துணையிருப்பாள் துர்கா!
தேவிபாலா
Editora: Pocket Books
Sinopse
மௌலி தனது அலுவலகத்தில் தனி அறையில் இருந்தார்.போனில் பேசிக்கொண்டிருந்தார்.வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்.நாளைய ஏற்பாடுகளுக்கான உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்தார்.இன்டர்காம் ஒலித்தது.“ஜோசியர் வந்திருக்கார்!”“உள்ளே அனுப்புங்க!”சில நொடிகளில் குடும்ப ஜோசியர் உள்ளே நுழைந்து வணங்கினார்!“ஒக்காருங்க ஜோசியரே! என்ன சாப்பிடறீங்க?”“எதுவும் வேண்டாம்! பொண்ணு நல்லபடியா வந்துட்டாளா?”“ம்! வந்தாச்சு! ஓய்வுல இருக்கா! இனிமே பொறுப்புகளை அவதானே சுமக்கப் போறா! சரி... சரி! ஜாதகத்தைப் பார்த்தீங்களா?”“பார்த்துட்டேன்!”“பதவி ஏற்கணும். நல்ல ஒரு மாப்பிள்ளை வரணும்! அதெல்லாம் எப்பனு உங்ககிட்ட கலந்துதானே, அடுத்த கட்டத்துக்குப் போகணும்?”ஜோசியர் கொஞ்சம் கண் மூடி உட்கார்ந்தார்.“ஜாதகம் கைல இருக்கா?”“நெஞ்சுல இருக்கு! பலமுறை பாத்துட்ட காரணமா, பதிவாயிருக்கு! கல்யாண யோகம் உங்க பொண்ணுக்கு வந்தாச்சு!”“அப்படியா?”“ஒரு மாசத்துல நடந்துடும்!”“ஆச்சர்யமா இருக்கே!”“பையனைத் தேடிப் புடிங்க! அதுகூட அவசியமில்லை. தானா வரன் வாசல்ல தேடி வரும். யோகம் வந்துட்டா, யார் தடுத்தாலும் நிக்காது!”“சரி! துர்க்கா வாழ்க்கை எப்படி இருக்கும்?”“சிக்கலான ஜாதகம். தெளிவா இல்லை! நிறைய குழப்பங்கள் அவ வாழ்க்கைல வரும்!”“வாய்ப்பே இல்லை!”“எப்படி சொல்றீங்க?”“அவ என் மகள் ஜோசியரே! கோடீஸ்வரி! பட்டுக் கம்பளத்துல நடந்த கால்கள்! அவ வாழ்க்கைல எப்படி குழப்பம் வரும்? சான்ஸே இல்லை!”ஜோசியர் சிரித்தார்.“ஏன் சிரிக்கறீங்க?”“மன்னிக்கணும்! பணம் மட்டுமே ஒரு மனுஷனோட வாழ்க்கையைத் தீர்மானிக்கறதில்லை! ஒரு நள மகாராஜா, சமையல்காரனா மாறக் காரணம் அந்த சனீஸ்வர பகவான்தானே? குரு வக்ரமாப் பார்த்தா நல்லதா? சாதகமில்லாத வீட்ல கிரகங்கள் இருந்தா பிரச்னையை தவிர்க்கமுடியுமா?”“நீங்க ஏன்ன சொல்றீங்க?”“உங்க பொண்ணுக்கு இப்ப நேரம் சரியா இல்லை! அவளோட ஜாதகம் சொல்லுது! அது தரக்கூடிய பிரச்னைகளை அவ சந்திச்சுத்தான் ஆகணும்!பரிகாரம் தேடிட்டா?”“தீவிரத்தைக் குறைக்கலாம்! அதுக்காக பிரச்னைகளையே இல்லைனு ஆக்கிட முடியாது!”“கல்யாணம் நடந்தே தீரும்னு சொல்றீங்க?”“பிரச்னையோட முதல் அத்யாயமே கல்யாணம்தான். அதுக்காக மாங்கல்ய யோகம் வந்துட்டா, தடுத்து நிறுத்த முடியுமா?மௌலி தலையாட்டினார்.“நான் வரட்டுமா?”“சரி ஜோசியரே! சந்தோஷமா இருந்தேன். பொண்ணு வந்துட்டாளேனு பூரிச்சுப் போயிருந்தேன். அத்தனையும் ஊசிபட்ட பலூன் மாதிரி ஆயிடுச்சு!”“கவலைப்படாதீங்க! உங்க துர்க்காவுக்கு எதையும் சமாளிக்கற தெம்பு உண்டு. மோசமான ஜாதகம் உள்ளவங்க கூட பலசமயம் நல்லபடியா வாழறதுண்டு. எப்படி?”“எப்படி?”“தெய்வ பலம்! அது இருக்கறவங்களை கிரகங்கள் காட்டமாத் தாக்காது! தாக்கினாலும், தாங்கிக்கற சக்தி கண்டிப்பா இருக்கும். உங்க துர்க்கா அந்த ரகம்!”மௌலி பேசவில்லை!ஜோசியர் புறப்பட்டுப் போனார்.பிறகு அலுவலக சம்பந்தமான சந்திப்புகள் நிறைய இருந்ததால், வேறு எதையும் மௌலியால் யோசிக்க முடியவில்லை!அலுவலகத்தில் ஏழு மணியாகிவிட்டது!தொலைபேசி அழைத்தது! எடுத்தார்.
