Periya Thirumozhi
Thirumangaiazhvar
Narrador Ramani
Editora: RamaniAudioBooks
Sinopse
இறைவன் கோயிலில் எழுந்தருளி இருக்கும் தோற்றத்தில் (அர்ச்சாவதாரம்) ஈடுபாடு கொண்டு ஏராளமான பாசுரங்களைப் பக்திச் சுவை ததும்பப் பாடிய பெருமைக்கு உரியவர் திருமங்கை ஆழ்வார். பெருமாளின் 108 திருப்பதிகளில் தனியாக சென்று 46 கோயில்களையும், மற்ற ஆழ்வார்களுடன் சேர்ந்து 36 கோயில்களையும் என மொத்தம் 82 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார். 12 ஆழ்வார்களில் இவர்தான் அதிக பெருமாள் திருத்தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வரலாற்றில் ஒரு சிறப்பு என்னவென்றால் இவர் மொத்தம் 82 பெருமாள் கோயில்களை மங்களாசாசனம் செய்திருந்தாலும், தான் பிறந்த சொந்த ஊரான திருக்குறையலூரில் உள்ள பெருமாள் கோயிலை மங்களாசாசனம் செய்யவில்லை என்பது. பல்வேறு யாப்பு வடிவங்களைப் பக்தி இலக்கியத்திற்குப் பயன்படுத்திக் கொண்டார். நாட்டுப்புறப்பாடல் வகைகளைப் பின்பற்றி, பக்தி நெறியைப் புலப்படுத்தினார். சித்திரகவி படைத்துப் பக்தி உலகுக்கு வளம் சேர்த்தார். தாண்டகங்கள் அருளி அவற்றுள்ளும் நாயகநாயகி பாவத்தை அருளினார். அகப்பொருள் துறையைப் பயன்படுத்திக் கொண்ட ஆழ்வார் நாயகி நிலையில் இருந்து பாடியிருப்பவை பக்தியின் முதிர்கனிகள் ஆகும். மடல் துறைவழி ஓர் புதிய இலக்கிய வகையைப் படைத்த பெருமைக்கு உரியவர். பக்தி இலக்கியத்தை, பக்தி இயக்க இலக்கியம் ஆக்கி, தமிழ் வளத்துக்கும் இலக்கிய வகைப் பெருக்கத்திற்கும் வித்திட்டவர்.
Duração: aproximadamente 7 horas (07:18:13) Data de publicação: 20/03/2022; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

