Thirumalai Thiruppalliyelucci Amalanathipiran Kanninunsiruththampu
ThontaratippotiyazhvarThiruppanazhvarMathurakaviazhvar
Narrador Ramani
Editorial: RamaniAudioBooks
Sinopsis
தொண்டரடிப்பொடியாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவருக்கு 'விப்ர நாராயணர்' என்பது இயற்பெயர் ஆகும். திருவரங்கத்திலேயே வாழ்ந்திருந்து அத்தல இறைவனாகிய அரங்கநாதனுக்கு பாமாலை மற்றும் பூமாலை சாற்றும் சேவையைத் தன் வாழ்நாள் முழுதும் சிரமேற்கொண்டு செய்து வந்தார். அவரது படைப்புகளில் திருப்பள்ளி எழுச்சி பத்து வசனங்களைக் கொண்டதாகவும், திருமாலை நாற்பது வசனங்களைக் கொண்டதாகவும் உள்ளது. அரங்கனுடைய தொண்டர்களின் அடியாகிய திருவடியின் தூசி எனும் பொருள்பட "தொண்டரடிப்பொடி" என்றும், அரங்கனின் பக்தியில் ஆழ்ந்துபோனவரை ஆழ்வார் என்று அழைப்பதற்கிணங்க தொண்டரடிப்பொடியாழ்வார் ஆனார். திருப்பாணாழ்வார் திருவரங்கத் திருவான அரங்கன் முன் சென்று அவன் வடிவழகில் மயங்கி திருமுடி முதல் திருவடி வரை பாடியவர். "என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே" என்று பாடிய படி தன் பூத உடலோடு ஆண்டாள் போல அரங்கனோடு இரண்டறக்கலந்தார். இவர் பாடிய பத்துப்பாடல்கள் "அமலனாதிபிரான்" எனும் தலைப்போடு நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இவர் அரங்கன் மீது பாடிய பத்துப் பாடல்களும் அரங்கனின் திருவடியில் தொடங்கி தலை வரை உள்ள உறுப்புக்களான, பாதம், ஆடை, உந்தி, உதரபந்தனம், மார்பு, கழுத்து, வாய், கண்கள், உடல், தலை ஆகியவற்றின் வடிவழகையும் குணவழகையும் அற்புதமாக காட்சிப்படுத்துகிறது. மதுரகவி ஆழ்வார் பெருமானைத் தன் பாசுரங்களால் பாடாமல் தன் ஆசாரியனான நம்மாழ்வாரையே சிறந்த தெய்வமாக எண்ணி அவரைப் போற்றியே பதினோரு பாசுரங்களைப் பாடியுள்ளார். ஓம் நமோ நாராயணாய என்பது திருமந்திரம். அதில் ஓம் என்பது முதல் பதம். நமோ என்பது மையப்
Duración: 31 minutos (00:31:23) Fecha de publicación: 20/03/2022; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

