¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
வாரிசு - cover

வாரிசு

தேவிபாலா

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

கான்ஃப்ரன்ஸ் அறையில் நுழைந்தார் ராஜன்.ஏற்கனவே ஞானசேகரும் - கண்ணப்பனும் காத்திருந்தார்கள்.ஒரு சில முக்கிய அதிகாரிகள் தவிர அவர்களது ஏஜெண்டுகள், பேங்கர்ஸ், ஆடிட்டர், கம்பெனி லாயர் என சகல பேரும் காத்திருந்தார்கள்.ஒரு வீடியோ காணொலிக்காக சகல நவீன ஆயத்தங்களும் செய்யப்பட்டிருந்தன.ராஜன் பிரமித்தார்.தனக்கு மட்டுமே தர வேண்டிய ஒரு விளக்கம். எதற்கு இத்தனை முன்னேற்பாடுகள்.உள்ளே நுழைந்தாள் ரேகா.கூடவே பிரபலமான மீடியா ஆட்கள் காமிரா சகிதம்.ஞானசேகர், கண்ணப்பன் டென்ஷனாகிவிட்டார்கள்.“சேர்மன் சார்! இது முழுக்க முழுக்க நம் கம்பெனியோட உள்விவகாரம். நாங்க கேட்ட சில கேள்விகளுக்கு ரேகா பதில் தரணும்னு நீங்க விரும்பினீங்க. அவகாசம் குடுத்தீங்க. எதுக்கு பிஸினஸ் ஏஜெண்டுகள், பேங்கர்ஸ், மீடியா எல்லாம்?”ராஜனுக்கும் புரியலீங்க. கேட்டே விட்டார், மகளிடம்.“அப்பா நமது உலகளாவிய வர்த்தகம். இதுல போட்டியாளர்களும் அதிகம். இதை அடுத்த கட்டத்துக்கு நாம கொண்டு போகனும்னா, உள்ளே மட்டுமே பேசி லாபமில்லை. வெளிய தெரியனும். அப்பத்தான் உலகத்தோட பார்வை நம்ம பக்கம் திரும்பும். என்னை அனுமதிங்க.”“சரிம்மா.மீடியா காமிராக்களுடன் காத்திருக்க,அறை இருட்டாக்கப்பட, திரையின் வெளிச்சம். சீனியர்கள் இதுவரை சாதித்தது, அவர்களது பல வருட அனுபவம், ஏஜெண்டுகள், ரெகுலர் சப்ளையர்ஸ் லாப நஷ்ட கணக்குகள், கம்பெனியை உயர்த்த அவர்கள் எடுத்த முடிவுகள் என சகலமும் விவாதிக்கப்பட்டது. திரையில தோன்றி சகலத்தையும் ரேகாவே சொன்னாள்.அவர்களது கேள்விகள் திரையிடப்பட்டன.ஒவ்வொரு கேள்விக்கும், ரேகா தரும் பதில்கள், அதற்கு பக்கபலமான டாக்குமென்ட்ஸ், ஆதாரங்கள், ஒப்பிட்டு பார்க்கும்போது, ரேகா அதை உடைத்து கம்பெனியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக எடுக்கும் முயற்சிகள்.இதுபோல 37 கேள்விகளுக்கும் தெளிவான பதில்-விளக்கம், முன்னேற்றம், லாபக் கணக்கு.பழைய ஒப்பந்தங்கள் பதினாறு ரத்து.பதிலாக புதிய ஒப்பந்தங்கள் இருபத்தி ஏழு உருவான விதம்.உலக மார்க்கெட்.அவர்களோடு இணைய போகும் முயற்சி.முடிச்சவுடன் விளக்கு எரிய கைதட்டல் அரங்கத்தையே அதிர வைத்தது.கண்ணப்பர் எழுந்தார்.“நாங்க பேசனும். இது ஒரு மாதிரி மீடியாவை வச்சிட்டு நடத்தற ஆடம்பர மீட்டிங். கொஞ்சம் உள்ளே போய் பார்க்கனும். விளக்கம் சொல்லணும்.”ரேகா எழுந்தாள்.“சார் யார் யாருக்கு விளக்கம் தரணும்?”“நீங்க எங்களுக்கு!”ஹலோ நீங்க ரெண்டு பேரும் கம்பெனில பார்ட்னரா, ஷேர்வோல்டறா? டைரக்டர்களா, எது? சேர்மன்கிட்ட சம்பளம் வாங்கற சீனியர் அதிகாரிகள். உழைச்ச உழைப்புக்கு தாராளமா எல்லாம் கிடைச்சிருக்கு. அதனால் முதலாளியை கேள்வி கேட்கற தகுதி இல்லை. உங்க கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனா, கம்பெனியோட நோக்கம், வளர்ச்சி, அதோட நவீன பாதையை மீடியாவுக்குத் தெரிவிக்கத்தான் இந்த கான்பரன்ஸ். உங்களுக்கு விளக்கம் தர அல்ல.”அவர்கள் ஆடிப் போக, “உங்க உழைப்பை மதிக்கிறோம். ஆனா, அதே பழைய ஸ்டைல்ல நடந்தா, பின் தங்குவோம். அதை நவீனமாக்கத்தான் பலவித மாற்றங்கள். உங்க ரெண்டு பேருக்கும் இப்ப முடிய கம்பல்சரி ரிடையர்மென்ட்! உங்க செட்டில்மென்ட் செக் ‘ரெடி’ சார்! உங்க கையாலே குடுத்து அவங்களை கௌரவமா அனுப்பி வைங்க!”ராஜனே ஆடிப் போனார்.“டு வாட் ஐ ஸே சார்!”அவள் குரலில் அதட்டலும் அதிகாரமும் இருந்தது.ஞானசேகர் எழுந்தார்.“அப்படியெல்லாம் எங்களை வெளிய அனுப்ப முடியாது”“யார் சொன்னது? லாயரை கலந்து பேசித்தான் இந்த முடிவை எடுத்தேன். நீங்க கோர்ட்டுக்கு போகலாம். சந்திக்க நான் தயாரா இருக்கேன், நீங்க பிரச்சனை பண்ணினா, உங்களுக்கு சேர வேண்டிய பணத்தைக்கூட கோர்ட்லதான் வாங்கிக்க முடியும்!”“சார் என்ன இது?”“அப்புறமா உங்களுக்கு இன்கம்டாக்ஸ் பிராபளம் வரும். அப்பாகிட்ட நீங்க எல்லாத்தையும் ஒயிட்ல வாங்கலை ப்ளாக் இருக்கு! அதுக்கெல்லாம் பதில் சொல்லணும்!”இருவரும் மிரண்டார்கள்
Disponible desde: 16/01/2024.
Longitud de impresión: 92 páginas.

Otros libros que te pueden interesar

  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Ver libro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Ver libro
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Ver libro
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Ver libro
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Ver libro
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Ver libro