்டிருக்கும் தனித்துவமான நாவல். ஒரு கலைஞனின் ஆழ்மனக் கொந்தளிப்புகளை, அவனது புற உலகச் செயல்பாடுகளினூடாக, அது நிகழும் கணத்திலேயே காட்சிப்படுத்த இதில் கையாளப்பட்டிருக்கும் எழுத்து முறை தமிழுக்குப் புதிது."
    Ver livro
  • UVeSaminathayyarin Vaazkkai Varalaau - உவேசாமிநாதய்யரின் வாழ்க்கை வரலாறு - cover

    UVeSaminathayyarin Vaazkkai...

    Saidhai Murali

    • 0
    • 0
    • 0
    நம் தமிழுக்குத் தொண்டாற்றியோர் பலர். அதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய முக்கியமான மனிதர் ‘தமிழ்த் தாத்தா’ என்று அன்புடன் அழைக்கப்படும் உ.வே.சாமிநாதய்யர். 
    தமிழ் மொழியின் சொத்துகளான பல அரிய காப்பியங்களும் புராணங்களும் ஓலைச்சுவடிகளாகப் பல இடங்களில் முறையாகத் தொகுக்கப்படாமல் சிதறிக்கிடந்தன. அவற்றையெல்லாம், தமிழ் மேல் உள்ள ஆர்வத்தினாலும், நமது இலக்கியங்கள் பரவலாக மக்களிடம் போய்ச் சேரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தினாலும் தேடிக் கண்டுபிடித்து, அவற்றை ஆராய்ந்து, தொகுத்து புத்தகமாகப் பதிப்பித்தார் உ.வே.சா. இவரது தன்னலமில்லாக் கடின உழைப்பினால்தான் பல காப்பியங்கள், பல அரிய நூல்கள் இன்று நம்மிடையே உள்ளன. இல்லையென்றால் இவையெல்லாம் என்றோ அழிந்து போயிருக்கும். 
    ஒவ்வொரு தமிழனும் மறக்கக் கூடாத மனிதர் உ.வே.சா. அப்படிப்பட்ட பேரறிஞரின் வாழ்க்கையையும், அவரது வாழ்வில் நடந்த பல சுவையான சம்பவங்களையும், தமிழ்ச் சேவைக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் நேர்த்தியாகச் சொல்கிறது இந்தப் புத்தகம். 
    எழுத்தாளர் சைதை முரளி எழுதி சுவாசம் பதிப்பகம்  வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். 
    Ver livro
  • 1975 - Emergency - Nerukkadi nilai Prakadanam - 1975 - எமர்ஜென்ஸி - நெருக்கடி நிலைப் பிரகடனம் - cover

    1975 - Emergency - Nerukkadi...

    R. Radhakrishnan

    • 0
    • 0
    • 0
    இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு 48 ஆண்டுகளாகிவிட்டன. இன்று ஜனநாயகம், சர்வாதிகாரம், பாசிசம் போன்ற சொற்கள் அர்த்தம் புரியாமலேயே அன்றாடம் புழங்கும் சொற்களாகிவிட்டன. ஆனால் இம்மூன்றின் உண்மையான பரிமாணத்தையும் ஒரே சமயத்தில் மக்கள் உணர்ந்த தருணம் அது. நெருக்கடி நிலை அறிவிப்புக்கு முன்னும் அதுபோன்ற நாள் வந்ததில்லை. அதற்குப் பின்னும் வரவில்லை. வரப்போவதுமில்லை. இந்திராகாந்தியின் எழுச்சி, வீழ்ச்சி, மீண்டும் அவரது எழுச்சி என்ற மூன்று பிரிவுகளில் நெருக்கடி நிலை அடங்குகிறது. எதனால் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது, அதனை அறிவிக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது, நெருக்கடி நிலையின் தாக்கங்கள் என்ன, அதனால் நாட்டின் அரசியலும் மக்களின் வாழ்வும் எத்தகைய விளைவுகளை எதிர்கொண்டன, அதன் எதிர்விளைவுகள் என்ன என இவை அனைத்தையும் விரிவான கண்ணோட்டத்தில் இப்புத்தகம் அலசுகிறது. நெருக்கடி நிலைக் காலத்தை ‘அரசுக் கொடுங்கோன்மை’ என்று விமர்சனம் செய்தவர்களும் உண்டு. ‘தறிகெட்ட சுதந்திரத்திற்குப் போடப்பட்ட கடிவாளம்’ என்று சொன்னவர்களும் உண்டு. எமர்ஜென்ஸியை முழுமையாக ஆதரிக்கவும் செய்யாமல், கண்மூடித்தனமாக எதிர்க்கவும் செய்யாமல், எந்தச் சூழ்நிலையில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது, அதற்கு முன்பாக நடந்த சம்பவங்கள் யாவை, நெருக்கடி நிலையை அறிவித்தவர்களும் அதனால் பாதிக்கப்பட்டவர்களும் என்ன செய்தனர் என வரலாற்றை உள்ளது உள்ளபடி திரும்பிப் பார்க்கும் முயற்சியே இது. 
    எழுத்தாளர் ஆர். ராதாகிருஷ்ணன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
    Ver livro